.

Pages

Wednesday, April 16, 2014

மல்லிபட்டினம் கலவரம் - மாயவரம் வெற்றி வாய்ப்பு - TNTJ தேர்தல் நிலைப்பாடு ஆகியன குறித்து மமக பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரியோடு நேர்காணல் ! [ காணொளி ]

ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பதற்காக தமிழகமெங்கும் சுற்றுபயணம் மேற்கொண்டு வருகிறார்.

இன்று காலை அதிரை தமுமுக / மமக அலுவலகத்திற்கு வருகை தந்த அவரை அதிரை நியூஸ் சார்பாக அணுகி கூட்டணி கட்சிகளின் வெற்றி வாய்ப்பு நிலவரம், மயிலாடுதுறை தொகுதி மமக வேட்பாளர் ஹைதர் அலி வெற்றி வாய்ப்பு, மாயாவரம் தொகுதி தொடர்பாக தவ்ஹீத் ஜமாத் எடுத்துள்ள தேர்தல் நிலைப்பாடு, கடந்த சில நாட்களுக்கு  முன்பு அதிரை அருகே உள்ள மல்லிபட்டினத்தில் நடந்து முடிந்த கலவரம் தொடர்பாக மமக மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கைகள் ஆகியன குறித்து கேட்க்கப்பட்டது.

இதோ அவருடைய பதில்...


மமகவின் மாநில பொதுச்செயலாளர் தமீமுல் அன்சாரியை திமுக நகர அவைத்தலைவர் அப்துல் காதர், செயலாளர் இராம.குணசேகரன், துணைச்செயலாளர் அன்சர்கான், ஒன்றிய பிரதிநிதி சபீர்,வார்டு செயலாளர் ப.கு பகுருதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்கள். அப்போது தமுமுக - மமக மாவட்ட - ஒன்றிய - கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர்.


6 comments:

  1. சகோ.தமிம் அன்சாரி அவர்களின் முதுர்ச்சியான அரசியல் அனுபவமிக்க நாகரிகமான பேட்டி.

    ReplyDelete
  2. மாயவரம் தொகுதிக்கு ஆதரவு கேட்டு TNTJ நிர்வாகிகளை அணுகலாமே ?

    ReplyDelete
  3. TNTJ ம ம கட்சிக்கு எதிராக வேலை செய்வதை கண்டிப்பாக வரவேற்பவர் தமீம் அன்சாரி இவருக்கு முதல் எதிரியே ஹைதர் அலி தான்

    ReplyDelete
  4. எனக்கு ஒன்னும் தெரியலே.

    ReplyDelete
  5. அரசியல் தெரியாதவர்கள் மமக!... பாவம்.

    வீட்டில் இருக்கிற வெண்ணெய்யை விஷமென நம்பி, வெளியில் சென்று விஷம் குடிக்கிறார்கள்.

    எல்லோரும் மண்ணடியில்... இவர்களோ ஊராரின் காலடியில்.

    இன்றில்லையென்றாலும் என்றைக்காவது மண்ணடிப் படிகள் ஏறித் தான் ஆக வேண்டும். இது இறைவன் கொடுத்திருக்கும் கண்ணியம்.

    இல்லையென்றால் காணமல் போவது உறுதி

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.