அதிரை தாருத் தவ்ஹீத் சார்பாக
1. எம்.பி. அஹ்மத் (அமீர்)
2. ஜமீல் எம் ஸாலிஹ் (செயலர்)
3. நிஜாமுத்தீன் (பொருளாளர்)
4. கமாலுத்தீன் (இஸ்லாமியப் பயிற்சி மையப் பொறுப்பாளர்)
5. அஹ்மது ஹாஜா
6. மாஜுதீன்
கந்தூரிக் கமிட்டி சார்பாக
1. எம்.எம்.எஸ் ஷேக் (அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்புத் தலைவர்)
2. சுல்தால் அப்துல் காதர்
3. மஸ்தான் கனி
4. பத்ருஸ் ஸமான் ( மதார் சா)
5. அப்துல் வாஹித் (கித்தில்)
தொடக்கமாக, கோட்டாட்சியரின் முன்னுரையை அடுத்து எங்களிடம் கருத்துகள் கேட்டபோது, தாருத் தவ்ஹீத் தொடங்கப்பட்ட 1982லிருந்து 32 ஆண்டுகால தாருத் தவ்ஹீதின் பிரச்சாரங்களில் இதுவரைக்கும் எந்தவொரு சிறு அசம்பாவிதமும் நடந்ததில்லை என்பதையும் சட்டம்-ஒழுங்குக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் இதுவரை நாங்கள் நடந்துகொண்டதில்லை என்பதையும் தகவலாகப் பதிவு செய்துகொண்டு, "எங்களுடைய கருத்துகளைக் கேட்டுப் பதிவு செய்து அதை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்ப வேண்டும் என்று நகரக் காவல்துறை ஆய்வாளர் எங்களை அழைத்தார். கந்தூரி என்பது இஸ்லாத்துக்கு எதிரானது; அதற்குத் தடை வேண்டும் என்ற எங்களுடைய உறுதியான கருத்துகளை ஏற்கனவே மாவட்ட ஆட்சியருக்கு எழுத்து மூலமாக அனுப்பிவிட்டோம்" என்றும் சுட்டிக் காட்டினேன். "லா இலாஹ இல்லல்லாஹ்வின் பொருள் உங்களுக்கே தெரிந்திருக்கும். வழிபாடுகள் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே என்று அதற்குப் பொருள். கந்தூரியை வழிபாடு என்று நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள். கந்தூரிக் கமிட்டியினரும் வழிபாடு என்றே குறிப்பிடுகின்றனர். இரண்டு பேருக்கு வழிபாடுகள் என்பது இஸ்லாத்தில் கிடையாது. உள்ளூரிலும் வெளியூரிலும் வசூல் செய்து, ஒருவருடைய இறந்த தினத்தை மேள தாளங்களோடு மகிழ்ச்சியோடு கொண்டாடுவது என்பது கந்தூரிக் கமிட்டியாரின் வழக்கமாக இருக்கிறது. இது எவ்வளவு மோசமான செயல்?
சட்டம்-ஒழுங்கைப் பற்றி மட்டும் உங்களுக்குப் பிரச்சினை. எங்களுடைய பிரச்சினை என்னவென்றால், கந்தூரி என்பது இஸ்லாத்தில் உள்ளதுதான் என்பதை நிறுவச் சொல்லுங்கள்; நாங்களும் சேர்ந்து செய்கிறோம். கந்தூரி என்பது இஸ்லாத்துக்கு எதிரானது என்பதை நாங்கள் நிறுவுகிறோம்; நிறுத்திவிடச் சொல்லுங்கள்" என்று தீர்வு சொன்னேன்.
நாகூரிலும் அஜ்மீரிலும் முத்துப்பேட்டையிலும் போய் நிறுத்திவிட்டு வரும்படி அதிமேதாவித்தனமான பதிலை மதார் சா வைத்தார்.
"நாகூர் கந்தூரியைப் பற்றி நாகப்பட்டின ஆர்டிஒ ஆஃபிசிலும் முத்துப்பேட்ட கந்தூரியைப் பற்றி திருவாரூர் ஆர்டிஓ ஆஃபீஸிலும் பேச்சுவார்த்தை நடக்கும். பட்டுக்கோட்டை ஆர்டிஓ ஆஃபீஸில் நாம் உட்கார்ந்திருப்பது அதிராம்பட்டினத்துக் கந்தூரியைப் பற்றிப் பேசுவதற்காக" என்று விளக்கினேன்.
கந்தூரியை நிறுத்துவதற்குத் தமக்கு அதிகாரம் இல்லை என்று கோட்டாட்சியர் கூறிவிட்டு, கந்தூரியை அமைதியாக நடத்துவதற்கு உங்களுடைய கண்டிஷன் என்ன? என்று கேட்டார். அதற்கு, "கந்தூரியே கூடாது என்பதுதான் அவர்களுடைய கண்டிஷன்" என்று காவல்துறை ஆய்வாளர் பதிலளித்தார். நாங்கள் ஆமோதித்தோம்.
எம்.எம்.எஸ் ஷேக் அவர்கள், கந்தூரிகள் ஆல் ஓவர் இந்தியாவில் நடப்பதாகக் குறுக்கிட்டார்.
அதுவரை பொறுமையாக இருந்த அமீர் அவர்கள் தம்மை ஆங்கிலத்தில் கோட்டாட்சியரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு, "இந்தியா முழுக்கவும் நடந்தாலும் கந்தூரி என்பது இஸ்லாத்துக்கு முரணானது" என்பதை ஆங்கிலத்தில் எடுத்துக் கூறினார். கந்தூரி எதிர்ப்பாளர்களின் வீட்டுக்கு எதிரே வேண்டுமென்றே பாட்டும் கூத்தும் நெடிய நேரம் நடத்துவது வழக்கமாயிருக்கிறது என்ற அமீரின் குற்றச்சாட்டுக்கு, "பெண்கள் கூட்டம் நின்றால், கூத்து நடக்கத்தான் செய்யும்" என்று மஸ்தான் கனி கூறியதும் ஹாஜாவுக்குப் பற்றிக் கொண்டது. மறைந்த சகோ. அபுல்ஹஸன் அவர்களின் வீட்டுக்கு எதிரே நடந்த நீண்ட நேரக் கூத்தும் அதற்கு எதிர்வினையாக மிளகாய்த் தண்ணீர் அபிஷேகமும் நடத்தப்பட்டதை எடுத்துச் சொல்லி, யார் வீட்டுப் பெண்கள்? முஸ்லிம் வீட்டுப் பெண்கள் வீட்டுக்கு எதிரே கூத்துப் போடுவதுதான் வழிபாடா? அப்படி நடந்தால் கலவரம் ஏற்படாதா? எனப் பொங்கிவிட்டார். கோட்டாட்சியர் அமைதிப்படுத்த முயன்றபோது, தான் இரண்டாண்டுகளுக்கு முன்னர் இதே மேலத்தெரு கந்தூரி ஊர்வலத்தில் கொலைவெறியுடன் தாக்கப்பட்டதையும் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியால் பாதிக்கப்பட்டு இன்றுவரை ச்சார்ஜ் ஷீட் போடப்படாமல் காவல்துறை இழுத்தடிப்பதையும் தான் ஹஜ்ஜுக்குப் போவது தாமதப்படுவதையும் எடுத்துரைத்தார்.
மேலத்தெருவில் கந்தூரிக்கு எதிர்ப்பு பலமாக இருப்பதாக நிஜாமுத்தீன் கூறியபோது எம்.எம்.எஸ் ஷேக், மேலத்தெரு கமிட்டிதானே கந்தூரி நடத்துகிறது? மேலத்தெருவில் எதிர்ப்பு எப்படி வரும்? எனக் கேட்டார். அதற்கு, "நாளைக்கு மேலத்தெரு ஜமா அத் கூட்டத்தைக் கூட்டுவோம். அப்போது தெரியும் எவ்வளவு எதிர்ப்பு இருக்கிறதென்று" என்று நிஜாமுத்தீன் புள்ளி வைத்தார். கந்தூரி முடிந்து கூட்டுவோம் என்று எம்.எம்.எஸ் ஷேக் பதிலளித்தார். நிஜாமுத்தீன் விடாமல், "நாளைய கந்தூரிக்கு எதிர்ப்பு எவ்வளவு எனத் தெரிந்துகொள்வதற்குக் கந்தூரி முடிந்தபின் கூடி என்ன பிரயோஜனம்?" என்று எதிர் கேள்வி கேட்டபோது பதில் சொல்லாமல் சம்பந்தமில்லாத பேச்சுகள் குறுக்கிட்டன.
அல் பாக்கிதத்துஸ்ஸாலிஹாத் பள்ளி அருகில் பதட்டம் இருப்பதை நிஜாமுத்தீன் பதிவு செய்தபோது, மதார் சா "அவர்களில்தான் யாராவது சிலர் பிரச்சனை உண்டாக்குவார்கள்" எனப் பழியை எங்கள் மீது சுமத்தப் பார்த்தார். அதற்கு, "L&O பிரச்சனை வரக்கூடாது என்பதால்தான் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளோம். L&O problem உண்டு பண்ணிதான் தீர்வு என நாங்கள் நம்பினால் அதையும் நாங்கள் செய்வோம். இரண்டாம் தர வேலை செய்ய மாட்டோம். நீங்கள் அதை விரும்பினால் அமைதிப் பேச்சு வார்த்தை மெத்தேடை மாற்றிக்கொள்வோம். எப்படி வசதி?" என நிஜாமுத்தீன் எதிர்க் கேள்வி வைத்தார்.
"மழையில்லாமல் செடிகளெல்லாம் கருகிக் கிடக்கின்றன. எங்கள் வீட்டுக்கு அருகில் வைத்துதான் வெடி விடுகிறார்கள். தீ விபத்து நடப்பதற்கு முன்னெப்போதையும்விட இந்த வறட்சி காலத்தில் வாய்ப்புகள் அதிகம்" என்பதை மாஜுதீன் பதிவு செய்தார்.
இறுதியாக சமாதானக் கூட்ட நடவடிக்கைகள் ப்ரிண்ட் செய்து வந்தது.
அதிலிருந்த 'மேலத்தெரு ஜமாஅத்தினரும்' என்பதை நிஜாமுத்தீன் எதிர்த்ததில் அது முழுதும் நீக்கப்பட்டது. காட்டுப்பள்ளிவாசல் என்பது காட்டுப்பள்ளி தர்கா என்று திருத்தப்பட்டது. கடைத்தெரு சாலையின் வடக்குப் பக்கம் முழுமையாகக் கந்தூரி ஊர்வலம் போகாது என்று கந்தூரிக் கமிட்டியினரால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட உறுதியை எழுத்தில் (ஆறாவது ப்பாயிண்ட்டாக) இணைக்க வலியுறுத்தினோம் (இணைப்பு).
ஒரு மதத்தில அல்லது மார்க்கத்தில் இருந்து வேறு ஒரு மதத்திற்கு அல்லது மார்க்கத்திற்கு ஒரு மனிதன் மாறினால் அந்த மனிதன் தன் முந்தைய மதத்தை அல்லது மார்க்கத்தை குறைகூற எந்த விதத்திலும் நியாயம் இருப்பதாக இல்லை.
ReplyDeleteஅப்படி அடுத்தவர் மனம் புண்படும்படி நடந்துக்கொள்ள எந்த மதம் அல்லது மார்க்கமும் தூண்டவில்லை அனுமதிக்கவில்லை.
ஆனால் ADT என்ற குறிப்பிட்ட கொள்கையுடையவர்கள் இதன் விபரம் அறியாதது ஏனோ ? ஏன் அமைதியாக இவ்வூரில் இஸ்லாம் தோன்றிய காலத்திலிருந்து நடைபெற்று வரும் கந்தூரியை, நடத்தும் காலத்தில் ஓரிரு வருடமாக அமைதியைக் குழைக்கும் இதுபோன்று செயல்களை செய்கிறார்கள், அப்பாவி இளைங்கர்களைத் தூன்டுகிரார்கள் ?
அவர்கள் குறிப்பிடும் பகுதிகளுக்கு இவர்களை எப்பொழுது எந்த தேர்தலில் அப்பகுதி மக்கள் தேர்ந்தெடுத்து பிரதிநிதியாக்கினார்கள் ? தானாகவே பொறுப்பெடுக்க எந்த நடைமுறை அனுமதிக்கின்றது ?
ஊரை அமைதி இழக்கும் காரணிகளை செயாதீர்கள். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் ஒதுங்கிக்கொள்ளுங்கள்.
நீங்கள் இந்த ஊர் மதரசாவை ஏற்றுக்கொண்டவர்கள் அல்லவே ! நீங்கள் இந்த ஊர் பள்ளிவாசல்களை ஏற்றுக்கொள்ளாமல் தனிப் பள்ளிவாசல் அமைத்தவர்கள் தானே ? எங்கள் வழக்கத்தில் உள்ள எங்கள் நம்பிக்கைகளை என்றுமே நீங்கள் ஏற்றவர்கள் அல்லவே !
பிறை பார்ப்பதில் வேறுபாடு ! பெருநாள்களில் வேறுபாடு ! இறைவன் என்ற இலக்கணத்தில் இறைவனுக்கு உருவம் உண்டு என்று சொல்கிறீர்கள் ! புகழ்ச்சி என்பதில் எங்களுக்கும் உங்களுக்கும் அடிப்படைக் கருத்து வேறுபாடு ! மகான்களை தாங்கள் என்றுமே கண்ணியம் செய்ததில்லை. எங்கள் ஒஸ்தாதுகளை அடிகடி கண்ணியக்குறைவாக பேசுகிறீர்கள் ! திருமணத்தில் வேறுபாடு ! இறந்தவரை அடக்கம் செய்வதில் வேறுபாடு ! எங்கள் அடயாளம் தொப்பி அதில் வேறுபாடு ! எங்கள் வணக்க முறைகளில் வேறுபாடு ! பெண்களை வழி நடத்துவதில் வேறுபாடு ! இப்படி எல்லாவற்றிலுமே வேறுபாடு ஆகி நிற்கும் தாங்கள் எப்படி எங்கள் நடைமுறைகளை குறை சொல்கிறீர்கள். தயவு செய்து நிம்மதியாக வாழவிடுங்கள்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இந்த கந்தூரி விழா ஆண்டாண்டு காலமாக நடந்து வருகின்றது, இங்கு மட்டும் இல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து தர்காக்களிலும் நடந்து வருகின்றது.
அது சர், சி.எம்.பி.லைன் பக்கம் கந்தூரி வரக் கூடாது என்று இப்பகுதி மக்கள் ஒன்று கூடி சொன்னார்களா?
இந்தப்பக்கம் வரக்கூடாது என்று தடுக்க யாருக்கும் உரிமை கிடையாது, கந்தூரி விழாவை விரும்பும் அன்பர்களில் நானும் ஒருவன், என் இருப்பிடம் இங்குதான் இருக்குது.
எனக்கு பன்னாமீனு பிடிக்காது, அதற்காக பன்னாமீனை இந்தப்பக்கம் கொண்டு வரக்கூடாது என்று நான் சொல்ல முடியுமா?
என்னங்கப்பா இது. ஒரே குழப்பமா இருக்குது.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED.
Consumer & Human Rights
Thanjoor District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
சபாஷ்
ReplyDeleteவெல்டன் ADT டீம்
சிறந்த அணுகுமுறை
பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்தினால் கந்தூரி வேண்டாம் என்றே கூறுவார்கள்
பிஸ்மில்லா... قَدْ كَانَتْ لَكُمْ أُسْوَةٌ حَسَنَةٌ فِي إِبْرَاهِيمَ وَالَّذِينَ مَعَهُ إِذْ قَالُوا لِقَوْمِهِمْ إِنَّا بُرَآءُ مِنكُمْ وَمِمَّا تَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ كَفَرْنَا بِكُمْ وَبَدَا بَيْنَنَا وَبَيْنَكُمُ الْعَدَاوَةُ وَالْبَغْضَاءُ أَبَدًا حَتَّىٰ تُؤْمِنُوا بِاللَّهِ وَحْدَهُ إِلَّا قَوْلَ إِبْرَاهِيمَ لِأَبِيهِ لَأَسْتَغْفِرَنَّ لَكَ وَمَا أَمْلِكُ لَكَ مِنَ اللَّهِ مِن شَيْءٍ ۖ رَّبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ
ReplyDeleteஇப்றாஹீமிடமும், அவரோடு இருந்தவர்களிடமும், நிச்சயமாக உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது; தம் சமூகத்தாரிடம் அவர்கள், “உங்களை விட்டும், இன்னும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகிறவற்றைவிட்டும், நாங்கள் நிச்சயமாக நீங்கிக் கொண்டோம்; உங்களையும் நாங்கள் நிராகரித்து விட்டோம்; அன்றியும் ஏகனான அல்லாஹ் ஒருவன் மீதே நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை, நமக்கும் உங்களுக்குமிடையில் பகைமையும், வெறுப்பும் நிரந்தரமாக ஏற்பட்டு விட்டன” என்றார்கள். ஆனால் இப்றாஹீம் தம் தந்தையை நோக்கி: “அல்லாஹ்விடத்தில் உங்களுக்காக (அவனுடைய வேதனையிலிருந்து) எதையும் தடுக்க எனக்குச் சக்தி கிடையாது; ஆயினும் உங்களுக்காக நான் அவனிடத்தில் நிச்சயமாக மன்னிப்புத் தேடுவேன்” எனக் கூறியதைத் தவிர (மற்ற எல்லாவற்றிலும் முன் மாதிரியிருக்கிறது, அன்றியும், அவர் கூறினார்): “எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்குகிறோம்; மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது,” 60:4
அனைத்து மஹல்லா தலைவராகும் இருக்கும் நீங்கள் எப்படி இஸ்லாத்திற்கு எதிரான சடங்குகளுக்கு தலைவராக இருக்க முடியும். ஊர் மக்கள் இதற்க்கு முடிவு சொல்லவும்
ReplyDeleteதீயதை தடுத்து நல்லதை சொல்வதே நாயகம்[ஸல்]அவர்களின் உம்மத்தார்களுக்கு கடமையாக்கப்பட்டுள்ளது ஆகவே எனது பங்கிற்கு கந்துரி எதிர்ப்பை பதிவுசெய்கிறேன்
ReplyDeleteஅட நம்ம ஊரில் கந்தூரியா, சர்பத்து கடை, முட்டாசு கடை, நாக கன்னி, அம்பு எறிதல், அன்னலூஞ்சி, கொடையூஞ்சி, தாஜ்மஹால் பீடி. சோப்பு சீப்பு கண்ணாடி கடைகள்.
ReplyDeleteமுத்துப்பேட்டை பாரூக் ரிக்கா டான்ஸ். திருச்சி கலிபுல்லா உருது கவ்வாலி பாட்டு. நாகூர் இ.எம்.ஹனிபா பாட்டு.
பசங்களின் கொண்டாட்டம்,
அஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteநன்மையை ஏவி தீமையை தடுக்கும் ஒரு கூட்டத்தாரை அல்லாஹ் நேசிக்கின்றான்.
அதனடிப்படையில் அதிரை தாருத் தவ்ஹீத் எடுத்த இந்த முயற்ச்சிக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். அல்லாஹ் நம் எண்ணங்களையும் செயல்களையும் அங்கீகரிப்பானாக!
முதலில் இந்த கந்தூரி கமிட்டியினருக்கும், இதுபோன்ற இறைவனுக்கு இணைவைக்கக்கூடியவைகளை ஆதரிக்கக்கூடியவர்களுக்கும் அல்லாஹ் நேர்வழியை தர வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
பாவம் இந்த மக்கள், சரியான மார்க்க அறிவில்லாததும், கண்மூடித்தனமாக முன்னோர்களை பின்பற்றுகிறோம் என்ற விதண்டாவாதத்தாலும், கர்வத்தாலும் இது போன்ற இழிசெயலில் ஈடுபட்டு அதன் விளைவுகளையும், மறுமை நாளில் இதற்கான தண்டனையை அறியாதவர்களாக இருக்கும் இவர்களை நினைத்து ஒரு கணம் இரக்கப்படுவது தான் ADTயின் இந்த முயற்ச்சியின் வெளிப்பாடு என்று கருதுகிறேன்.
இறைவனுக்கே இணைவைக்ககூடிய இந்த அதிபயங்கரமான இறைவனால் மறுமை நாளில் மன்னிப்பே இல்லாத இந்த படுபாதக செயலை நமதூரில் வேறோடும் வேறடி மண்ணோடும் துடைத்தெறிய வேண்டும் என்ற நல்லெண்ணத்திலும், அதே வேளை அந்த பாவமான காரியத்தில் ஈடுபடுபவர்களை எண்ணி கவலையுற்று அவர்களும் நேர்வழி பெற வேண்டும் என்ற நன்நோக்கத்திலும், நாளை மறுமை நாளில் சத்தியத்தை அறிந்த நம்மையும் ஏன் நன்மையை ஏவி தீமையை தடுக்கவில்லை என்று அல்லாஹ் கேள்வி கேட்பானே என்ற அச்ச உணர்வினாலும் சிந்தித்து செயல்படும் எல்லா நல்லுள்ளங்களின் முயற்சியையும் பிரார்த்தனைகளையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக! மேலும் இந்த அசத்தியத்தில் உள்ள நம் சகோதரர்களை அல்லாஹ் சத்தியத்தை அறிய செய்வானாக!
கந்தூரி & தர்ஹா வழிபாடுகளை ஆதரிக்கும் சகோதரர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!
தயவு செய்து கர்வம் மற்றும் முன்னோர் சிந்தனை ஆகியவைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, தாங்கள் ஆதரிக்கக்கூடிய அல்லது செய்யக்கூடிய இந்த காரியம் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு உட்பட்டதா அல்லது மாறுபட்டதா என்பதை ஒரு கணம் சிந்தித்து இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அல்லாஹ் உங்களையும் என்னையும் நேர்வழியில் செல்ல வைப்பானாக!
சத்தியம் வந்த பின் அசத்தியம் அழிந்தே தீரும். இன்ஷா அல்லாஹ்!
பிஸ்மில்லா... إِنَّ الدِّينَ عِندَ اللَّهِ الْإِسْلَامُ ۗ وَمَا اخْتَلَفَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِن بَعْدِ مَا جَاءَهُمُ الْعِلْمُ بَغْيًا بَيْنَهُمْ ۗ وَمَن يَكْفُرْ بِآيَاتِ اللَّهِ فَإِنَّ اللَّهَ سَرِيعُ الْحِسَابِ
ReplyDeleteநிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான். 3:19 وَلَن تَرْضَىٰ عَنكَ الْيَهُودُ وَلَا النَّصَارَىٰ حَتَّىٰ تَتَّبِعَ مِلَّتَهُمْ ۗ قُلْ إِنَّ هُدَى اللَّهِ هُوَ الْهُدَىٰ ۗ وَلَئِنِ اتَّبَعْتَ أَهْوَاءَهُم بَعْدَ الَّذِي جَاءَكَ مِنَ الْعِلْمِ ۙ مَا لَكَ مِنَ اللَّهِ مِن وَلِيٍّ وَلَا نَصِيرٍ
(நபியே!) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி) “நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-(இஸ்லாம்) அதுவே நேர்வழி” என்று சொல்லும்; அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை. 2:120 சில குர்ஆன் வசனங்களை மட்டும்மே குறிப்பிட்டுள்ளோம் நடுநலைவாதிகள் சிந்திக்கட்டும் எதிர்ப்பை பதிவு செய்யட்டும்.
என்ன, ஜமால் காக்கா..
ReplyDeleteபண்ணா மீனும் பிடிக்காது... விலாங்கு மீனும் பிடிக்காதா...?
"ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்'' - ஆமாம் இந்த கயிறு வட்டாட்சியர் மூலம் ஒட்டப்படுகிறது...
அன்புள்ள சகோதரர்களே.
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வுடைய கோபப் பார்வை இந்த அதிராம்பட்டினத்தை வதைக்கின்றது.
அல்லாஹ் நமக்கு அறிவை கொடுத்து சிந்திக்கக் கூடிய திறனையும் கொடுத்துள்ளான். எந்த ஒரு விழாவும் அனாச்சாரங்கள் இல்லாமல் இருந்தால் நல்லது.
கந்தூரியை தடுத்து நிறுத்த துடிக்கும் நீங்கள, இதைவிட மோசமான செயல்கள் தினம் தினம் நடக்கின்றன, அவைகளையும் தடுத்து நிறுத்த முயற்சிக்க வேண்டும்.
ஒவ்வொரு இயக்கமாக பிரிந்து இருந்து செயல்பட இஸ்லாத்தில் இருக்கின்றதா? மழை தொழுகையில் ஏன் இத்தனை பிரிவுகள்? ஊர் எப்படி உருப்படும்? ஒருவருக்கு ஒருவர் திட்டிக்கொள்ளுதல், காட்டிக் கொடுத்தல், சகோதரர்களே இது நல்லாவா இருக்குது?
அல்லாஹ்வுக்கு பயந்து எல்லோரும் ஒரு மனதோடு செயல் பட்டு இருந்தால் நமக்கு உயர்வு உண்டு, பரகத் உண்டு, எல்லா நன்மையும் உண்டு.
வஸ்ஸலாம்.
ஹுமைராஹ் சுல்தானாஹ்.
அமீர் என்பதற்கு அர்த்தம் தாருங்கள் ADT
ReplyDeleteதர்கா,கப்ருவணக்கம் மற்றும் கந்தூரி விசயங்களில் வழி கெடும் மக்கள் தங்களை கெட்டு போகிறேன் பந்தயம் என்ன ? என்று கேட்பவர்களை என்ன செய்யமுடியும்? சொல்லியும் திருந்தாத மக்களை நினைத்து கண்ணீர்வடிப்பதை தவிர வேறுவழியில்லை.....
ReplyDeleteமுன்பு சிறியவயதில் பள்ளிபருவத்தில் ஒருமுறை கடல்கரை தெரு கந்தூரிக்கு அறியாமல் சென்ற ஞாபகம் அப்போது ஒரு மேடையில் எலந்தபழம் .....எலந்தபழம் ........செக்கே செவந்த பலம் ...தேனாட்டம் இனிக்கும் பழம் ...எத்தனையோ பேரு கிட்டே எலந்தபழம் பார்திருக்கே அதுலே இம்மா பழம் பார்த்தியா ? என்று ஒரு பெண் பாட...பிறகு ஒருநிமிடம் மேடை லைட் அமர்ந்து மறுபடி லைட் போட்டதும் ஒரு ஆண் அதே பாட்டை வாழைப்பழம் வாழைப்பழம் என்று அந்த மேற்கண்ட பாட்டை மாற்றி படிக்கின்றான் பாடல் மாறும் போது வார்த்தைகள் கொச்சை படுத்தபடுகின்றன ...இதுதான் நமதூர் கந்தூரிகளின் அவலட்சணம் இதை ஆண்களும் பெண்களும் பார்த்து ரசிக்கின்றனர் .
முகநூல் வழியே வந்த கருத்து
ReplyDeleteNavas Aks கூறியதாவது :
கந்தூரி கமிட்டியாரிடம் ஓரு அன்பான கேள்வி ஆணும் பெணும் பொது இடங்களில் கட்டி பிடித்து ஆடுவதற்கு இஸ்லாம் மார்க்கம் கற்ட்டு தந்ததா அல்லது முகம்மது நபியின் வழி முறையா?
இது குடீகாரர் மற்றும் விபச்சாரர்களின் வழி முறை அல்லாஹ் அனைவரையும் நேர்வழியில் பாதுகாப்பானாக
முகநூல் வழியே வந்த கருத்து
ReplyDeleteAhamed Abdul Kader Ahamed கூறியதாவது :
காட்டு ..பள்ளி என்று சொல்லவேண்டாம்
காட்டுதர்ஹா என்று சொல்லவும்
அஸ்ஸலாமு அழைக்கும்
ReplyDeleteநாம் எப்படி முயற்சி செய்து கந்தூரி கூடாது இது அல்லாஹ்வால் ஒருபோதும் மன்னிக்கமுடியாது குற்றம் என்று சொன்னாலும் இவர்கள் திருந்தபோவதில்லை அதனால் இத்தேர்த்திருவிழாவை முற்றிலுமாக நிறுத்த ஒவ்வரு தெருவிலும் இதப்பற்றியான விளுப்புனர்வை ஏற்படுத்தி இதற்கெதிராக மக்களிடம் கையெழுத்து வாங்கி காவல்துறை ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு தனித்தனி நகல்களாக அனுப்பிவைக்க வேண்டும், மேலும் அந்தந்த தெருவிற்கு உற்பட்ட பள்ளிவாசல்களில் இந்த இணைவைப்பு தீமையைபற்றி நமது இஸ்லாமிய மார்க்கம் என்னகூருகிறது என்பதை வாராந்திர ஜும்மா மற்றும் கஸ்துகளிலும் விளக்கமாக மக்களுக்கு எடுத்துசொல்வதோடுமட்டுமல்லாமல் அந்தந்த மகள்ளாவிர்க்கு உற்பட்ட சங்கங்களில் இதற்கெதிரான ஒரு வலுவான தீர்மானத்தை கொண்டுவரவேண்டும் இப்படியெல்லாம் செய்தால் கண்டிப்பாக அல்லாஹுவின் மாபெரும் உதவியைக்கொண்டு இத்தேர்த்திருவிழாவை நாம்மால் தடுக்கமுடியுமே தவிரே வேறுவழியில்லை வல்ல ரஹ்மான் நமது இந்த முயற்சியை வெற்றி பெற செய்வானாக ஆமீன்
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே அவனையன்றி வேறுயாரும் இல்லை முகம்மதுநபி (ஸல்) அவர்கள் அல்லாஹுடைய தூதர் என்று மனதார ஈமான் கொண்டுவிட்டு கந்தூரி என்ற பெயரில் மார்க்கத்திற்கு எதிராக கந்தூரி எடுக்கிறார்களே இவர்களை என்ன செய்வது.
ReplyDeleteஅல்லாஹ் குரானில் சொன்னான கந்தூரி எடுக்க சொல்லி அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்களா அல்லது செய்துதான் காட்டினார்களா ஏன் மார்க்கத்திற்கு எதிராக செயல்படுகிறிர்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் குரானையும் என்னையும் பின்பற்றும் வரை நீங்கள் வழி தவறமாட்டீர் என்று.
அல்லாஹ்வும், ரசூலும் சொல்லாத ஒன்றை செய்வதற்கு ஏன் முயற்சி எடுக்கிரிர்கள்.
மாற்றாரின் கலாச்சாரத்தை ஏன் பின்பற்றுகிறிர்கள்.
தர்ஹா, தைக்கால் இவை 500 ஆண்டுகளை கடந்து இன்றும் நாம் வருடம்தோறும் புதுப்பித்து விழாவினையும் எடுத்து வருகிறோம் நம் முன்னோர்கள் அடுத்த மத விழாக்களை போல் எடுத்ததை நாம் பின் பற்றிவருகிறோம்.
ReplyDeleteஅப்போ நாடகம் , இசை கச்சேரி, கூத்து இருந்ததை போல் இப்போ இல்லை - ஒவ்வொரு நாளும் ஒரு திரைப்படம்.
இது ஒரு எண்டர்டைன்மெண்ட் போல தான் மக்கள் பார்கிறார்கள், யாரும் தர்ஹா உள்ளே சென்று மண்டிபோட்டு உள்ளம் உருகி அழுது பிராதிப்பதை பார்க்க முடியாது,
துவா எப்படி கேட்கணுமென்று எல்லோருக்கும் தெரியும்.
இந்த 10 நாளில் மகான்களை போற்றும் வகையில் இஸ்லாத்திற்காக பாடுபட்டதை விளக்கும் விதமாக பதாகைகள் வைக்கலாம்,
இஜ்திமா நடத்துவதை போல் islamic cultural program நடத்தலாம்,
திரைபடத்திற்கு பதிலாக அனிமேஷன் (லைட் ஷோ ) புதிதாக கொண்டு வரலாம் இதன் மூலம் awarness creat பண்ணலாம்.
தமிழ் நாட்டில் மட்டும் தவ்ஹீது அமைப்பு தோன்றி இன்றைக்கு அரசியல் கட்சிகள் எண்ணிகைகளுக்கு இணையாக பல பிரிவாக செயல் பட்டு காலப்போக்கில் இது ஒரு ஜாதி போல் உருவெடுக்கும் போல் தெரிகிறது,
அன்று தொழிலை வைத்து ஜாதி பிரித்தான் இன்றோ தனி மனிதனை துதிபாடி ஜாதி வளர்கிறான். காலப்போக்கில் இது சமுதாயத்திற்கு பெரிய ஆபத்து.
இப்போ தெரிகிறதா எதை தடை செய்யவேண்டுமென்று?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிராத்தனை செய்தார்கள் யா அல்லாஹ் என்னுடைய கபுரை வணக்கஸ்தலமாக ஆக்கிவிடாதே என்று.
ReplyDeleteஉலகில் மகாக் கொடுமை அறிந்தோம் என்ற அறியாமையில் இருப்பது.
ReplyDeleteசிந்திக்கும் வழியில் சிந்தனை சாதகமாக வருவதும் மகாக் கொடுமை.
சமநிலையில் இருந்து உண்மையை புரிந்துக்கொள்ள முடியாது போவதும் மகாக் கொடுமை.
மனிதர்களிடம் அன்பு வெளிப்படாமல் ஆத்திரம் கொப்பளிப்பதும் மகாக் கொடுமை.
நாகரிகாம், பகுத்தறிவு, நான் விபரமானவன் என்ற மமதை போன்றவைகளும் மகாக் கொடுமை.
அன்று மனிதன் அறியாமையால் நிர்வாணமாக காட்டில் அலைந்தான். இன்று மனிதன் நிரந்தரமாக அறியாமையை அறிவு என்று எடுத்துக்கொண்டு உடையுடன் அலைகிறான். இதுவும் மகாக் கொடுமை.
எந்த அறிவில் அன்பும், அக்கறையும், அடக்கமும், அமைதியும், அரவணைப்பும் இலையோ அதுவும் மகாக் கொடுமை.
மனிதன் வடிவில் அழகாகி மனதில் அசிங்கமாகிவிட்டான். இதுவும் மகாக் கொடுமை.
இவ்வாறு எழுதுவதில் இவைகள் அந்தக் கொள்கை காரர்களுக்கு என்று தன்னை திருத்தாமல், திருந்தாமல் அறிவதும் மகாக் கொடுமை.
நியாயச் சிந்தனைவாதிகளுக்கு உணமை விளங்கும்.
இதோ தமிழகத்தில் பிரபலமான ஒரு பகுத்தறிவு கூறுகிறது:
குர்ஆனனில் அல்லாஹ்வுக்கு மட்டுமே பொருள் தெரிந்த, வேறு எந்த மனிதருக்கும் பொருள் தெரியாத வசன்களும் உள்ளன என்பது முற்றிலும் தவறு.
ஒரு மனிதருக்குக் கூட புரியாத வசனங்கள் குர்ஆனில் இருந்தால் அது உளறல் என்றே கருதப்படும். இவ்வாறு அந்த பகுத்தறிவாளர் அவரின் தர்ஜுமாவில் கூறியிருக்கின்றாரே !
This is ridiculous act that adirai tea party leader supporting sirkMost of of home town alim ignorant due to obey madhab masalas .They should go back to understand what Quran & authentic hadhis teach us to followed .May Allah save us from hel fire. I humble request all pls keep you & your family away from these kind of anti social elements & tea party committee
ReplyDeletekandoori yenbadu markathil illaada onruthaan irupinum adai avarhalidam sendru amaidiyaaha markathai yeduthu solli taduka muyarchi seyaavandum . iruppinum hidaayth allahvin kayil ulladhu nammal iyandra muyarchi avrhal kandoori pondra valikattilirundu velivaruvadarkaaha allah vidam dua seyvom insha allah .yenendral avarhalum muslimhal thaan avarhal thavaru seihiraarhal yenbadarkaaha avarhalai veruppadu muslimgaluku azahu illai avargalukku yediraaha puhaar alipadu kanndithakkadu yenave ADT pondra iyakkangal idupondra seyalhalai kaividavendum muslimgal anaivarum otrumayaaha iruka vanndum yenave allah namaku vizanga thofik seydadupol avarhalukum vilzanga thofik seyvaanaha insha allah aameen
ReplyDelete