.

Pages

Friday, April 11, 2014

அதிரை ஈசிஆர் சாலையில் கார் - பைக் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் காயம் !

தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் அப்துல் பாசித், ஹாஜா, கஜாலி. இவர்கள் மூவரும் நேற்று நாகூரில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டுவிட்டு காரில் இன்று மாலை ஊர் திரும்புகையில், கார் அதிரை ஈசிஆர் சாலையில் உள்ள லைலாத்தி கடையின் அருகே கடந்தபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் நேருக்கு நேர் காரின் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த உள்ளூர் புதுக்கோட்டையை சேர்ந்த ராமலிங்கத்திற்கு முகத்தில் காயம் ஏற்பட்டது.  உடனே அருகில் நின்றவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விபத்து குறித்து மேலும் விசாரித்து வருகின்றனர். இதில் காரின் முன்புற கண்ணாடி பலத்த சேதமடைந்தது. இருசக்கர வாகனமும் சேதமடைந்துள்ளது.


6 comments:

  1. vaganathi varumpothu,thirumpothu methuvaga sella venama?

    ReplyDelete
  2. கேடு கேட்ட பசங்க இருவரில் ஒருவரோ அல்லது இருவருமோ தண்ணீ அடிச்சிருப்பாணுக. இவனுக இருப்பதைவிட இல்லாமல் இருப்பது மேல். இது பொது மக்கள் கருத்து.

    ReplyDelete
  3. Thanni adichittu drive pannuna mattumthan..accident aaguma?

    ReplyDelete
  4. மது அருந்துனதை நிருபிக்கும் வரை இந்த பலியை அவர்கள் மீது சுமத்த கூடாது.
    இந்த நேரத்தில் இரு தரப்பினரும் நலம் பெற எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்வோம்.

    Fazee Canada

    ReplyDelete
  5. விபத்துக்களை தவிர்க்க சாலை விதிமுறைகளை கடை பிடிக்க வேண்டும் - இந்த இரண்டு பேரும் பேசி தீர்த்துக்கொண்டால் போச்சு இல்ல இரண்டு வாகனுமும் காவல் நிலையத்தில் வெயிலில் அப்படியா பல மாதங்கள் கடந்து வீணாக போகும்! .

    ReplyDelete
  6. நாளுக்கு நாள் விபத்துகள் அதிகம், கவனம் மிகக் குறைவு.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.