.

Pages

Wednesday, April 23, 2014

பணி ஓய்வு பெரும் முதுகலை ஆசிரியர் ஹாஜி முஹம்மது குறித்து சக ஆசிரியர்களின் கருத்துகள் ! [ காணொளி ]

32 ஆண்டுகள் கல்வி பணி ஆற்றி ஓய்வு பெரும் நமதூர் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முதுகலை ஆசிரியர் ஹாஜி முஹம்மது அவர்களை பற்றி நினைவு கூறும் வகையில் நேற்று மாலை பள்ளியின் சக ஆசிரியர்கள் ஏற்பாடு செய்த பணி நிறைவு பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மஹபூப் அலி தலைமை வகிக்க, சக ஆசிரியர் ஆசிரியைகள் ஹாஜி முஹம்மது அவர்கள் கல்வி பணியாற்றிய போது நிகழ்த்திய பல்வேறு சாதனைகள் குறித்து பேசினார்கள். இதில் பள்ளியின் ஆசிரியர் ஆசிரியை சார்பில், பணி நிறைவின் போது வழக்கமாக வழங்கப்படும் தங்க நாணயம் மற்றும் பொன்னாடையை பள்ளியின் தலைமை ஆசிரியர் மஹபூப் அலி போர்த்தி கெளரவித்தார்.

இறுதியில் பணி நிறைவு விழா காணும் முதுகலை ஆசிரியர் ஹாஜி முஹம்மது ஏற்புரையை வழங்கினார். முன்னதாக வரவேற்புரையை ஆசிரியர் கணேசன் வழங்க, நிகழ்சிகள் அனைத்தையும் முதுகலை ஆசிரியர் நாகராஜன் தொகுத்து வழங்கினார்.

முதுகலை ஆசிரியர் ஹாஜி முஹம்மது அவர்களை பற்றி நினைவு கூறும் வகையில் சக ஆசிரியர்களின் கருத்துகளோடு ஹாஜி முஹம்மது அவர்களின் கருத்துகளும் இதில் இடம்பெறுள்ளது...

27 comments:

  1. கண்ணியத்திற்குரிய ஹாஜி சாருக்கு அல்லாஹ் எல்லா நலன்களையும் வழங்குவானாக. உங்களால் பட்டைதீட்டப்பட்ட ஆயிரக் கணக்கான மாணவர்கள் வாழ்வில் மறக்கமுடியாத ஒருவர் ஐயா நீங்கள்.

    ஒன்பதாம் வகுப்பின் முதல் நாளன்று உங்களிடம் வாங்கிய அடிதான் எனது வாழ்வின் முதல் படி.

    A piper in the street today யும் The quality of mercy யும் நான் உச்சரித்த முதல் ஆங்கில கவிதைகள்.

    கணக்குப் பாடத்திற்கு சூத்திரமுண்டு ஆங்கிலத்திற்கும் சூத்திரம் வகுத்த சூத்திரதாரி ஐயா நீங்கள்.

    ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆகியிருக்க வேண்டிய நீங்கள், எங்கள் ஆசிரியர் ஆனது உங்கள் துர்பாக்கியமல்ல; எங்களுக்குக் கிடைத்த பாக்கியம்.

    கடந்த வருடம் நேரில் சந்தித்தபோது 25 வருடங்கள் கழித்தும் அதே கணீர் குரலில் பெயர்சொல்லி அழைத்தது இன்றும் ஒலிக்கிறது. இன்ஷா அல்லாஹ் விரைவில் ஊர்வந்து மீண்டும் சந்திப்பேன் என்ற ஆர்வம் மிகைக்கிறது.

    நன்றியுடன் சந்திப்பேன் சார்.

    என்றென்றும் உங்கள் மாணவன்,

    N.ஜமாலுதீன்
    1990~91- 12 ஆம் வகுப்பு இ பிரிவு
    1989~90 - 11 ஆம் வகுப்பு இ பிரிவு
    1987~88 - ஒன்பதாம் வகுப்பு ஆ பிரிவு
    காதிர் முகைதீன் மேல்நிலை பள்ளி
    அதிராம்பட்டினம்
    அதிரை எக்ஸ்பிரஸ்: ஓய்வு பெற்றார் ஹாஜி சார்! (புகைப்படங்கள்)
    உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும். பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தா…
    adiraixpress.in
    Like·Comment
    Halidh Ma and 9 others like this.
    Alagappan Abdul Kareem
    ஹாஜி சாரைப் பற்றி மலரும் நினைவு இல்லாத அதிரையரும் உண்டோ?
    Like · 2 · Delete · 9 hours ago
    Ahamed Anwar
    HM Sir always Honourable Master. Hats-off Man(kind)
    Like · Delete · 9 hours ago
    Jamaludeen Noor Mohammed
    தனி நிலைத்தகவலே போட்டாச்சுல!
    Like · More · 9 hours ago
    Sma Shahul
    very good teacher in my life.
    Unlike · 1 · Delete · 7 hours ago
    Halidh Ma
    //ஒன்பதாம் வகுப்பின் முதல் நாளன்று உங்களிடம் வாங்கிய அடிதான் எனது வாழ்வின் முதல் படி.
    A piper in the street today யும் The quality of mercy யும் நான் உச்சரித்த முதல் ஆங்கில கவிதைகள்.
    கணக்குப் பாடத்திற்கு சூத்திரமுண்டு ஆங்கிலத்திற்கும் சூத்திரம் வகுத்த சூத்திரதாரி ஐயா நீங்கள்.// Honestly saying this is my words too - My real academy journey commence from year 9, since year 9 my education year just skipped, may be tuition teacher pass poor student to next level - May Allah give My beloved Haji Mohamed sir to get good health and wealth here and after his life- May allah give more mercy on you sir

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.
    அருமையான விளக்கம்.

    அந்தந்த மாணவர்களுக்கு அவரவரர் ஆசிரியர்கள் மகத்தானவர்கள், எங்களுடைய பள்ளி வாழ்க்கையில் மறக்கமுடியாத எத்தனையோ ஆசிரியர்கள் இருந்தாலும் தினமும் சாலையில் போகும்போது "ஹாஜி ஜனாப் ஹாஜா மொய்தீன் சார் அவர்கள், திரு ரெங்கராஜ் சார் அவர்கள்" இவர்களை அடிக்கடி சந்திப்பதுண்டு, உடம்புக்கு வயசு கூடினாலும், நினைவலைகள் இன்றும் இளமையாக இருக்கின்றது.

    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
    உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  3. ஹாஜி முஹம்மது சார் KMHSS கல்வி தூண் நான் முன்னால் மாணவன் என்ற முறையில் அவர்களை வாழ்த்துவதுடன் பிறாத்தனையும்புறிகின்றேன் பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  4. ஹாஜி சாரை பற்றி யாருக்கும் தெரியாத தகவலை கூறுகிறேன்.

    சார் ஒரு சாப்பாட்டு ராமன், அதிரை காவன்னா ஹோட்டலைம், மம்சாலிஹு ஹோட்டலையும் விரும்பி சென்று வயிறு முட்ட சாப்பிடும் ஆசிரியர்.

    தமிழ்லே இவருக்கு புடிக்காத வார்த்தை மூன்று,

    வரலே
    தெரியலை
    மறந்துட்டேன்

    ReplyDelete
    Replies
    1. சகோ, கவனத்திற்கு.

      சாப்பாட்டு ராமன், என்று இருப்பதற்கு பதில், சாப்பாட்டு பிரியர் என்று இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.

      Delete
    2. சகோஸ். ஜமால்

      // சார் ஒரு சாப்பாட்டு ராமன்,//

      இந்த வார்த்தையை ஒரு காமெடியாக எடுத்துகொள்ளவும். சீரியஸாக எடுக்க வேண்டாம்

      Delete
    3. Br Azim., Above your message really not suitable here., please remove it . Annoying words //சாப்பாட்டு ராமன் , வயிறு முட்ட சாப்பிடும் ஆசிரியர். // please remove
      thanks

      Delete
  5. முகநூல் வழியே வந்த கருத்துகள் :

    Jahabar Sathik கூறிய கருத்து :
    Assalamu Alaikkum , Mr.Haji Mohammed ( Sir ) - Everyone retires with a pension fund but very few teachers like you retire with the respect and love of all their students. Happy retirement to the real star of this school

    ReplyDelete
  6. முகநூல் வழியே வந்த கருத்துகள் :

    Abul Aurs கூறிய கருத்து :
    He is one of the gem we have got in KMHSS, we haven't thanked all our teachers but I use this time to thank all of our teachers specially Mr.Haji, Mr.Liyakath Ali, Mr.Mahboob Ali, Mrs.Devagi, Mr.Francis, Mr.Muthu Kumar, Mr.Ahamed Thambi, Mr.Udaya Kumar....

    ReplyDelete
  7. முகநூல் வழியே வந்த கருத்துகள் :

    Abdul Razack கூறிய கருத்து :
    ஆசிரியர் ஹாஜி ஒரு நல்ல ஆசிரியர் மட்டும் அல்ல . ஒரு நல்ல பொது அறிவு போதிக்கும் மனிதர். நான் 9-பி சென்றால் இவர் அடிப்பார் என்று பயந்து 9-எ மாற்றல் வாங்கி சென்றேன். ஆனால் அதன் தவறை பிறகு உணர்ந்து அவரிடம் நல்ல நட்பை பெற்று, நல்ல பண்புகளையும், நல்ல படிப்பினையும் கட்டறேன். இங்கிலீஷ் என்றால் என்ன , அதனை எளிதாக படிப்பது எப்படி என்பதை அவருடைய பாணியில் சொல்லி, விளங்க வைத்தவர். அவருடைய பணி நிறைவு, நமக்கு மன குறைவாக இருந்தாலும், அதனை ஏற்று கொள்ள வேண்டிய நிர்பந்தம். அவருடைய சீரிய பணிக்கு வாழ்த்துக்கள்
    என்றும் அன்புடன்
    அப்துல் ரசாக்

    ReplyDelete
  8. முகநூல் வழியே வந்த கருத்துகள் :

    Sajith Khan கூறிய கருத்து :
    No one complete his place.....genius among the teachers...

    ReplyDelete
  9. //ஒன்பதாம் வகுப்பின் முதல் நாளன்று உங்களிடம் வாங்கிய அடிதான் எனது வாழ்வின் முதல் படி.
    A piper in the street today யும் The quality of mercy யும் நான் உச்சரித்த முதல் ஆங்கில கவிதைகள்.
    கணக்குப் பாடத்திற்கு சூத்திரமுண்டு ஆங்கிலத்திற்கும் சூத்திரம் வகுத்த சூத்திரதாரி ஐயா நீங்கள்.//
    Honestly saying this is my words too - My real academy journey commence from year 9, since year 9 my education year just skipped, may be tuition teacher pass poor student to next level - May Allah give My beloved Haji Mohamed sir to get good health and wealth here and after his life- May allah give more mercy on you sir., Jasakallah Khair for your contributions..

    ReplyDelete
  10. ஹாஜி முகம்மத் சாரின் வகுப்பு மாணவனின் தலைவன் என்பதில் சந்தோசம் அடைந்ததை நினைய்வுகூர்கிறேன்.

    என் முதல் வேலை இவர் வகுப்புக்கு வருவதற்கு முன்பு கம்பு மேசைன் மீது வைத்தாக வேண்டும்- எம்போதும் மாணவர்களை கடுமையாக தண்டிப்பார் அதனால் நானும் கம்பு வைக்க வில்லை- இதனை பார்த்தவர் உன்னை கம்பு கொண்டுவரதான் சொன்னேன் கப்பலை இழுத்து வான்னு சொல்லல என கூறி அடிக்க வந்தவர் திடீரெனெ நிர்த்திவிட்டார்.

    திருமண நிகழ்ச்சியில் அவர் என் பெயரை அழைத்தபோது அதிர்நதுபோயிட்டேன் இன்னமும் நான் வகுப்பு மாணவனாக இருந்ததை அவரே நினைவு படுத்தினார்.

    காலங்கள் கடந்தாலும் நினைவுகள் மாறவில்லை.

    கீத்து கொட்டகையாக இருந்த தொழுகை பள்ளி இன்று பலவசதிகள் கொண்ட தொழுகை பள்ளியாக மாற்ற முயற்சித்தவர் இவர் தான்.

    Seniority பிரகாரம் பள்ளின் தலமைஆசிரியாக வர தகுதி இருந்தும் வராதது எதோ உள்குத்து வேலை நடந்து இருக்குமோ என தோன்றுகிறது.

    தன் பணி இருந்து ஓய்வு பெரும் நிகழ்ச்சியில் தன்னிடம் படித்த மாணவனே வழி அனுப்புவதை ஏற்று கொண்டது இவரின் பெருந்தன்மையே!

    " கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
    மாடல்ல மற்றை யவை. "

    நினைவளைகளோடு வாழ்த்துகிறேன் - நீடுழி வாழ்க.

    ReplyDelete
  11. ஹாஜி முஹம்மது சார் KMHSS கல்வி தூண் நான் முன்னால் மாணவன் என்ற முறையில் அவர்களை வாழ்த்துவதுடன் பிறாத்தனையும்புறிகின்றேன் பதிவுக்கு நன்றி...
    தமிழ்லே ஹாஜி சார் புடிக்காத வார்த்தை மூன்று...
    வரலே ...
    தெரியலை...
    மறந்துட்டேன் ...

    ReplyDelete
  12. ஹாஜி சார்...
    இந்த பெயரை கேட்டால், வகுப்பறையில் ஆர்பரிக்கும் சப்தம் கூட நிசப்தம் ஆகிவிடும்...
    வீட்டில் சமையலுக்காக புளி கரைப்பதை பார்த்திருக்கிறோம் ஆனால் நீங்கள் வகுப்பறைக்கு வந்த பிறகு வயிற்றில் புளி கரைப்பதை உணர்திருக்கிறோம்...

    அந்த பயமும் அடியும் தான் எங்களை படிக்க வைத்தது.

    கல்லாகவும் கரியாகவும் இருந்த எங்களை பட்டை தீட்டி வைரமாக ஜொலிக்க வைத்தவர் நீங்கள்..

    உங்களால் உயர்ந்தவர்கள் பலர், வெளி நாட்டிலும் சரி உள்நாட்டிலும் சரி...

    என்னமோ தெரிய வில்லை , தொடக்க கல்வி முதல் தொலைதூர கல்வி வரை சில பல ஆசான்களிடம் பயின்றாலும் பசுமரத்து ஆணியாய் எங்கள் நெஞ்சில் நீங்கள் தான் பதிந்துள்ளீர்..

    என்றென்றும் நன்றியுடன் உங்கள் மாணவன்.

    Mohideen
    Dammam, KSA

    ReplyDelete
  13. அவரிடம் பாடம் பயின்ற என்னை போல் முன்னால் மாணவர்கள் ஹாஜி முஹமது சாரை பற்றி தினமும் உலகில் ஏதோ ஒரு மூலையில் அவரை பற்றி பேசிக்கொண்டு இருப்பார்கள். காரணம் அவர் கல்வியை சொல்லும் முறை தனித்துவம் வாய்ந்ததே காரணம். அவர் மனதில் பதியவைக்க கூறும் விளக்கம் என்றும் மறக்கமுடியாதது. உதாரணமாக பொருளியல் பாடத்தில் பகுதி கீழே, தொகுதி மேலே என்பதை நினைவில் வைக்கவேண்டும் அதற்கு அவர் சொன்ன ஒரு உவமை, ஒரு விவசாயி வயலுக்கு செல்லும்போது பழையசோறு எடுத்து போவான் அந்த பத்திரத்தில் மூடி மேல்பரப்பில் தொவையல் வைத்திருப்பான் இப்போ நினைவு வைத்துகொள்ளுங்கள் பழையது ( பகுதி )கீழே தொவையல் (தொகுதி) மேலே என்று சொல்லித்தந்தார் இன்னும் அது மறக்கவில்லை. இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். அவர் மாணவருக்கு கல்வி கற்று கொடுக்கும் முறையை எல்லா ஆசிரியரும் அறிந்து அவரை போல் பாடம் நடத்த முன்வரவேண்டும். அவர் இந்த பள்ளியை விட்டு செல்வது மாணவர்களுக்கு பேரிழப்பு. எல்லாம் வல்ல அல்லாஹ் அவரின் நீண்ட ஆயுலுக்கும், மறுமை வாழ்வு சிறக்கவும் இந்த நேரத்தில் நாம் ஹாஜி முஹம்மது சாருக்கு வேண்டி துஆ செய்வோம்.

    ReplyDelete
  14. முகம்மது ஆஸிம்முக்கு பதில் சுவையான, தரமான உணவை தேடி சாப்பிடுவதர்க்கு பெயர் சாப்பாட்டு ராமணல்ல உம்மை போன்று யாசகமாக சாப்பிடுபவர்க்குதான் அது பொருத்தமான பெயராக இருக்கும்.

    ReplyDelete
  15. பெற்றோர்களின் அன்புக்கு அடுத்தபடியாக கிடைக்கக் கூடியது ஆசிரியப் பெருமக்களின் அன்புதான்.

    ReplyDelete
  16. Good luck to you as you move onto the next stage in your life. Without a doubt, you will continue to have success in all areas! Thanks For Everything..

    ReplyDelete
  17. ஹாஜி சாரின் கைபேசி விவரம் கிடைத்தால் என்னை போன்ற முன்னால் மாணவர்கள் வெளிநாட்டில் இருந்து அழைத்து பேச ஏதுவாக இருக்கும். யாராவது பதிவிடுக

    ReplyDelete
  18. முகநூல் வழியே வந்த கருத்துகள் :

    Naina Khan கூறிய கருத்து :
    dedicated teacher , rabbanah will give him good future and health,

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. I would like to take this opportunity to greet our respected Haji Mohamed sir for his selflessness, punctual and strictness towards the betterment of students. 
    Now I recall those days of my schooling when he was our social science and english teacher, he was really a talented teacher who can grab the attention of students. Among the others he was seen somewhat differently. He worked more than what he was paid for. The way he teaches was totally different from others, because of his strictness class room would make pin-drop silent. It was at the time when the English medium section was introduced in our school, Haji sir was the one and only who taught and interected with the student in English alone; Almighty has given him a talent to explain the subject in his own way.

    He spent his most part of his life to the welfare of our students, he was deserved to receive best teacher award from the Governments, but unfortunately it is not handful to him till date. Still, we, Adiraites are grateful to him; so I suggest that we should honour him during any event takes place in Adirai such as Holy Quran conference or any educational fair.   

    Once again, I pray Almighty to let him spend his remaining period of life with good health and wealth. 

    Your student, 
    Ahamed Thoufeek,
    Class 10th E 1997-98,
    Class 9th E 1996-97,
    Class 8th E 1995-96

    ReplyDelete
  21. நான் காதிர் முகைதீன் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் காலத்தில் ஹாஜி சார் ஆசிரியராக பணி புரியாததால் அவர்களைப் பற்றி எனக்கு தெரியாவிட்டாலும் தாங்களின் பகிர்வு மூலமாக அவர்களைப் பற்றி அறிந்து திறமையான பல மாணவர்களை உருவாக்கிய நல்ல ஆசிரியர் என்பதை புரிந்து உங்களது பாராட்டில் நானும் கலந்து கொள்வதுடன் அவர்களது ஓய்வு காலம் நிம்மதியுடன் நல் சுகத்துடன் சிறந்து விளங்க துவா செய்கிறேன்.

    ReplyDelete
  22. ஹாஜி சார் உதவியால் பலவற்றை நான் மட்டும் அல்லாமல் பல மாணவர்களில் கற்றுள்ளனர். அவரின் சின்ன சின்ன சொல்கள் கூட விளையாட்டாக காமெடியாக நாங்கள் எடுத்துகொள்வோம் ஆனால் அவரின் வகுப்பைறையில் சிரித்தால் அதுக்கு வேற டிரிட்மெண்ட்தான்.

    அவர் சொன்ன வார்த்தைகளில் சில மறக்க முடியாதவை:‍‍

    கடற்கரைதெரு யாசர் ஒருநாள் வகுப்பைறைக்கு லேட்டாக வந்துவிட்டான்,வந்தவனைபார்த்து ஹாஜி சார் எங்கிருந்துப்பா வார என்று கேட்க ஹாஜிசார் கடற்கரைத்தெருவில் இருந்து சொன்னவுடன் ஹாஜிசார் அதற்கு காஷ்மீர் பக்கம் இருக்கே விமானம் பிடித்து வரலேட்டா ஆச்சா என்று கூறினார்.

    அதேபோல் இரவு வகுப்பைறையில் படித்து கொண்டு இருக்கும் போது மஹ்ரீப் தொழுல எல்லாரும் சென்று விட்டு பின்னர் வந்துவிட்டனர் சாதிக் லேட்டாக வர என்ன்ப்பா சாதிக் மஹ்ரீப்க்கு 3 ரக்காத்தா இல்ல 30 ரக்காத்தா என்று கூறினார்.

    நண்பர் ராஜா முஹம்மது வகுப்பறைக்கு வரலனு ஹாஜிசார் வீட்டிற்க்கு திருப்பி அனுப்பிவிட்டுவிட்டார் பெற்றோறை அழைத்துவற,பெற்றோரும் வந்துவிட்டனர் பள்ளிக்கு கொக்குபிடிக்க சொல்லுங்க என்று ஹாஜி சார் கூறினார் பெற்றோர் நினைக்க இப்ப பனிஷ்மென்ட் கொக்குபிடிக்க சொல்லுறாங்க புதுஷா இருக்கே ஹாஜிசார் குனிஞ்சி காமிச்சு இதே தான் சொன்னேன் என்று கூறினார்.

    ஹாஜாக்கு ஏர்வாடியில கூட இடம் கிடைக்காது.
    திருத்துறைப்பூண்டில மாத்திரையை போட்டுவிட்டு முத்துப்பேட்டையில தண்ணீர் குடித்து விட்டு அதிராம்பட்டினத்துல வந்துபாடம் நடத்துறேன் என்று கூறியது.

    "தம்பி திருவோடு இருக்கா பேனா பேன்சின் பிச்சை எடுக்க"

    நான் 10ம் வகுப்பி படிக்கும்போது இதேபோல் தேர்தல் சமயம் மாலை 6 மணிக்குமேல தேர்தல் பிரச்சாரம் பன்றாங்க இவனுக்குதான் 6 மணியோட நேரம் முடிஞ்சுருச்சி இவனைலம் பிடிச்சு உள்ளே போடானும் சொன்னது

    திருத்துறைப்பூண்டில இருந்து துவரங்குறிச்சில பஸ் இறங்க மாட்டுவண்டில வந்த போது நம்ம பசங்க லிப்ட் கொடுக்கமா இருசக்கர வாகனத்தினை வேகமாக ஒட்டிவந்து விட்டு வகுப்பைறையில அடிவாங்கியது

    அன்று ஒருநாள் ஹாஜி சார பார்த்தால் எல்லாருக்கும் கை கால் ஆட்டம் கண்டுவிடுமே ஹாஜ நகர் ஹக் ஒருநாள் மாலை வகுப்புக்குவராமல் ஒடும்பொழுது வகுப்பு ஆசிரியர் சீனிவாசன் அவனை பிடித்துவிட்டார் யாரு இன்னைக்கு மாலைவகுப்புனு ஹாஜிசார்னு சொல்றான் ஹாஜிசார் வர வண்டலுர்ல சிங்கம் தப்பிச்சுபோச்சாம் சார் அந்த சிங்கத்த பிடித்து அதன் வாய்ல ஹக்ட தலையவிட்டு கடிக்கவிடனும் சார் என்று ஹாஜி சார் கூற சீனிவாசன் உள்பட ஹாஜ் சார் முன்னாடி எல்லாரும் சிரித்தது அன்றுதான் முதல் தடவை..

    நீங்க பல பேட்ச் மாணவர்களாக இருந்தாலும் பெயரும்,கொடுக்க வேண்டிய ஃப்ன் தொகையை சரியாக சொல்லுவார் இன்றுளவு கூட நான் எல்லாம் ஃப்ன் காசு சார்ட்ட கொடுத்துட்டேன்.

    இன்னும் பல சுவரஸ்யமான தகவல்பல உள்ளன , ஹாஜி சாருக்கு தனி புத்தகமே போடாலாம்.

    ஹாஜிசார் உதவியால் பல மாணவர்கள் அரசியல் வாதிகளாகவும்,அரசு மற்றும் தனியார் பலதுறைகளின் உயர்பதவிகளிலும் சிற்ந்தவர்களாக உள்ளனர். ஹாஜி சாரை இன்று பார்த்தால் கூட "அது என்னானு தெரியல கைகால் எல்லாம் ஆட்டம் கண்டுறுது" அவர் வகுப்பறையில் சிறந்த ஆசியரியர் மாணவர்களை ஊக்குவிப்பாளாரகவும் வெளியில் சிறந்த நண்பரகவும் பலகும் சுபாவம் உடையவர்.

    நீங்கள் பள்ளியை விட்டு ஒய்வு பெற்று விட்டு சென்றாலும் உங்களின் தொடர்பில் பழைய மாணவர்களாக என்றும் இருப்போம் கூறி இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும்,நீண்ட ஆயுளையும்,இம்மை மறுமை அனைத்திலும் வெற்றிப்படும் நபராக இருக்கவேண்டும் என்று எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் தூஆ செய்வோமாக.

    என்றும் உங்களுடன்
    ப.அகமது முனாஸ்கான்.

    ReplyDelete
  23. Namaku Hiji Mohamed sir kidaikavillai yanal munbu bol SSLC fail ooril degree padithavanai thedum soolnilai vanthirukkum

    ReplyDelete
  24. ஹாஜி சாரின் பாதிப்பு இல்லாத 90 களின் அதிரை மாணவர்கள் அரிது. அவரின் அர்ப்பணிப்பு ஈடுபாடு கரிசனம் மேதமை எல்லாம் பல நாட்களாக பல தளங்களில் பேசப்பட்டு வருகிறது.

    எனது வாழ்க்கையில் ஹாஜி சாரின் பாதிப்பு வித்தியாசமானது...

    ஒரு நாள் 'ப்ளாஸ்டிக்' என்ற ஆங்கிலப்பாடம் நடாத்தியபொழுது -- விளக்குவதற்காக சிலரை ப்ளாஸ்டிக் பொருட்களும் வேறு சிலரை இதர பொருட்களும் கொண்டுவர பணித்தார். அப்போது யாராவது ப்ளாஸ்டிக் பக்கெட் (வாளி) கொண்டுவர முடியுமா என்று கேட்க மாணவர்களிடையே மௌனம். (பெரிய ப்ளாஸ்டிக் வாளியை கொண்டு வந்து திரும்ப கொண்டு செல்வதை அணைவருக்கும் அசௌகரியமாக தோன்ற). சட்டென முகம் மாறிய ஹாஜி சார் அணைவரையும் உட்காரச் சொல்லி விட்டு..

    'ப்ளாஸ்டிக் வாளி எல்லா வீட்டிலும் இருக்கும்.. ஆனால் அதை கொண்டுவரும் அசௌகரியத்தை நினைத்து யாருமே முன்வர வில்லை.. உங்களிடம் பரந்த மனம் இல்லை. பரந்த மனப்பான்மை இருந்தால்தான் பொது நலப்பணிகளில் ஈடுபட முடியும்.. எதற்கும் பிறரை எதிர்பார்த்து காத்திராமல் தானே முன்வர வேண்டும்..' என்று சாதாரணமாக கூறிவிட்டு போய்விட்டார்.

    அனால் அவருடைய வார்த்தைகள் அன்றிலிருந்து இன்றுவரை எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. இதோ முப்பதாண்டுகள் சுழன்று கடந்து விட்டன. அன்று முதல் இன்றுவரை பொதுநல காரியங்களில் என்னை முற்படுத்திக் கொள்வது எனக்கு வழக்கமாகி விட்டது.

    கடந்த ஆண்டு விடுமுறையில் ஊர் வந்தபோது அவரை சந்திக்க நினைத்து பள்ளிக்கு சென்று (என்னை நினைவிருக்குமா..?) தேடியபோது தனது கம்பீரக்குரலில் எனது பெயர் சொல்லி அழைத்து நலம் விசாரித்து 'இப்போது வகுப்பு நேரம்.. அதிகம் பேச முடியாது.. அப்புறமா பேசலாம்' என்று கூறிவிட்டு இளவல்களை நோக்கி நடந்தார்... இல்லையில்லை... இதயங்களை நோக்கி நடந்தார்.

    ஆர்ப்பரிக்கும் கடலலை திரும்பும்போது கரையில் அழகிய கிளிஞ்சல்களைவிட்டுச் செல்கிறது....

    அதிரும் இசை ஓய்ந்த பின்னும் அதன் இனிமை இன்னும் ரீங்கரிக்கிறது...

    சூரியன் மறைந்த பின்னும் அதன் சுடரொளி மீதமிருக்கிறது...

    வாழ்வில் ஒவ்வொரு இனிமையும் நம்மை கடந்து செல்லும்போது...

    அதன் அழகிய மிச்ச மீதிகள் நம்மோடு தங்கிவிடுகின்றன...

    எங்கள் ஆசான் ஹாஜி சாரின் நினைவுகளைப்போல..

    போய் வாருங்கள் ஆசானே... சற்றே இளைப்பாருங்கள்..!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.