இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஆ. சுப்பிரமணி பங்கேற்றார். இம்முகாமில் அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள், லயன் சங்கத் தலைவர் அஹமது, செயலாளர் பேராசிரியர் செய்யது அஹமது கபீர், பொருளாளர் சாகுல் ஹமீது மற்றும் லயன்ஸ் சங்க ஏனைய நிர்வாகிகள் ஜலிலா ஜுவல்லரி முஹம்மது மொய்தீன், லியோ சங்க நிர்வாகிகள் நியாஸ் அஹமது, அதிரை மைதீன் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
மலேரியா குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுங்கள் பொதுமக்களிடம் விநியோகிக்கப்பட்டது.
இதில் மலேரியா நோயை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் பற்றி விவரிக்கப்பட்டது. மேலும் 5 முதல் 7 நாட்கள் வரை தொடர் காய்ச்சல். குளிருடன் கூடிய நடுக்கம். உடல்வலி, தலைவலி ஏற்பட்டால் மலேரியா நோயின் அறிகுறிகள் ஆகும்.
தீவிர மலேரியா நோயின் அறிகுறியாக அதிகமான காய்ச்சல், நினைவு இழத்தல், குழப்பமான மனநிலை, நடக்கமுடியாமை, மயக்கம், வாந்தி, சிறுநீர் பிரியாத நிலை, கடுமையான வயிற்றுப்போக்கு, மூக்கு மற்றும் ஈறுகளில் ரத்தக்கசிவு, ரத்தசோகை ஏற்படும். மேற்கூறிய அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதாரநிலைய மருத்துவரை அணுக வேண்டும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மலேரியா நோய்க்கான பரிசோதனையும், மருந்து மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதனை தடுக்க, தூங்கும்பொழுது கொசுவலை பயன்படுத்த வேண்டும். வீட்டின் கதவு, ஜன்னல் போன்றவற்றில் கொசு புகாதவாறு வலை கட்ட வேண்டும். கொசுவிரட்டும் சாதனங்களை பயன்படுத்தலாம். வீட்டிலுள்ள உபயோகமற்ற பாத்திரங்களை அகற்ற வேண்டும் என பிரசாரத்தில் வலியுறுத்தப்பட்டது.
அன்புள்ள அதிரை நியூஸ் நிர்வாகிகளுக்கு நேற்று உங்கள் தளம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது யங்களுக்கு வருத்தம் அளித்து உள்ளது.சகோதரர் சாகுல் ஹமீது அவர்கள் உங்கள் தளத்தை விட்டு விலகிய காரணம் என்ன?அவர் மீது ஏதாவது குற்றச்சாட்டு எழுந்ததா? விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்,
ReplyDeleteராஜா முஹம்மது `
இப்ப இதுவா முக்கியம். மூன்று வருஷம் போராடி தார் ரோடு பஸ் ஸ்டாண்டிலிருந்து மகிழன்கோட்டை வரைக்கும் போடுறாங்க. ரோடு வேண்டி பலப் போராட்டம். ஆனால் அந்த ரோடு வரும் மழையில் காணாமல் போய்விடும். மீண்டும் பள்ளம் குழிதான். பொருக்கு மண்னைக்காட்டிலும் மோஷம். பல இடங்களை பழைய ரோட்டை தோண்டவில்லை. அதிக இடங்களில் 1 1/2 ஜல்லி போடலை. மேலே போடும் 3/4 ஜல்லியும் மெல்லிய தோல்போல். மதிப்பு 55 இலட்சத்திற்கு மேல். அதில் எப்படியோ .....? யார் இதன் தரத்தை நிர்ணயிப்பது ?????? இல்லை என்று போராடுவோம். அது மட்டும்தான் நமக்கு தெரிந்ததோ ?
ReplyDeleteபுது புது நோய்கள் உருவாகும் இக்காலத்தில் சுகாதார விழுப்புணர்வு அவசியத்தை மக்களுக்கு சென்றடைய மீடியாக்களில் அரசு விளம்பரம் செய்ய வேண்டும்.
ReplyDeleteதுண்டு பிரசுங்கள் சுண்டல் மடிக்க தான் உபயோகமாகிறது. சுவற்றின் விளபரன்களே மக்களை கவரும்!