.

Pages

Wednesday, April 16, 2014

அதிரை AJ பள்ளியில் நடைபெற்ற மார்க்க அறிவுத்திறன் போட்டிகளில் ஏராளமான சிறுவர்கள் பங்கேற்பு !

நமதூர் AJ நகரில் அமைந்துள்ள AJ பள்ளி நிர்வாகதினர் மற்றும் அதிரை மகாதிப் ஆகியோர் இணைந்து நடத்திய சிறுவர்களுக்கான மார்க்க அறிவுத்திறன் போட்டிகள் இன்று மாலை பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

அப்துல் ஹாதி ஆலிம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியில் ஏராளமான சிறுவர்கள் கலந்துகொண்டு தங்களின் தனித்திறமையை நிருபித்தனர். போட்டிகளுக்கிடையே அப்துல் ஹாதி ஆலிம் நிகழ்த்திய மார்க்க சொற்பொழிவும் நடைபெற்றது. போட்டியின் இறுதியில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

பள்ளி நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ஆலிம் பெருமக்கள், பள்ளி நிர்வாகத்தினர், அதிரை பேரூராட்சி தலைவர், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள், அப்பகுதியை சேர்ந்தவர்கள் போட்டியாளர்களின் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.






4 comments:

  1. நல்லது நடக்க வேண்டும் என்று நினைத்து நல்லதே செய்கின்றனர், ஆனால் பயிலும் சிறுவர்கள் நல்ல நிலையில் பயின்று நல்லவர்களாக வளர வேண்டும்.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    நல்லது நடக்க வேண்டும் என்று நினைத்து நல்லதே செய்கின்றனர், ஆனால் பயிலும் சிறுவர்கள் நல்ல நிலையில் பயின்று நல்லவர்களாக வளர வேண்டும்.

    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
    உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  3. அதிரையில் பல முஹல்லாகளின் சார்பாக தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சிறுவர்களுக்கான‌ மார்க்க அறிவுத்திறனை மேம்படுத்த உதவும் இவ்வாறான போட்டிகள் வருங்கால சமுதாயத்திற்கு நல்ல ஓர் உதாரணமாக இருக்கும் என்று எந்த சந்தேகமும் இல்லை.

    ReplyDelete
  4. போட்டியில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள், விளையாட்டு கேமில் மூல்கிருக்கும் சிற்வர்களுக்கு இப் போட்டி மேலும் உற்சாகத்தை தரும்.

    A . J பள்ளி கட்டுமானத்தில் பல இடைவூர்கள் பக்கத்தில் உள்ளவர்கள் கொடுத்ததை யாராலும் மறக்கமுடியாது அச்சம்பவத்தில் தன்னை இணைத்துக்கொண்டு பள்ளி நிர்வாகத்தினருக்கு உறுதுணையாக இருந்துவருபவர் ஜனாப் அஹ்மது ஹாஜா அவர்களை இங்கே நினைவுகூரத்தக்கது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.