.

Pages

Monday, April 14, 2014

அதிரையில் எளிமையாக வாக்கு சேகரித்த தமிழ்செல்வி !

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை தொகுதி வேட்பாளராக போட்டியிடும் எஸ். தமிழ்செல்வி நேற்று இரவு அதிரையில் எளிமையான பிரசாரத்தை மேற்கொண்டார். குறிப்பாக ஆட்டோ, இருசக்கர வாகானங்கள் அணிவகுப்பு இல்லாததும், வெடி வேடிக்கைகள் காதை பிளக்காததும், ட்ராபிக் ஜாமாகததும், வேட்பாளரின் முகத்தை மூடி மறைக்கும் அளவில் கொடிகள் இல்லாததும் பொதுமக்களை பெரிதும் கவர்ந்தது. எளிமையாக காட்சியளித்த வேட்பாளர் தனது பேச்சில் மக்கள் பிரச்சனையை முன்னுறுத்தி பேசியது ஹைலைட்டாக அமைந்தது.

இந்த வாக்கு சேகரிப்பில் மாவட்ட - ஒன்றிய - நகர நிர்வாகிகள், கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்துகொண்டனர்.


8 comments:

  1. கம்யூனிஸ்ட் கொள்கை இஸ்லாத்துக்கு நேர் எதிரானது,இவர்களை நாம் புறக்கணிக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. அப்படி என்னா கொள்கை என்று சுருக்கமாக விவரித்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

      Delete
  2. இந்த கட்சி மட்டுமில்லே தமிழகத்தில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிரான கொள்கையை கொண்டுள்ளது.

    ReplyDelete
  3. திராவிட கொள்கையும் இஸ்லாத்திற்கு எதிரானதுதான் அதனை ஆதரிக்கவில்லையா?

    ஆனால் கம்யூனிஸ்ட் கொள்கை தவிர்த்து பார்த்தால் மதவாத அரசியலுக்கு அவர்கள் எதிரானவர்கள் என்பதால் பிற மதவெறி பிடித்த கட்சிகளிலிருந்து மாறுபட்டவர்கள் என்கிற கருத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரிப்பதில் தவறில்லை.

    ReplyDelete
  4. எளிமையான கட்சி,

    ReplyDelete
    Replies
    1. ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கு.

      Delete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.