.

Pages

Thursday, April 10, 2014

அதிரையில் டிஆர் பாலுவை ஆதரித்து திமுகவினர் நடத்திய தெருமுனை பிராசார கூட்டங்கள் !

அதிரையில் இன்று திமுகவின் தஞ்சை தொகுதி வேட்பாளர் டிஆர் பாலுவை ஆதரித்து அதிரையின் பிராதான மூன்று இடங்களில் நடைபெற்ற தேர்தல் பிராச்சார கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாதுரை சிறப்புரை ஆற்றினார்.

முதலாவதாக கடற்கரைதெருவில் நடைபெற்ற தெருமுனை பிராசாரத்தில் நகர செயலாளர் இராம. குணசேகரன், அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாதுரை ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

இதையடுத்து நமதூர் தக்வா பள்ளி முக்கத்தில் நடைபெற்ற தெருமுனை பிராசாரத்தில் முஸ்லீம் லீக் நகர தலைவர் ஹாஜா மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாதுரை ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

இறுதியாக அதிரை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற தெருமுனை பிராசாரத்தில், மமக சார்பில் சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயலாளர் அதிரை சாகுல்ஹமீத் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாதுரை ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

இதில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சிகளான திமுகவின் அவைத்தலைவர் அப்துல் காதர், பட்டுக்கோட்டை ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹலீம் மற்றும் திமுக வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்ட ஏனைய நிர்வாகிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றின் நிர்வாகிகள் உள்ளிட்ட கட்சியினர் திரளாக பங்கேற்றனர்.








9 comments:

  1. தி மு க வேட்பாளர் டி ஆர் பாலு அவர்களை ஆதரித்து பேசிய சகோ கே கே ஹாஜா அவர்களின் பரப்புரை நம் சமுதாய மக்கள் அனைவரும் சிந்திக்கும்படி உள்ளது .

    ReplyDelete
  2. திரு கா.அண்ணாதுரை அவர்களை நமதூர் மக்கள் மறக்கவே முடியாது. இவர் எம்.எல்.எ வாக இருக்கும்போது தான் இவரின் மக்கள் பணி மிகவும் சிறந்ததாக இருந்தது. அப்பொழுது தான் நமதூர் D .M .K கோட்டையானது என்பதை நினைவு கூர்கிறேன் . என்றுமே இவரை மறக்க முடியாது. நமதூர் இதுவரை வந்த எம்.எல்.எ க்களில் இவர்தான் மிகச்சிறந்தவர். இஸ்லாமியர்களை மதிப்பவர்.

    ReplyDelete
  3. த த ஜவை தரக்குரைவாக மாட்டு சாவன்னா பேசியதாக ஊரில் இருந்து தகவல்கள் வந்தன இதற்கு சரியான பதிலடி மயிலாடுதுரையில் கொடுக்கப்படும்

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. Bro aslam .u wel come beach st....,,,,,,,,,,,,, but lost 6 days 60%home not coming water....... so we need water...,. Next time come with dringwater.......

    ReplyDelete
  6. அதிரையில் தண்ணீர் தட்டுப்பாடு பொதுமக்கள் அவதி, ஆனால் தண்ணியடிக்க மட்டும் பொதுமக்கள் அமைதி. பொதுமக்களே மதுக்கடைகளை மூட போராடுங்கள். பிறகு ஓட்டுப்போட தயாராகுங்கள். இந்த நேரத்தில் யாரையும் நம்பாதீர்கள்.

    ReplyDelete
  7. வெற்றி பெற்ற வேட்பாளர் தேர்தல் முடிந்த பிறகு வராமல் இருப்பதும் பின்னர் பல வருடம் கழித்து தன்னை தொகுதி மக்களிடம் நினைவு படுத்தி கொள்வதை மக்கள் பார்த்து தான் இருக்கிறார்கள்- DMK ஆட்சிகாலத்தில் பஞ்சம், பட்டினி, எலிக்கறி, சோள மாவு உணவு உண்ட மக்கள் இனி ADMK ஆட்சிலும் காணலாம், தண்ணீர் , மின்சாரம் பிரச்சனை தீர்க்காத அரசுக்கு மக்கள் எப்படி ஓட்டு போடுவார்கள்? ஓட்டுக்காக தெருமுனை பிரசாரம் மக்கள் பிரச்சனை கேட்க அல்ல - சிந்தித்து நல்ல தீர்ப்பு மக்கள் வழங்குவார்கள்.

    ReplyDelete
  8. அஷ்ரப்..

    உங்களுக்கு வேற வேலையே இல்லையா? பல முஸ்லிம்களோட வாழ்கையை போலிசிடம் காட்டி கொடுதவனுகலாம் உங்க கட்சில இருக்கானுக, அவனுகள நீ ஏன் கேள்வி கேட்கல? அத விடு அது எல்லாருக்கும் தெரியும். பி.ஜே.பி - பற்றி நீ வாயே திரகமாற்ற?

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.