.

Pages

Wednesday, April 30, 2014

அதிரையில் மே 11 முதல் வர்த்தக மற்றும் கலாச்சார பொருட்காட்சி !

வர்த்தக மற்றும் கலாச்சார அமைப்பின் சார்பில் கடந்த வருடத்தை போல் இந்த வருடமும் அதிரை மற்றும் அதிரையை சுற்றி வசிக்கக்கூடிய மக்களுக்கு பொழுதுபோக்கு மற்றும் வர்த்தக பயன்பாடுகளை மையமாக வைத்து நடப்பு கல்வி ஆண்டின் விடுமுறை தினங்களில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பொருட்காட்சி நடைபெற இருக்கிறது.

இதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிரை சாரா திருமண மஹாலில் கூட்டப்பட்ட சிறப்பு கூட்டத்தில் பொருட்காட்சியை ஏற்று நடத்த நிர்வாக கமிட்டி அமைக்கப்பட்டது. இதில் பொருட்காட்சி தொடர்பான ஆரம்பகட்ட பணிகளை விரைவாக மேற்கொள்வது எனவும், பொருட்காட்சியை எதிர்வரும் 11-05-2014 முதல் 25-05-2014 வரை நடத்தி முடிப்பது என தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து கமிட்டியாளர்களால் இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.





9 comments:

  1. ஹைய்யா ............வந்துடுச்சு ........நடுத்தெருவு கந்தூரி???

    ReplyDelete
  2. தமிழில் கணினியில் எழுதத் தெரிந்தால் எதை வேண்டுமானாலும் எழுதலாம். இதுவும் ஒரு சுதந்திரம்.

    ReplyDelete
  3. //Ansari Adirai30 April 2014 14:59
    தமிழில் கணினியில் எழுதத் தெரிந்தால் எதை வேண்டுமானாலும் எழுதலாம். இதுவும் ஒரு சுதந்திரம்.//

    எந்த வகையிலும் அனாச்சாரங்கள் மற்றும் கேலி கூத்துகள் ஒழிக்கப்படவேண்டும் அதற்காக இப்படி புதிதாக ஒரு கப்ரு இல்லாத கந்தூரியை Modification செய்து அதற்கு வர்த்தக பொருட்காட்சி என்று பெயர்வைத்து வருடாவருடம் அதில் பணம் பார்ப்பதையும் மக்கள் ஒருபோதும் அனுமதிக்க கூடாது அது கப்ரை வணங்ககூடிய இடமாக இருந்தாலும் அல்லது அது கப்ரு இல்லாத இடமாக இருந்தாலும் சரியே. சென்ற ஆண்டு நடந்த முதல் பொருட்காட்சியில் இவர்களுக்கு எத்தனை மில்லியன் லாபம் கிடைத்தது ? அல்லது அதனால் அதிரை வர்த்தகர்கள் அடைந்த பயன்தான் என்ன ?அதை பொதுமக்களுக்கு மத்தியில் இந்த அமைப்பாளர்களால் பட்டியல் இட்டு காட்டமுடியுமா?

    ReplyDelete
  4. இருக்கின்ற கலாச்சாரம் போத வில்லை என்று இதுமாதிரி புதுமையான கலாச்சாரம், கடந்த ஆண்டு கடுமையான எதிர்ப்பு யிருந்தது. இந்த ஆண்டும் இருக்கும்.

    "கந்தூரி" இது தமிழ் வழியா அல்லது வடநாட்டு வழியா?

    இதுவும் கந்தூரிதான். காலேஜ் முகம் பயலுக ரெடியாக நிப்பாணுக.

    ReplyDelete
  5. அதிரை கலாச்சார திருவிழாவில் சென்ற வருடம் அரங்கேற்றிய மார்க்கத்திற்கு புறம்பான செயல்கள் இவ்வருடம் இருக்காது என நம்புகிறோம், சென்ற வருடம் அந்த அமைப்பில் இருந்த சிலர் அனாச்சாரங்களுக்கு துணைபோனதால் தங்களின் தவறை எண்ணி அந்த அமைப்பில் இருந்து விலகிவிட்டனர்.

    அதையும் மீறி இவ்வருடமும் அப்படித்தான் செய்வோம் என்றால் அனைத்து சங்கங்கள் மற்றும் ஜும்'ஆக்களில் அதற்கு எதிரான பரப்புரை நடைபெறும் இன்ஷா அல்லாஹ்.

    குறிப்பாக, இக்குழுவில் தற்பொழுது த.த.ஜ வின் சகோ பஷீரும் இருக்கிறார் என்று தெரிகிறது. தவ்ஹீத் சிந்தனையுள்ள அவர் அனாச்சாரங்களுக்கு துணை போகாமல் எதிர்ப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்.

    ReplyDelete
  6. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED.
    Consumer & Human Rights
    Thanjoor District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. உள்ளூரில் பொருட்காட்சி,அருங்காட்சி நடத்தினால் பார்த்தால் தவறு இதே பட்டுக்கோட்டை,சென்னை போன்ற ஊர்களில் போய் பார்த்துவிட்டு நடந்தால் தவறு கிடையாது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.