.

Pages

Tuesday, April 15, 2014

அதிரையரின் உணர்வுக்கு மதிப்பளித்து தேமுதிக நகர செயலாளர் பதவியை தூக்கிவீசிய நூர் முஹம்மதுடன் சந்திப்பு ! [ காணொளி ]

அதிரை நெசவுத்தெருவை சேர்ந்தவர் நூர் முஹம்மது. சமூக ஆர்வலரான இவர் அதிரை பேரூராட்சியின் 18 வது வார்டு உறுப்பினராக பல முறை பணியாற்றியவர். அதிரை நகர தேமுதிகவின் செயலாளராக பொறுப்பில் இருந்து வந்தார். இவரின் கீழ் 450 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இவருக்கு பக்கபலமாக இருந்து வருகின்றனர்.

நடக்க இருக்கிற பாராளுமன்ற தேர்தலை ஒட்டி தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிடுகின்றன. தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த் மதவாத கட்சியான பிஜேபியோடு கூட்டணி அமைத்தனால் கட்சியில் பல்வேறு மட்டங்களில் உள்ள முக்கிய பொறுப்பாளர்களின் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. திராவிட காட்சிகளில் ஒன்றாக இருந்துவரும் தேமுதிக, திராவிட கொள்கைக்கு மாற்றமாக மதவாத கட்சியுடன் ஏற்பட்ட கூட்டணியை ஜீரணிக்க முடியாமல் பலர் பிற அரசியல் கட்சியில் சேர்ந்த வருவது தின நாளிதழ்களில் அன்றாட செய்திகளாக வந்த வண்ணம் இருக்கின்ற வேளையில், பிஜேபி சமீபத்தில் வெளியிட்ட தனது தேர்தல் அறிக்கையில் பொதுசிவில் சட்டம், அயோத்தியில் இராமர் கோவில் கட்டும் திட்டம் உள்ளிட்ட கொள்கைகள் இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் தாக்கம் அதிரையில் வசிக்கும் பெரும்பாலான இஸ்லாமியர்களின் மத்தியிலும் காணப்பட்டன. இவர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் விதமாக அதிரை நகர கிளையின் செயலாளராக பொறுப்பில் இருக்கும் நூர் முஹம்மது தனது ராஜினாமா கடிதத்தை தேமுதிக தலைமையகத்துக்கும், மாவட்டம் - ஒன்றியம் ஆகியவற்றின் பொறுப்பாளருக்கும் அனுப்பியுள்ளார் என்ற தகவல் நமக்கு கிடைத்தவுடன் இன்று அதிகாலை அவரது அலுவலத்தில் சந்தித்து பதவியை திடீரென தூக்கி வீசியது குறித்து பேசினோம்.

7 comments:

  1. தேமுதிக MLA எல்லாம் ADMK ல் தஞ்சம் இப்போ தொண்டர்கள், DMK எப்படி குடும்ப கட்சியோ அதேபோலே தான் தேமுதிக மாற்றமே இல்லை.

    ஒரு அரசியல் தலைவருக்கு உள்ள நல்ல பண்பு விஜயகாந்திடம் கிடையாது, சட்டமன்றத்தில் பேசும்போது நாக்கை துருத்துவதும், ரயில்வே நிலையத்தில் முண்டியடித்து பார்க்க துடித்த தொண்டரை பளார் என்று அடிப்பதும், சேலத்தில் நடந்த மாநாட்டில் நிற்கவே முடியாமல் தடுமாறியதும், கூட்டத்தினரை பார்த்து கண்டிப்பதும் பதறுவதும்..கோபப்படுவதும்..இதுதானா வி காந்த லட்சணம்?

    இதனால தான் தொண்டர்கள் கட்சியே விட்டு வெளியேறுகிறார்கள். பேசவே தெரியாது ஆனா ஆட்சி செய்ய வேண்டுமாம்!

    விரைவில் விஜயகாந்தும் கட்சியே களைத்து விட்டு நடிக்க வந்துடுவார். கோமாளி அரசியலில் விஜய்காந்தும் ஒருவர்.

    ஒன்றுக்கும் வுருப்படாத பதவியே தூக்கியெறிந்த உங்கள் செயலுக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. பதவியே தூக்கியெறிந்த உங்கள் செயலுக்கு பாராட்டுக்கள்.kaka

    ReplyDelete
  3. பதவியே தூக்கியெறிந்த உங்கள் செயலுக்கு பாராட்டுக்கள்.kaka

    ReplyDelete
  4. மதக்கொள்கையைவிட பதவி ஒன்றும் முக்கியமில்லை, இதற்கான நற்கூலியை வல்லை இறைவன் கொடுப்பான்

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. பதவியே தூக்கியெறிந்த உங்கள் செயலுக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. தம்பி, இங்கே பாருங்க.
    இந்த நேரத்தில் உங்களை கவுக்க நிறைய பேர் இருக்காங்க. ஜாக்கியாக காய்களை நகர்த்தணும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.