.

Pages

Thursday, April 17, 2014

பிலால் நகரில் TNTJ நடத்திய மழைத்தொழுகையில் திரளானோர் பங்கேற்பு !

தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளையின் சார்பில் வறண்டு காணப்படும் அதிரைக்கு மழை வேண்டி இன்று காலை 6.45 மணியளவில் பிலால் நகர் கிராணி மைதானத்தில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. இதில் தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயலாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் மழைத்தொழுகை குறித்த சொற்பொழிவையும் அதனை தொடர்ந்து மழைத்தொழுகையையும் நடத்திவைத்தார்.

தொழுகையில் கலந்துகொண்ட அனைவரும் சட்டையை திருப்பி அணிந்தும், மழை வேண்டி இறைவனிடம் இரு கைகளின் புறங்கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்தார்கள். தொழுகையில் கலந்துகொண்ட பெண்களுக்கு தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.





9 comments:

  1. மழைவேண்டி நம் மக்கள் இறைவனிடம் கையேந்து கின்றனர், யா அல்லாஹ் உன்னுடைய கருணை மழையை இறக்குவாயாக.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.
    .
    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
    உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  3. Dear TNTJ brothers,
    Kindly explain about the below concept?????

    //தொழுகையில் கலந்துகொண்ட அனைவரும் சட்டையை திருப்பி அணிந்தும், மழை வேண்டி இறைவனிடம் இரு கைகளின் புறங்கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்தார்கள்.//

    ReplyDelete
  4. பிஸ்மில்லா... الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ فِرَاشًا وَالسَّمَاءَ بِنَاءً وَأَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَّكُمْ ۖ فَلَا تَجْعَلُوا لِلَّهِ أَندَادًا وَأَنتُمْ تَعْلَمُونَ
    அவனே பூமியை நீங்கள் வசிக்கும் இடமாகவும், வானத்தை ஒரு முகடாகவும் அமைத்து, மேகத்திலிருந்து மழையைப் பொழிவித்து, அதனைக் கொண்டு (நீங்கள்) புசிக்கக்கூடிய கனி வர்க்கங்களையும் உங்களுக்கு வெளியாக்குகின்றான். ஆகவே (இவைகளையெல்லாம்) நீங்கள் தெளிவாக அறிந்துகொண்டே அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாக்காதீர்கள். 2:22 எங்கள் பிராத்தனைக்கு எங்களுக்கு
    அருள்புறிய அல்லாஹ்யிடம் வேண்டியவனாக துஆ செய்கின்றனர்.

    ReplyDelete
  5. மழைவேண்டி நம் மக்கள் இறைவனிடம் கையேந்து கின்றனர், யா அல்லாஹ் உன்னுடைய கருணை மழையை இறக்குவாயாக.

    ReplyDelete
  6. இவங்க மட்டும் சட்டை மாற்றி அணிந்து பிரதிக்கிரார்கள் ஆனால் அவங்க அப்படி செய்யல- ஏன் இந்த முரண்பாடு!.

    என்ன தான் இருந்தாலும் மரம் வளர்த்தால் தானே பூமி குளிரும் அதை செய்ய எந்த முயற்சியும் எந்த அமைப்பும் எடுக்கல போல தோணுது,

    ReplyDelete
  7. மழைவேண்டி நாங்கள் உன்னிடம் கையேந்துகின்றோம் யா அல்லாஹ் உன்னுடைய கருணை மழையை இறக்குவாயாக.

    ReplyDelete
  8. சில நாட்களுக்கு முன்புதான் ஜும்மா பள்ளியில் மழைக்காக தொழுகை நடந்தது.பின்பு ஏன் ஒரு இயக்கத்தின் சார்பாக தனியாக தொழுகை நடத்தவேண்டும்.இது பிரிவினை உண்டாக்கும் செயலல்லவா.இறைவன் முன்னால் கூட ஒற்றுமையை பேன முடியவில்லை உங்களால். பின் ஏன் பஞ்சம் வராது.இறைவனின் கோபப்பார்வைக்கு காரணம் இது போன்ற செயல்தான்.தயவு செய்து தற்பெருமைக்காக வணக்கவழிபாடுகளை கையிலேடுக்காதீர்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.