.

Pages

Tuesday, April 8, 2014

அதிரையின் வீதிகளில் ஓட்டு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர் !

காங்கிரஸ் கட்சியின் தஞ்சை தொகுதி வேட்பாளர் திரு. கிருஷ்ணசாமி வாண்டையார் மற்றும் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. N.R. ரெங்கராஜன் MLA ஆகியோர் இன்று காலை அதிரையின் முக்கிய பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரித்தார்கள்.

இதில் நகர காங்கிரஸ் தலைவர் M.M.S. அப்துல் கரீம், செயலாளர் சிங்கார வேலு, பட்டுக்கோட்டை சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் அதிரை மைதீன், M.M.S. குடும்பத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டி உடன் சென்றனர்.

இந்த பிரசாரத்தின் போது காங்கிரஸ் கட்சிகளின் தொண்டர்கள் வேட்பாளரை பின்தொடர்ந்து இரு சக்கர வாகனங்களில், ஆட்டோக்களில் அணிவகுத்து சென்றனர்.







11 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. ஓட்டு கேட்டு வரும் காங்கிரஸ் வேட்பாளர் கரீமாக்காவை கண்ணியமா வேட்பாளர் வண்டியிலே ஏத்திகிட்டாங்க..ஆனா அதிமுக, திமுக வேட்பாளர்கள் அஜீஸையும், அஸ்லமையும் வேட்பாளர் வண்டியிலே ஏத்துறாங்கலானு பாப்போமே

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. tntj atharawil modi prime minister

    ReplyDelete
  5. தஞ்சை தொகுதியின் ஆம் ஆத்மி வேட்பாளரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. நமதூரில் இருக்கும் ஆம் ஆத்மியின் ஒவ்வொரு ஓட்டும் முக்கியமானதாக உள்ளது. அதிரைக்கு தேவையான கோரிக்கைகளை அனைத்து வேட்பாளர்களிடம் பகிர்ந்தால் நல்லதாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

    அனைவரும் அரைத்த மாவினை அரைக்காமல் ஊரின் இன்றைய‌ முக்கியமானதாக கருதப்படும் குடிதண்ணீர்,சுகாதாரம்,அகல ரயில் பாதை போன்ற கோரிக்கைகளை அனைத்து வேட்பாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வது நல்லது.

    அடுத்து தண்ணீர் கொண்டு வந்த கதை போல் நான் தான் கொண்டுவந்தேன்,இவர் தான் கொண்டு வந்தார் என்று பெருமைக்கு முக்கியத்துவம் அளிக்காமல் ஊரின் ஒற்றுமைக்காக ஊரில் உள்ள அனைவராலும் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது என்று சொல்லுவோமாக!!!

    மத்திய அல்லது மாநில தேர்தல் என்றால் ஊர் மக்களுக்கு நல்ல திட்டத்திற்காக பெரிய தலைவர்களை சந்திப்பதினை வரவேற்கிறென்.ஆனால் இன்று நமதூர் முக்கியமான நபர்கள் தனது சொத்துசுகத்தினை பார்பதற்கு வருங்கால வியாபரத்திற்கு பாதுகாப்பதற்கு அரசியல் தலைவர்களை சந்தித்த வண்ணம் உள்ளனர்...எல்லாம் சுயநலம் தான்....

    ReplyDelete
  6. தமிழ் நாட்டை பொருத்தவரை காங்கிரஸ் கட்சிக்கு இனிமேல் அஸ்தமனமா, தி முக அஸ்தமனமா என்று இந்த தேர்தலில் தெரியும். திமுகவின் ஊழல்கள் மற்றும் அதன் செயல்களை வைத்து பார்க்கும் போது இனி காங்கிரஸ் திமுக கூட்டணி கூடாது, காங்கிரஸ் தமிழகத்தில் தனித்து செயல்பட்டால் தான் வளர முடியும் ஆனால் காமராஜ் காமராஜ் ஆட்சின்னு கொக்கரிச்ச தலைவர்கள் போட்டி இட வில்லை ஏன்? தோல்வி பயமோ?

    ReplyDelete
  7. ஓட்டு கேட்டு வரும் காங்கிரஸ் வேட்பாளர் MMS கரிம்காக்காவை கண்ணியமா வேட்பாளர் வண்டியிலே ஏத்திகிட்டாங்க..ஆனா அதிமுக, திமுக வேட்பாளர்கள் அஜீஸையும், அஸ்லமையும் வேட்பாளர் வண்டியிலே ஏத்துறாங்கலானு பாப்போமே?

    ReplyDelete
  8. ஓட்டு கேட்டு வரும் காங்கிரஸ் வேட்பாளர் கரீமாக்காவை கண்ணியமா வேட்பாளர் வண்டியிலே ஏத்திகிட்டாங்க..ஆனா அதிமுக, திமுக வேட்பாளர்கள் அஜீஸையும், அஸ்லமையும் வேட்பாளர் வண்டியிலே ஏத்துறாங்கலானு பாப்போமே

    ReplyDelete
    Replies
    1. ஓட்டு கேட்டு வரும் காங்கிரஸ் வேட்பாளர் கரீமாக்காவை கண்ணியமா வேட்பாளர் வண்டியிலே ஏத்திகிட்டாங்க..ஆனா அதிமுக, திமுக வேட்பாளர்கள் அஜீஸையும், அஸ்லமையும் வேட்பாளர் வண்டியிலே ஏத்துறாங்கலானு பாப்போமே

      Delete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. பட்டுக்கோட்டை மேலும் மேலும் வளர்ச்சியின் உச்சத்திற்கு சென்றுகொண்டு இருக்கிறது. நம்ம தொகுதி MLA, MP, அனைவரும் முதலில் பட்டுக்கோட்டையே தான் கவனிக்கிறார்கள். ஏன் நமதூர் மக்கள் அவர்களுக்கு வாக்களிக்கவில்லையா பிறகு ஏன் நமதூர் வளர்ச்சிக்கு உதவ மறுக்கிறார்கள். பேருந்து நிலையம் அமைக்கவும், அரசு மருத்துவமனையே விரிவுபடுத்திதருமாறும் பேருந்து வசதி ஏற்படுத்தி தருமாறும், எங்கள் அடிப்படை தேவையே நிறைவேற்றி தருமாறும், எங்கள் ஊருக்கு புகைவண்டி வர முயற்சி செய்யுங்கள் என்றும் கூறினால் நிதி பற்றாக்குறை என்று கூறுகிறார்கள். பட்டுக்கோட்டை வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கிறார்கள் அந்த நிதி எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை. நம்ம ஊருக்கு செய்ய சொன்னால் மட்டும் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுவிடும். நமதூர் மக்கள் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதற்கும், இன்னொருபக்கம் திமுக கட்சி வெற்றி பெறவும், இன்னொருபக்கம் அதிமுக கட்சி வெற்றி பெறுவதற்கும் நம்ம உயிரை கொடுத்து உழைக்கிறோம். இதில் ஒரு கட்சி வெற்றி பெரும் அந்த கட்சி வேட்பாளரிடம் எங்கள் ஊருக்கு இந்த இந்த வசதிகள் செய்து தாருங்கள் என்று கூறினால் இரண்டு திட்டங்களை நிறைவேற்றுவதற்குள் ஐந்து ஆண்டு முடிந்துவிடும். அடுத்த தேர்தலில் வெற்றி பெற்ற பின் செய்து தருகிறேன் என்று கூறிவிடுவார். நாம் அவர்கள் வெற்றி பெற இரவு, பகல் பாராமல் உழைத்ததற்கு நமதுருக்கும், நமதூர் மக்களுக்கும் அமைதிப்படை அல்வாவை கொடுத்து விட்டு சென்றுவிடுவார். அப்புறம் என்ன அடுத்த தேர்தல்தான். மக்களே நீங்கள் கட்சியால் வேறுபட்டு இருந்தாலும் நீங்கள் அனைவரும் அதிராம்பட்டினத்தை சார்தவர்கள் என்பதை மட்டும் மறந்துவிட கூடாது. நமதுருக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை பெற நாம் அனைவரும் ஒன்றாக இணையவேண்டும். ஊரின் முன்னேற்றமே ரொம்ப முக்கியம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.