.

Pages

Thursday, April 17, 2014

மழைத்தொழுகையில் 'சமூக ஆர்வலர்' அதிரை மாணிக்கம் முத்துசாமி பங்கேற்பு ! [ காணொளி ]

இன்று காலை பிலால் நகரில் நடைபெற்ற மழைத்தொழுகையில் நமதூரை சேர்ந்த 'சமூக ஆர்வலர்' மாணிக்கம் முத்துசாமி அவர்கள் கலந்துகொண்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

'சமூக ஆர்வலர்' மாணிக்கம் முத்துசாமி அவர்களைபற்றிய சிறுகுறிப்பு :
அதிரை கரையூர் தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் முத்துசாமி [ வயது 64 ]. மத்திய தொழிற்கூட பாதுகாப்பு படையின் [ CISF ] தலைமை காவலராக கடந்த 36 ஆண்டுகாளாக பணிபுரிந்துள்ள இவர் தற்போது ஓய்வில் பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அனைத்து மதத்தினருடன் இணக்கமாக பழகக்கூடியவர். பல்வேறு மொழிகள் பேசக்கூடியவர்களுடன் பணிபுரிந்துள்ள அனுபவத்தை பெற்றுள்ளதால் 10 க்கும் மேற்பட்ட மொழிகளை பேசக்கற்றுள்ளார். கடந்த சுனாமி பேரழிவின் போது கல்பாக்கம் பகுதிகளில் பாதுகாப்பு தொடர்பாக சிறப்பாக சேவை செய்தமைக்காக சிறந்த விருதை பெற்றிருப்பவர்.

மாணிக்கம் முத்துசாமி அவர்கள் தன்னை பற்றியும், மழைத்தொழுகையில் கலந்துகொண்டதை பற்றியும் நம்மிடம் கூறுகையில்... 


( தொழுகையில் பங்குபெற்ற மாணிக்கம் முத்துசாமி அவர்களுக்கு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயலாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் 'மாமனிதர் நபிகள் நாயகம்' புத்தகத்தை வழங்கியபோது எடுத்தபடம். அருகில் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் TNTJ தஞ்சை தெற்குமாவட்ட துணை தலைவர் தாவூது மற்றும் கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர். )


8 comments:

  1. இன்றைய சூல்நிலைக்கு ஒரு எடுத்துக்காட்டுடான மனிதர்.வேற்றுமையில் ஒற்றுமை என்னும் அடைமொழிக்கு சொந்தகாரர்களில் இவரும் ஒருவர்.

    ReplyDelete
  2. he should convert our common religion ISLAM.thanks

    ReplyDelete
  3. மதநல்லிணக்கம் ஏற்பட உங்களை போன்றோர் சமூகத்தில் அதிகமானோர் உருவாக வேண்டும்.

    ReplyDelete
  4. இன்றைய சூல்நிலைக்கு ஒரு எடுத்துக்காட்டுடான மனிதர்.வேற்றுமையில் ஒற்றுமை என்னும் அடைமொழிக்கு சொந்தகாரர்களில் இவரும் ஒருவர்.

    ReplyDelete
  5. மனிதர் வாழ்கின்ற உலகில் வன்முறைகள் மறைந்து, மனித இனம் ஒரே மதம் என்னும் கருத்து நடைமுறை வாழ்வில் உண்மையாகும்போது உலக அமைதி ஏற்படும்.

    ReplyDelete
  6. மனிதர் வாழ்கின்ற உலகில் வன்முறைகள் மறைந்து, மனித இனம் ஒரே மதம் என்னும் கருத்து நடைமுறை வாழ்வில் உண்மையாகும்போது உலக அமைதி ஏற்படும்.

    ReplyDelete
  7. தற்பெருமைக்காக நடத்தப்பட்ட தொழுகை இறை அச்சத்தோடு அல்ல.

    ReplyDelete
  8. நம்முடைய பிராதனைஇல் கலந்துக்கொண்ட மாணிக்கம் முத்துசாமி அவர்களின் செயல் மனிதநேயத்தை வளர்பதோடு மத நன்னிலக்கத்தை வளர்க்கிறது.

    இதே போல் நாம் " அங்கே" நின்றாள் நமக்கு ஒரு முத்திரை குத்தப்படும் . பிரிவினை ஏற்படுத்தி மனிதன் மதத்தை வளர்கிறான்!. மனித நேயம் ஓங்கட்டும் !!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.