.

Pages

Saturday, April 19, 2014

அதிரையில் டிஆர் பாலுவை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சியினர் நடத்திய தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் !

ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் அதிரை கிளை சார்பில் இன்று இரவு அதிரை பேருந்து நிலையத்தில் தஞ்சை பாராளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் திரு. டிஆர் பாலுவை ஆதரித்து தேர்தல் பிராசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தஞ்சை பாதுஷா தலைமை வகிக்க, முஸ்லீம் லீக் கட்சியின் நகர தலைவர் K.K. ஹாஜா, விடுதலை சிறுத்தைகள கட்சியின் பொறுப்பாளர்கள் S. திலகராஜ், ப.சா. புருசோத்தமன், மமகவின் ஒன்றிய செயலாளர் அதிரை சாகுல், நகர தலைவர் A.R. சாதிக்பாட்சா, நகர செயலாளர் M.R. முஹம்மது ஹாலீத், நகர துணைச்செயலாளர்கள் S. முஹம்மது யூசுப், A. நசுருதீன், I. அன்வர் மற்றும் ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சிகளின் மாவட்ட மற்றும் நகர ஒன்றிய கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

வாழ்த்துரையை திமுக நகர செயலாளர் இராம.குணசேகரன், மமக நகர பொருளாளர் M.O. செய்யது முஹம்மது புஹாரி ஆகியோர் வழங்கினார்கள். முன்னதாக வரவேற்புரையை தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் S. அஹமது ஹாஜா வழங்கினார்.

சிறப்பு பேச்சாளர்களாக இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் S.S. அஸ்லம் பாஷா MLA மற்றும் தமுமுகவின் மாநில செயலாளர் கோவை செய்யது ஆகியோர் சிறப்புரையை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியின் இறுதியில் நன்றியுரையை J. அப்துல் கபூர் [ மரைக்கான் ] வழங்கினார். இதில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சிகளான திமுக, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், எஸ்டிபிஐ கட்சி, விடுதலை சிறுத்தைகள் ஆகிய காட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட கட்சியினர், பொதுமக்கள் என பெரும் திரளாக பங்கேற்றனர்.











18 comments:

  1. ம ம கட்சி ஒரு இஸ்லாமிய கட்சிதான் அதற்கு ஏன் மாயாவத்தில் நீங்கள் ஆதரவு கொடுக்கவில்லை என்று கூச்சலிடும் நடுநிலையாளர்களே அவர்கள் உண்மையில் இஸ்லாமியகளுக்கு பாடுபடும் கட்சி என்றால் அவர்கள் நடத்திய இந்த கூட்டத்தில் முஸ்லிம் சேர்மனை அழைக்கவில்லையே இதற்கு என் சொல்லபோகிறீர்கள்

    துனை சேர்மன் பதவிக்கு ஹலீம் அவர்களின் மகன் அப்துல் காதர் என்ற முஸ்லிமை தோற்கடித்தவர்களை எப்படி இஸ்லாமிய கட்சி என்று சொல்லமுடியும்

    ReplyDelete
  2. ஹைதரோடு கூட இருந்து கொண்டே கழுத்தறுத்த வாத்தி ஜவாஹிருல்லாஹ்வும் சுண்டி அன்சாரியும்
    என்ற உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த கோவை ரஹுமதுல்லாஹ்.

    தமுமுக மமக வினர்களே உங்களை நீங்களே அழித்து கொள்ள இதை விட வேறு சான்று இருக்குமா?

    ReplyDelete

  3. TNTJ மயிலாடுதுறை தொகுதியில் மமகவிற்கு ஆதரவு அளிக்க தயாராக இருக்கும் நிலையில் TNTJ யின் ஆதரவு தேவையில்லை என்று கூறியது ஏன் ?

    இரத்தம் சொட்ட சொட்ட வெறித்தனமாக மிருகவெறி தாக்குதல் நடத்திய திமுகவிடம் ஆதரவு கோரிய தாங்கள், சொந்த சகோதர அமைப்பான TNTJ விடம் ஆதரவு தேவையில்லை என்று கூறியது ஏன் ?

    ReplyDelete
  4. TNTJ யின் ஆதரவு தேவையில்லை என்று கூறியது ஏன் ?

    https://www.facebook.com/photo.php?v=667824236629596&set=vb.556444554434232&type=2&theater

    ReplyDelete
  5. ம ம கட்சி ஒரு இஸ்லாமிய கட்சிதான் அதற்கு ஏன் மாயாவத்தில் நீங்கள் ஆதரவு கொடுக்கவில்லை என்று கூச்சலிடும் நடுநிலையாளர்களே அவர்கள் உண்மையில் இஸ்லாமியகளுக்கு பாடுபடும் கட்சி என்றால் அவர்கள் நடத்திய இந்த கூட்டத்தில் முஸ்லிம் சேர்மனை அழைக்கவில்லையே இதற்கு என் சொல்லபோகிறீர்கள்

    துனை சேர்மன் பதவிக்கு ஹலீம் அவர்களின் மகன் அப்துல் காதர் என்ற முஸ்லிமை தோற்கடித்தவர்களை எப்படி இஸ்லாமிய கட்சி என்று சொல்லமுடியும்

    2 ஆண்டுகளில் வரகூடிய தேர்தலில் இந்த மேடையில் இருக்கும் நீங்கள் வெற்றி பெறமுடியுமா? இந்த கருத்தை பிரிண்ட் எடுத்து வைத்துகொள்ளுங்கள்.

    ReplyDelete
  6. இந்த கூட்டத்தில் முஸ்லிம் சேர்மனை அழைக்கவில்லையே இதற்கு என்ன சொல்லபோகிறீர்கள், சொந்த விருப்பு வெறுப்புகளை பொது அமைப்பான த மு மு க வில் புகுத்த வேண்டாம்.

    ReplyDelete
  7. //சொந்த விருப்பு வெறுப்புகளை பொது அமைப்பான த மு மு க வில் புகுத்த வேண்டாம். //

    இஸ்லாமியர்களுக்காக தொடங்கப்பட்ட கட்சி என்று மார்தட்டிக்கொள்ளும் இவர்களிடம் இந்த கேள்வி கேட்காமல் வேறு யாரிடம் கேட்க முடியும் மான் சேக் நீங்கள் சொல்லுங்கள்

    ReplyDelete
  8. //சொந்த விருப்பு வெறுப்புகளை பொது//வாழிவில் ஈடுபடுவோர் கைவிட வேண்டும் என்பதை பொது வாழ்விற்கு வந்த அவருக்கு தெரியவில்லையே ஏன் ?

    அடிக்கும் பந்துதான் சுவற்றில் மோதி திரும்பி வரும்.

    தான் எதிரியாக இருந்தால் எல்லோரும் எதிரிகள்.

    யாரை விரும்புகிறாரோ அவருடன்தான் இருப்பார்.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. இரண்டு இயக்கமும் சண்டை போடுவதால் பொது மக்கள் தான் குழம்பி போறார்கள் அதே போல் இரண்டு திராவிட கட்சியும் பிரதமர் பதவிக்கோ அல்லது 3 வது அணிக்கு தலைமை தாங்க போவதும் இல்லை.

    ஊழல் சிக்கிய காங்கிரஸ்க்கு ஓட்டு போடணும் இல்ல NOTA பட்டனை தான் அழுத்தணும் வேற வழி இல்லை.

    ReplyDelete
  12. ம ம Mohamed Ashraf விளக்கம்
    மயிலாடுதுறை வேட்பாளர் ஹைதர் அலி தோப்பதற்கு துவா செய்கிறேன் என்று கூறிய இவனுக்கும் நரேந்திர மோடிக்கும் என்ன வித்தியாசம் உள்ளது.

    இந்த வார்த்தையை சேர்மனுடைய மாமனார் சீரியசாக இருக்கும் பொது அந்த இடத்தில் த மு மு க வின் முன்னோடியிடம் கூறினார்.

    மா மா அஸ்ரப் அவர்களே அவதூர் பரப்புவதை நிறுத்திவிட்டு இறைய்வனிடம் மன்னிப்பு................ ஹிதாயத்தை உங்களுக்கு வழங்கட்டும் இல்லைய் என்றால் இறைய்வனின் சாபம் உண்டகட்டும்

    ReplyDelete
  13. ம ம காசிம் உங்களுக்கு விளக்கம்
    மயிலாடுதுறை வேட்பாளர் ஹைதர் அலி தோப்பதற்கு துவா செய்கிறேன் என்று கூறிய இவனுக்கும் நரேந்திர மோடிக்கும் என்ன வித்தியாசம் உள்ளது.

    இந்த வார்த்தையை சேர்மனுடைய மாமனார் சீரியசாக இருக்கும் பொது அந்த இடத்தில் த மு மு க வின் முன்னோடியிடம் கூறினார்.

    மா மா அஸ்ரப் அவர்களே அவதூர் பரப்புவதை நிறுத்திவிட்டு இறைய்வனிடம் மன்னிப்பு................ ஹிதாயத்தை உங்களுக்கு வழங்கட்டும் இல்லைய் என்றால் இறைய்வனின் சாபம் உண்டகட்டும்

    ReplyDelete

    ReplyDelete
  14. சென்ற உள்ளாட்சி தேர்தலில் உதயகுமாருக்கு ஆதரவாகவும் ராம குணசேரனுக்கு எதிராகவும் (இவர் ஹிந்து வெளியர்) என்று கூறினீர்கள் இப்போது அதே நிலைதானா
    உங்களுக்கு எதிரானவர்கள் முஸ்லிமாக இருந்தாலும் அவர்களை எதிர்க்கும் நீங்கள் எங்களை மட்டும் முஸ்லிம்களுக்கு எதிராக வேலை செய்யலாமா என்று கேள்வி கேட்பது நியாயமா?

    உங்களை நாங்கள் எதிர்ப்பதற்கு நிறையகாரணம் உள்ளது
    ஜனாஸாவை நபிவழியில் அடக்கம் செய்ய இடையுர் செய்வது
    தவ்ஹீத்வாதிகளை ஊர் நீக்கம் செய்வதற்கு உதவியது
    தவ்ஹீத் பள்ளிவாசல்களை அபகரித்தது
    சுனாமி பணத்தை தின்டது இன்னும் ஏறாலாம் ஏராலாம் இருக்கு

    எல்லாத்துக்கும் காரணம் நீ தானா ??

    இதை சும்மா சொல்லவில்லை சுண்டி சொல்கிறோம்

    ReplyDelete
  15. தவ்ஹீத் தவ்ஹீத் என்று கூறிக்கொண்டு தவ்ஹீதிற்கு மாறாக நிறைய விஷயங்களை கூறிக்கொள்ளும் உங்கள் பேச்சு எங்களுக்கு தெரியும்.

    ReplyDelete
  16. மயிலாடுதுறை வேட்பாளர் ஹைதர் அலி தோப்பதற்கு துவா செய்கிறேன் என்று கூறிய இவனுக்கும் நரேந்திர மோடிக்கும் என்ன வித்தியாசம் உள்ளது.

    இந்த வார்த்தையை சேர்மனுடைய மாமனார் சீரியசாக இருக்கும் பொது அந்த இடத்தில் த மு மு க வின் முன்னோடியிடம் கூறினார்.

    மேலே குறிபிட்ட இந்த வார்த்தை யார் கூறியது.

    கூறியது உண்மை என்றால் எனது கண்டனத்தை இங்கு பதிவு செய்கிறேன்.

    மயிலாடுதுறை வேட்பாளர் சகோதரர் ஹைதர் அலி அவர்கள் வெற்றி பெற நாம் துவா செய்வோம்.

    ReplyDelete
  17. உங்களின் விலைமதிப்பற்ற வாக்குகளை வீணடிக்க வேண்டாம்.

    ReplyDelete
  18. மான் shaikh அவர்களே இது உண்மை ஏகனவே MLA தேர்தலிலும் இதே வார்த்தையை உச்சரித்தவர் வக்காலத்து வாங்கிவரும் அஸ்ரப் வண்டவாளம் ,தண்டவாளத்துக்கு வந்ததன் விளைவு வீதிக்கு கொண்டு வந்து விட்டார் அல்பா பேடிக்கில் பார்த்தால் இரண்டுமே ASRAF ,ASLAM ,ADIRAI

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.