தஞ்சை கிரிக்கெட் அசோசியேஷனின் மேற்பார்வையில் நடைபெறும் இந்த தொடர்போட்டியில் தமிழக அளவில் தலைசிறந்த 20 அணிகள் மோத இருப்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய முதல் ஆட்டத்தில் அருண் நெட்ஸ் தஞ்சை அணினரும், ABCC அதிரை அணியினரும் விளையாடினர். இதில் தஞ்சை அருண் நெட்ஸ் அணியினர் 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். முன்னதாக டாஸ் வென்ற ABCC அணியினர் பீல்டிங்கை தேர்வு செய்து விளையாடினார்கள்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட தஞ்சை கிரிக்கெட் அசோசியேஷன் துணைதலைவர் சீனிவாசன், காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைபள்ளியின் முன்னாள் விளையாட்டு ஆசிரியர் ராமச்சந்திரன், அதிரையின் முக்கியஸ்தர்கள் இப்ராகிம், பாருக், AFCC மேனேஜர் ஹுசைன், சேக்தம்பி, அனஸ் ஆகியோர் இன்றைய முதல் ஆட்டத்தை துவக்கி வைத்தார்கள்.
நிகழ்சிகள் அனைத்தையும் SIS முஹம்மது அழகாக தொகுத்து வழங்கினார். இன்றைய முதல் ஆட்டத்தை காண ஏராளமான கிரிக்கெட் பிரியர்கள் வருகைதந்து ரசித்தனர்.
செய்தி மற்றும் புகைப்படங்கள் :
இர்ஃபான் ( அதிரை தென்றல் )
Rompa mukkeyamana thakaval
ReplyDeletepathevukku nanre
thakavalukku nanre