.

Pages

Wednesday, April 16, 2014

மல்லிபட்டினம் கலவரம் தொடர்பாக கைதானோரின் விவரம் !


தஞ்சை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேதுபாவசத்திரம் ஒன்றியத்தின் கீழ்வரும் மல்லிபட்டினம் பகுதிகளில் வாக்கு சேகரிப்பதற்காக பிஜேபி சார்பில் வேட்பாளராக போட்டியிடும் கருப்பு (எ) முருகானந்தம் நேற்று தனது தொண்டர்களுடன் வருகை தந்தபோது ஏற்பட்ட கலவரத்தில் ஏராளமான பொருட் சேதத்துடன் பலரும் பாதிப்படைந்தனர்.

கலவரத்தின் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் இரவு மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் கடலுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகள் சேதப்படுத்தப்பட்டன. படகுகளுக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது. படகின் அடிப்பகுதியில் உள்ள நீரை வெளியேற்றும் குழாய்களை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனால் படகின் உள்ளே கடல்நீர் புகுந்து சுமார் 10-க்கும் அதிகமான விசைப்படகுகள் மூழ்கிவிட்டதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்தனர். 

இந்த கலவரம் தொடர்பாக இதுவரையில் மல்லிப்பட்டினம் ரகுமான்கான் (வயது 26), லாம்தீன் (30), முகமது மஜீது (32), சாகுல் ஹமீது (30), முகமது ஹபீஸ்(22), அபுபைதா (47), நவாப்கான் (37), சையது இப்ராம் (47), பசுலுல் ஹக் (67), ஹாஜா (36), பைசல்கான் (22), முகமது அஸ்கர் (26), இத்தியாக்அமீது (28), முகமது இர்பான் (28), நசுருதீன் (34), முகமது யாசின் (51), ரஸ்க்அல்லா (23), முகைதீன் சேக் (30), லுத்துபுல்லா (46) மற்றும் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த பிஸ்மில்லாகான் (27) ரகுமத்துல்லா (30) ஆகியோர் ஒரு தரப்பிலும் மற்றொரு தரப்பில் மல்லிப்பட்டினம் ராமர்கோவில் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் (60) சித்திரவேல் (45) அம்மையப்பன் (32) சின்னமணி (27) சக்திவேல் (25) ராஜேந்திரன் (45) ராமநாதன் (20) மகாலிங்கம் (30) தனபால் (34) ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செய்தி உதவி : தினத்தந்தி
புகைப்படங்கள் : அதிரை நியூஸ்




No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.