இதுகுறித்து பிலால் நகர், ஆதம் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் நம்மிடம் வருத்தத்துடன் கூறுகையில்...
'ஏரிபுறக்புறக்கரை கிராம நிர்வாகத்தின் கீழ்வரும் பிலால் நகர், ஆதம் நகர் ஆகிய பகுதிகளே ஊராட்சி மன்றத்திற்கு அதிக வருமானம் தரக்கூடிய பகுதியாக இருக்கிறது. மற்ற பகுதிகளை வீட எங்கள் பகுதிகளில்தான் அதிகமாக குடிநீர் மற்றும் வீட்டு வரிகள் செலுத்திவருகிறோம். ஊராட்சி சார்பில் எங்கள் பகுதியில் இலவச குடிநீர் இணைப்புகள் கூட எந்தவொரு பகுதிகளிலும் இல்லை. மற்ற பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றன. இந்த பகுதிகளில் எந்தவருடமும் இல்லாத அளவிற்கு தற்போது குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெண்கள் காலிகுடங்களுடன் வீதிகளில் தண்ணீருக்காக அங்கும் மிங்கும் அலைந்துவருகின்றனர். இவர்களின் நிலைமையை பார்ப்பதற்கு மிகவும் பரிதாகமாக இருக்கிறது. இந்த நிலை நீடிக்குமானால் பாதிக்கப்பட்ட பிலால் நகர், ஆதம் நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை திரட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவுசெய்வதை தவிர வேறுவழியில்லை.
இந்த பகுதிகளில் காணப்படும் குறுக்கு சாலைகளில் சிலவற்றில் தெரு விளக்குகள் போடப்படவில்லை. பழுதடைந்த தெருவிளக்குகளையும் சரிசெய்யப்படத்தால் இருட்டிகிடக்கின்றன. மேலும் அடிப்படை சுகாதாரத்தை அச்சுறுத்தும் விதத்தில் குப்பை கூளங்கள் வீதிகளில் ஆங்காங்கே மண்டிகிடக்கின்றன. குப்பைகளை அள்ளுவதற்கு ஊழியர்கள் நியமிக்கபடவில்லை. எங்கள் பகுதியில் எந்தவொரு இடத்திலும் கழிவுநீர் வாய்க்கள் வசதி ஏற்படுத்தாமல் இருக்கிறது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே தேங்கிகிடக்கும் கழிவுநீரால் சுகாதராகசீர்கேடு ஏற்படுகிறது' என்றார்கள் வருத்ததுடன்...
குறிப்பு : இவர்களின் ஆதங்கம் தஞ்சை மாவட்ட ஆட்சியரின் மின்னஞ்சல் முகவரிக்கு ( collrtnj@tn.nic.in ) கோரிக்கையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வேண்டுகோள் : அதிரை நியூஸ் வாசகர்களாகிய நீங்களும் இவர்களின் துயரில் பங்குகொள்ளும் விதத்தில் இவர்களின் நியாமான ஆதாங்கத்தை கோரிக்கையாக நமது மாவட்ட ஆட்சியருக்கு உடனடியாக அனுப்பி துரித நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளுங்கள்.
மாவட்ட ஆட்சியரின் மின்னஞ்சல் முகவரி : collrtnj@tn.nic.in
machan al ameen great job da
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகலெக்டர் அவர்கள்ளுக்கு 5.37 மணிக்கு நான் மின் அஞ்சல் அனுப்பிவிட்டேன்.
ReplyDeleteAppadeya appo thane varuma?
ReplyDeleteella ????????????/???
இப்பெவே இப்படி என்றால் வருங்காலஙங்கள் எப்படி இருக்கும் அல்லாஹ் நம்ம எல்லோரையும் பாது காக்கனும்
ReplyDeleteகலெக்டர் அவர்கள்ளுக்கு மின் அஞ்சல் அனுப்பிவிட்டேன்.
ReplyDeleteReply