.

Pages

Thursday, April 10, 2014

காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆயிஷா சித்திக்கா சாதனை !


அதிரை காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைபள்ளியில் பத்தாம் வகுப்பில் கல்வி பயிலும் நமதூர் A. தமீமுல் அன்சாரி அவர்களின் மகள் ஆயிஷா சித்திக்கா [ அதிரை அன்வர் அவர்களின் பேத்தி ] நடப்பு கல்வியாண்டில் ஜி.ஆர் பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் மாநில அளவில் நடத்திய ஆங்கிலப்பாட போட்டியில், தங்கப்பதக்கமும் ரொக்க பரிசும் பெற்று சாதனை படைத்துள்ளார். மாநில அளவில் சாதனை நிகழ்த்திய மாணவிக்கு காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் முனைவர் ஏ. ஜலால் அவர்கள் மாணவிக்கு பரிசு வழங்கி பாராட்டுதலை தெரிவித்தார்.

மேலும் பள்ளிக்கு பெருமை சேர்த்து தந்த மாணவி ஆயிஷா சித்திக்காவுக்கு பள்ளி நிர்வாகத்தினர், பள்ளியின் தலைமை ஆசிரியை, ஆசிரியைகள், அலுவலக பணியாளர்கள், பெற்றோர்கள் - மாணவிகள் ஆகியோர் பாராட்டுதலையும் - வாழ்த்துகளையும் அன்புடன் தெரிவித்துக்கொண்டனர்.

தமிழக அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் பல்வேறு பள்ளிகள் கலந்து கொண்டதில் நமது பள்ளி முதல் பரிசை தட்டிச்சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



21 comments:

  1. பள்ளிக்கு பெருமை சேர்த்து தந்த மாணவி ஆயிஷா சித்திக்காவுக்கு வாழ்த்துகள்!!!!!!!

    ReplyDelete
  2. அதிரை வரலாற்றில் இதுதான் முதல் சாதனை என நினைக்கிறேன். பள்ளியின் வெற்றிகள் எதிர்வரும் தேர்வின் சதவீதத்திலும் தொடர வேண்டும்.

    மாணவி ஆயிஷா சித்திக்கா, பள்ளி ஆசிரியைகள், மாணவியின் பெற்றோர் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. 98 மதிப்பெண் எடுத்து முதலாவதாக வந்த எங்கள் சகோதரர் தமீம் அவர்களின் மகளும் அதிரை அன்வர் காக்கா அவர்களின் பேத்தியுமான மாணவி ஆயிஷா சித்தீகா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    மேலும் அதே தேர்வில் எனது மகள் தாஹிரா அவர்கள் 95 மதிப்பெண்ணுடன் இரண்டாம் இடத்தையும், மறைந்த சகோதரர் ஹாஜா (மதினாப்பா பேரன்) அவர்களின் மகள் சப்ரீன் அவர்கள் 93 மதிப்பெண்ணுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றார்கள் என்பதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

    ReplyDelete
  4. ஊருக்கும்,பயின்ற பள்ளிக்கும்,உதவிய ஆசிரியர்களுக்கும் பெற்றறேடுத்த பெற்றோர்க்கும் பெருமை சேர்த்த மாணவியை மனமார பாராட்டுகிறேன்,வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  5. இரண்டாம் இடமும் மூன்றாம் இடமும் நமதூர் பள்ளி அளவில் தான், மாநில அளவில் அல்ல.

    ReplyDelete
  6. சாதனை படைத்த மாணவிகளுக்கும், ஒத்துழைப்பு கொடுத்த பெற்றோர்களுக்கும் பயிற்சி கொடுத்த ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள் - சாதனைகள் தொடரட்டும்.

    ReplyDelete
  7. பதிவுக்கு நன்றி.

    இதுபோல் அனேக சான்றிதழ்கள் வழங்கும் காட்ச்சிகள் பல வருடங்களாக நமதூர் இணைய தளங்களிலும் ஊடகங்களிலும் வந்த வண்ணம் இருக்கின்றன. மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இதெல்லாம் பார்ப்பதற்கு அழகாக இருக்கின்றது.

    அழகாக இருக்கின்றதே ஒழிய, படித்த ஒரு பிள்ளையாவது நமதூரில் இயங்கும் அரசு சார்ந்த அல்லது தனியார் சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிகின்றனரா என்று பார்த்தால் ஒருத்தரும் இல்லை, பணியில் இருக்கும் எல்லோரும் வெளியூர்காரர்களே, ஏன் இந்த அவல நிலை நமதூருக்கு?

    கல்யாண பத்திரிக்கைகளிலும், பெயருக்கு பினாலும் போட்டுக் கொள்ளவா படிக்கின்றனர். படிப்பில் ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும்.

    படித்து சான்றிதழ்களை பெரும் மாணவச் செல்வங்களே, உங்களை நம்பி இந்த ஊர் இருக்கின்றது என்பதை கனவிலும் மறந்து விடவேண்டாம்.

    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
    உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  8. மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள், தமீம் காக்க லண்டனில் இருந்ததால் பிரிட்டிஷ் இங்கிலீஷ் பயிற்சி போல.


    Fazee Canada

    ReplyDelete
  9. இந்த சாதனை பயின்ற பள்ளிக்கு மட்டுமல்ல நமதூருக்கே பெருமையை சேர்த்த ஒரு சாதனை. இச்சாதனை மாணவியை ஊக்கப்படுத்தி மேலும் பல சாதனை புரியவைப்பதுடன் சாதனையுடன் நிறுத்திக் கொள்ளாமல் ஜமால் காக்கா சொல்வதைப்போல ஒரு அரசு அதிகாரியாகவோ பெரிய நிலையிலோ கொண்டுவர பெற்றோர்கள் முயற்ச்சிக்க வேண்டும்.

    நமதூர் மாணவிகளுக்கு எவ்வளவோ திறமைகள் இருந்தும் பெற்றோர்களின் விருப்பமின்மையாலும், கட்டுப்பாட்டாலும் பல திறமைகள் மறைந்து விடுகின்றன.

    ReplyDelete
  10. பள்ளிக்கும் ,ஊருக்கும் பெருமை சேர்த்த சகோதரி ஆயிஷா சித்திக்காவுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.....

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள்
    நமது பெண் பிள்ளைகளை படித்தது போதும் என்று படிப்பை பாதியில் நிறுத்திவிடாதிர்கள். இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாதவன் கூழோ கஞ்சியோ குடித்து படித்துவிடுகிறான். அவனுக்கு சமுதாயத்தில் நல்ல மதிப்பு கிடைக்கிறது. இஸ்லாமியன் வெளிநாட்டு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு ஒரு குறிக்கோளும் இல்லாமல் வாழுகிறான். வெளிநாட்டில் அடிமையா வாழுகிறான் மேலும் மற்ற சமுதாய மக்களிடம் கைகட்டி நிற்கக்கூடிய நிலை நம்முடைய சமுதாயத்திற்கு ஏற்படுகிறது. இந்த அவல நிலை மாறவேண்டும் என்றால் நம் சமுதாயம் நல்லா படிக்கவேண்டும். வெளிநாட்டு மோகம் ஒழிய வேண்டும். உள்ளுரில் தொழில் தொடங்க வேண்டும், அரசு துறையிலும் , தனியார் துறையிலும் வேலை செய்யவேண்டும்.

    ReplyDelete
  12. பள்ளிக்கு பெருமை சேர்த்து தந்த மாணவி ஆயிஷா சித்திக்காவுக்கு adiraieast guys வாழ்த்துகள்!!!!!!!

    ReplyDelete
  13. nam samudaiya pengal saadhika koodiyavarhal

    ReplyDelete
  14. மாஷா அல்லாஹ் பள்ளிக்கு பெருமை சேர்த்து தந்த மாணவி ஆயிஷா சித்திக்காவுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  15. மாஷா அல்லாஹ் மென்மேலும் வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. மாசா அல்லாஹ். வாழ்த்துக்கள்.

    நமதூரைப் பொறுத்தவரை பெண் பிள்ளைகள் படித்து முடித்த பின் வேலைக்கு போகவேண்டும் என்று விரும்புவதைவிட திருமணமானபின் மாமியார் வீட்டில் போய் குடித்தனம் நடத்த முன்வந்தாலே பொருளாதார சுமை பாதி அளவிற்கு குறைந்துவிடும்.

    இசுலாமிய அடிப்படை கொண்ட நமதூரில், திருமணமானபின் மாமியார் வீட்டில் தான் வசிக்கவேண்டும் என்று மாணவிகளுக்கு பள்ளிகள் ஏன் இந்த அடிப்படை அறிவை வளர்க்கவில்லை, போதிக்கவில்லை என்று நீண்ட நாட்களாக எனக்கு கோபம் இருக்கிறது. இனியாவது இத்தகைய சிந்தனையை, பெண் பிள்ளைகளிடம் வளர்க்க பள்ளிகள் முன்வரவேண்டும். இது தான் நமதூரின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கான கல்வி நிலையங்களின் பங்களிப்புகளில் முக்கியமான ஒன்றாக இருக்க முடியும்.

    ReplyDelete
  17. பெண்களுக்கு படிப்பறிவு எவ்வளவு முக்கியமோ அதேபோல் பட்டறிவும் முக்கியம்.

    பட்டறிவை பள்ளியில் பயில முடியாது.

    ReplyDelete
  18. மாஷா அல்லாஹ் பாராட்டக்கூடிய ஒரு வெற்றி....

    எனது சஹோதரிக்கு வாழ்த்துக்கள்....

    பள்ளியில் நடக்கும் நல்லதை மட்டும் மக்களுக்கு முன்னில் வைக்கிறிங்களே சகோதரர்களே பள்ளியில் படிக்கும் மாணவிகள் எவ்வளவு கீழ்தனமாக நடக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா ? அதையும் பரப்புங்கள்.... பள்ளியில் வாகனம் ஓட்டுகிறோம் என்று தங்கள் சஹோதரிகளை சீரழிக்கும் ஒரு கூட்டம், பெற்றவர்களையும், ஆசிரியர்களையும் ஏமாற்றிவிட்டு தொலை பேசியில் அந்நியனுடன் உரையாடும் ஒரு கூட்டம். பள்ளிக்கு செல்பவர்கள் படிகிறார்கள் என்று பெற்றோர் நினைகிறார்கள். ஆனால் படிப்பது 75% பெண்கள் தான் மீதம் 25% மார்கத்தின் சீரழிவுக்கு வழி வகுத்து கொண்டு இருகிறார்கள்.
    நாளைக்கு 25% ........... 50% ஆஹலாம்
    நான் பதிவு செய்து இருப்பது எனக்கு தெரிந்த சில....
    பள்ளி நிர்வாகிகள் இதை படித்து தனது குழந்தைகள் அதாவது மாணவிகளை நல்வழியில் நடத்துமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்....

    இதற்கு தீர்மானம் : -
    1. பள்ளியில் சொந்தமாக வாகனங்களை இயற்ற வேண்டும். பள்ளியில் இயலும் வாகனங்கள் வெளியில் உள்ள கட்டணத்தை விட கொஞ்சம் குறைவாக இருக்க வேண்டும். வாகன ஓட்டுனர்கள் வயது 35க்கு மேல் இருக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் தந்தை ஸ்தானத்தில் உள்ளவர்கள்....
    2. பள்ளிக்கு செல்போன் கொண்டு வரும் மாணவிகளை பள்ளியை விட்டு நீக்க வேண்டும். ஒரு பெண்ணை நீக்கினால் மற்றொரு பெண் அடுத்து செல் போன்கொண்டு வர யோசிப்பார்கள்.
    3. பள்ளியில் தடுத்து விட்டால் போதும். அவர்கள் வீட்டில் தாய் கண்டிப்பது அவர்களுடைய கடமை அப்படி கண்டிக்காமல் இருந்தால் அல்லாஹ்விற்கு அவர்கள் பதில் சொல்லும் நாள் வரும்.

    இதனை செயல் படுத்துபவர்களுக்கு அல்லா நற்கூலி வழங்குவான்...

    இப்படிக்கு எனது சமுதாய சஹோதரிகளின் நலன் கருதி.

    சஹோதரன்...

    ReplyDelete
  19. மாஷா அல்லாஹ்

    மாணவியின் சாதனைக்கு உறுதுனையாக இருந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு வாழ்த்துக்கள்.

    10 ஆம் வகுப்பு பொதுத்தேர்விலும் மாநிலத்தில் முதல் இடம் பெற பிராத்திக்கிறோன்

    ReplyDelete
  20. பள்ளிக்கும் ,ஊருக்கும் பெருமை சேர்த்த சகோதரி ஆயிஷா சித்திக்காவுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.....

    ReplyDelete
  21. மாஷா அல்லாஹ்..

    மிகவும் சந்தோசமான விஷயம். அல்லாஹ் இந்த பெண்ணிற்கு உதவி செய்வானாக..

    நன்றாக படிப்பவர்கள் சமுதாயத்திற்கு உதவி செய்ய வேண்டும். அதாவது அவர்கள் படிக்கும் படிப்பினை சமுதாயத்திற்கு பிரயோஜனமாக செயல்படுத்த வேண்டும்..

    Anyway.. May Allah peace and blessings upon her.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.