.

Pages

Tuesday, April 15, 2014

அதிரை பேரூராட்சி தலைவரோடு TRB ராஜா MLA சந்திப்பு ! [ படங்கள் இணைப்பு ]

தஞ்சை பாராளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் திரு. டிஆர் பாலுவுக்கு ஆதரவு தரக்கோரி அவராது மகனும், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினருமாகிய இன்று மதியம் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்களின் இல்லத்திற்கு வருகைதந்து சந்தித்து பேசினார். சந்திப்பின் போது திமுக ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹலீம், கடற்கரைதெரு, புதுத்தெரு, மேலத்தெரு, நடுத்தெரு ஆகிய தெருவை சேர்ந்த முக்கியஸ்தர்கள் உடனிருந்தனர்.

சந்திப்பு குறித்து பேரூராட்சி தலைவர் அஸ்லம் நம்மிடம் கூறுகையில்...
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும், சந்திப்பின் போது திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்டம் பணியை விரைந்து முடித்து தர தங்களின் ஒத்துழைப்பு தேவை என தான் கேட்டுக்கொண்டதாக நம்மிடம் கூறினார்.











1 comment:

  1. தேர்தல் முடிவும் வரை இந்த மாதிரி சந்திப்புகள் தொடரும். இப்போ ரயில் பிரச்னை முக்கியமா ? தண்ணீர் பிரச்னை முக்கியமா?

    நீங்க வெற்றிபெற்றாலும் எந்த பிரச்சனையும் தீர்க்க போறது இல்லை. அரசியல் வாதிகளை மக்கள் திருடர் போல தான் பார்கிறார்கள்.

    ஒருத்தன் வேலை செய்திட்டு கொள்ளை அடிக்கிறான் இன்னொருத்தன் வேலை செய்யாமல் கொள்ளை அடிக்கிறான் இது தான் உண்மையும் கூட.

    மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் யாருக்கு ஓட்டு போடணும் என்று.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.