.

Pages

Friday, April 25, 2014

அதிரையில் எந்த கட்சி எத்தனை வாக்குகள் பெரும் ? Exclusive ரிப்போர்ட் !

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட மொத்தம் 21 வார்டுகளில் உள்ள 22,856 வாக்குகளில் நேற்று பதிவான வாக்குகள் 14,522 என்றும், இது சதவீதத்தில் 62.7 என்றும் தகவல் தெரிவிக்கின்றன.

நேற்று நடைபெற்ற வாக்கு பதிவின் போது அதிரையின் முக்கிய பகுதிகளில் வலம் வந்த அதிரை நியூஸ் குழுவினர் நேரடியாக சென்று திரட்டப்பட்ட தகவல், பொதுமக்கள், அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் ஆகியோரிடம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் அதிரையில் பதிவான வாக்குகளில் எந்த கட்சிக்கு எத்தனை வாக்குகள் கிடைக்கும் என்பதை உத்தேசமாக கணித்து வழங்குகின்றோம். இதில் 500 க்கும் குறைவான வாக்குகள் பெற இருக்கும் கட்சிகள் இந்த லிஸ்டில் இடம்பெறவில்லை.

இந்த உத்தேச கணிப்பில் முதல் இடத்தை திமுகவும், இரண்டாம் இடத்தை அதிமுகவும், மூன்றாம் இடத்தை காங்கிரஸ் / பிஜேபி கட்சிகள் பெறுகின்றன.

திமுக பெறும் வாக்குகள் ( 7500 லிருந்து 10000 வரை )
அதிமுக பெறும் வாக்குகள் ( 4000 லிருந்து 6000 வரை )
காங்கிரஸ் பெறும் வாக்குகள் ( 1200 லிருந்து 2000 வரை )
பிஜேபி பெறும் வாக்குகள் ( 1500 லிருந்து 2000 வரை )

திமுக ( )
அதிரையில் திமுக வை பொறுத்தவரை கடந்த காலங்களில் திமுகவின் கோட்டையாக திகழ்ந்து வருவதற்கு இஸ்லாமியர்களின் வாக்கு வங்கியும் ஒரு காரணம். அடுத்ததாக திமுக சார்பில் தற்போது நிறுத்தப்பட்டிருக்கும் பலமான வேட்பாளர். கூட்டணி கட்சிகளாகிய மமக, முஸ்லீம் லீக், எஸ்டிபிஐ, ததஜ ஆகியவற்றின் பலமான ஆதரவு மற்றும் இக்கட்சியினர் ஆற்றிய களப்பணி ஆகியன கூடுதல் வாக்குகள் கிடைக்க காரணமாக அமையும் என்கின்றனர்.

கடைசி நேரத்தில் உடன் பிறப்புகளை கண்டுகொள்ளாமல் விட்டதும் பெரும் குறையாக கருதப்படுகிறது. குறிப்பாக ஆரம்பத்தில் திமுகவிற்காக தேர்தல் பணி செய்தவர்கள் கடைசி நேரத்தில் பிற கட்சிகளுக்காக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது. மேலும் வாக்கு சேகரிப்பில் தனித்தனி கோஷ்டிகளாக இருந்து செயல்பட்டதும் வாக்குகள் சிதற காரணமாக அமைந்துவிட்டதையும் குறிப்பிடுகின்றனர்.

அதிமுக ( )
கடந்த உள்ளாட்சி தேர்தலில் பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அதிரை அப்துல் அஜீஸ் இரண்டாம் இடத்தை பெற்றார். அதிரையின் முக்கிய பகுதிகளை 'கவர்' செய்து வாக்கு சேகரித்தது எதிர் பார்த்ததை வீட சற்று கூடுதலான வாக்குகள் கிடைக்கும் என்றும், தேர்தல் ஆணைய அலுவலர்களின் ஒத்துழைப்பு, வாக்காளர் லிஸ்டில் குறிப்பிட்ட நபர்களின் பெயர்கள் விடுபட்டுபோனது எதிர் அணியினர் அதிக வாக்குகள் பெற இயலாமல் போவதற்கு காரணமாக அமைந்திருப்பது இக்கட்சிக்கு சாதகமாக அமைந்துவிட்டது என குறிப்பிடுகின்றனர்.

கடைசி நேரத்தில் ததஜ அமைப்பினர் அதிமுகவிற்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுகிறோம் என்ற அறிவிப்பால் கட்சி பெறக்கூடிய கூடுதல் வாக்குகள் குறைந்துள்ளதாகவும், அதிரையில் உள்ள குறிப்பிட்ட சில ஏரியாக்களில் 'கவர்' செய்யாதது குறித்தும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் ()
மேலத்தெரு, தரகர் தெரு, முத்தம்மாள் தெரு, கரையூர் தெரு, காந்திநகர், பழஞ்செட்டி தெரு ஆகிய பகுதிகளில் விழுந்துள்ள பாரம்பரிய வாக்குகள் தவிர புதிதாக விழுவதற்கு வாய்ப்பில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிஜேபி ()
சமீபத்தில் நிகழ்ந்த மல்லிபட்டினம் கலவரத்திற்கு பிறகு வேட்பாளர் மீது தனிக்கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும், குறிப்பாக கரையூர் தெரு, சால்ட் லேன், பிள்ளைமார் தெரு, காந்தி நகர், பழஞ்செட்டி தெரு, வள்ளியம்மை நகர், செட்டித்தோப்பு காலனி ஆகிய பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலான இந்து சமூகத்தினர் இவருக்கு வாக்குகள் செலுத்திருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.

மேலும் நகரில் வலம்வந்த நாம், வாக்காளர் லிஸ்டில் தங்களின் பெயர் விடுபட்டுள்ளது என முக்கிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் ஆதங்கமடைந்தததை காணமுடிந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேர்தல் ஆணையம் சார்பில் வெளியிடப்பட்ட உத்தேச பட்டியிலில் அனைத்து வாக்காளர்களின் பெயர்களும் உள்ளதா ? என சரிபார்க்க அழைப்பு விடப்பட்டது. இவற்றை எந்தவொரு கட்சியினரும், அமைப்பினரும், சமூக ஆர்வலரும் கவனத்தில் எடுத்துக்கொள்ளாதது பெரும் வருத்தத்திற்குரியது.

அதிரை நியூஸ் குழுவினர்

8 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. your report is not accurate, and you can see the congress vote in beach street also ,

    ReplyDelete
  3. Bjp congress not more vots maybe 1000

    ReplyDelete
  4. அதிரை நியூசின் முந்தைய கருத்து கணிப்புகள் ஓரளவுக்கு ஒத்துப்போயின, இந்த முறையும் ஒத்துப் போகலாம், காரணம் அவர்கள் தளத்தில் செய்தியை போடும் முன்பு நன்றாக சிந்தித்த பின்பே போடுகின்றனர்.

    ReplyDelete
  5. தேர்தல் வேலை செய்யாமல் அதிக வாக்கு வாங்க போவது காங்கிரஸ் தான். வேலை செய்தும் பாரம்பரிய வாக்கு வாங்க போவது DMK .

    யாரும் எதிர்பாரதவிதமாக ADMK வாக்கு கிடைக்கபோவுது ஏன்னா இவங்க தானே பணத்தை அள்ளி கொடுத்தார்கள்!

    பணத்துக்கு ஓட்டு மக்கள் எண்ணங்களுக்கு வேட்டு!

    ReplyDelete
  6. டி ஆர் பாலு தோற்றால் அதிரை நலம் பெரும், அதிரைக்கு ரயில் வரும் ,tntj யின் முடிவை பெரும்பாலான தவ்ஹீத் சகோதரர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

    ReplyDelete
  7. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
    உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.