25/04/2014 வெள்ளிக்கிழமை மக்ரிபு தொழுகைக்குப்பின் 7.30 மணியளவில் துபாயில் உள்ள TNTJ மர்க்கஜில் அதிரை TNTJ கிளையின் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது.
இக்கூட்டத்தில் துபாய் மண்டல தவாப்பணி செயலாளர் M.சஃபாத் அகமது அவர்கள் மார்க்க சிறப்புரையாற்றி கூட்டத்தை துவக்கிவைத்தார்.
கடந்த கூட்டத்தில் எடுக்கப் பட்ட நான்கு தீர்மானங்களில் மூன்று தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
1,அதிரை தௌஹீத் பள்ளியின் கட்டுமானப் பணியை விரைவில் முடிப்பதற்கு மீண்டும் வசூல் செய்வது.
2,TNTJ அதிரைக்கிளையின் சார்பாக கோடைகால பயிற்சி முகாமை ஏற்ப்படுத்துவது.
3,துபையில் நடைபெறும் TNTJ கூட்டத்தை அனைவருக்கும் அறியப்படுத்த செல்போன் மூலம் குறுந்தகவல் அனுப்பி மேலும் அதிக நபர்களுக்கு அறியச்செய்வது. அதற்க்கென தனி செல்போன் வாங்குவது.
[குறுந்தகவல் அனுப்புவதற்கான செலவை TNTJ சக உறுப்பினர்கள் பகிர்ந்து கொள்ள முன்வந்தவர்களை ஏற்றுக் கொள்ளப் பட்டது.] கடந்த கூட்டத்தில் பேசப்பட்ட வட்டியில்லா கடனுதவித்திட்டம் விரைவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்பதாக பேசப்பட்டன.
இக்கூட்டத்தில் புதிதாக எடுக்கப்பட்ட தீர்மானங்கள்
--------------------------------------------------------------
1, அதிரை TNTJ சார்பாக நடத்தப்படும் தெருமுனைப் பிரச்சாரம் மார்க்க சொற்ப்பொழிவு கூட்டங்களை புகைப்படம் எடுக்க டிஜிட்டல் கேமரா வாங்குவது.
2,மாத சந்தாதார்களை அதிகப்படுத்துவது.
ஆகிய மேற்கண்ட தீர்மானங்கள் அதிரை TNTJ கிளையின் செயலாளர், பொருளாளர்,உறுப்பினர்களால் கலந்து ஆலோசிக்கப்பட்டு கூட்டம் இனிதே நிறைவேறியது..
நல்லதே நடக்கட்டும்.
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.
மாஷா அல்லாஹ் ..! பணி மேலும் தொடர துவா செய்யும் -
ReplyDelete