.

Pages

Wednesday, April 9, 2014

சட்டையையும், முகத்தையும் கீறிவிடும் சாலையோர கருவமுள்ளு !? [ படங்கள் இணைப்பு ]

கடற்கரையோர ஊரான அதிரையில் கிழக்கு கடற்கரை [ ஈசிஆர் ] சாலை உள்ளது. இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அதிகாலை, மாலை நேரங்களில் வாக்கிங், சைக்கிளிங், ஜாக்கிங் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்வதும் உண்டு. இந்த சாலைகளில் தினமும் 1000க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. இதில் கனரக, இலகு ரக, இருசக்கர, மாட்டு வண்டிகள், நடவண்டிகள் என அனைத்து வகை வாகனங்களும் செல்கின்றன. இதில் வேகமாக செல்லும் வாகனத்தால் நிகழும் விபத்துகளால் உயிரிழப்பு அவ்வபோது ஏற்படுவது ஒருபுறமிருந்தாலும், தம்பிகோட்டை முதல் அதிரை வழியாக சேதுபாவா சத்திரம் வரை உள்ள சாலையின் இருபுறங்களிலும் ஆங்காங்கே வளர்ந்து காணப்படும் கருவ மரங்களால் வளைவான சாலைகளில் முன்னும் பின்னும் வாகனங்கள் வருவது தெரியாமல் விபத்துகள் ஏற்படுகிறது. விபத்தை ஏற்படுத்தும் இந்த கருவ மரங்களை அகற்றுவதற்கு நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதியினரின் முக்கிய கோரிக்கையாக இருக்கிறது.

இதுகுறித்து தினமும் சாலை வழியே சைக்கிளிங் செல்லும் 'சமூக ஆர்வலர்' S.P பக்கீர் முஹம்மது நம்மிடம் கூறுகையில்...
'நான் தினமும் அதிகாலையில் இச்சாலையில் சைக்கிளிங் செல்கிறேன். சாலையின் இருபுறங்களிலும் அதிகமான கருவ மரங்கள் சூழ்ந்து காணப்படுவதால் எதிரே வரும் வாகனங்களை என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை. இதே சிரமங்கள் மற்றவர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் ஏற்பட்டு வருகிறது. இதனால் இந்த பகுதிகளில் விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கின்றன. சாலையில் சூழ்ந்து காணப்படும் கருவ மரங்களை பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்டவர்கள் வெட்டி அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் நிம்மதியாக இருப்பார்கள்' என்றார்.

இதுகுறித்து தினமும் சாலை வழியே வாக்கிங் செல்லும் 'சமூக ஆர்வலர்' அப்துல் ரஹ்மான் நம்மிடம் கூறுகையில்...
'இச்சாலையில் நான் தினமும் அதிகாலையில் வாக்கிங் செல்கிறேன். சாலையின் இருபுறமும் மண்டிக்கிடக்கும் கருவ மரங்களால் ஈசிஆர் சாலை சுருங்கி எதோ கிராமப்புற சாலையை பார்ப்பதுபோல் இருக்கிறது. வளைவுகளில் எதிரே வரும் வாகனங்களும் தெளிவாக தெரிவதில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த சாலை வழியே வாக்கிங் செல்லும்போது எதிரே வரும் வாகனத்திற்கு வழிவிடுவதற்காக சாலையோரத்தில் ஒதுங்கும் போது, எதிர்பாராதவிதமாக அங்கு காணப்படும் கருவ முள்ளுகள் என் முகத்தையும், அணிந்துள்ள சட்டையையும் கீறிவிட்டது. இதுபோன்ற அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டதுபோல் நிறைய பேருக்கு ஏற்பட்டிருக்கக்கூடும். எனினும் சம்பந்தப்பட்டவர்கள் இவற்றை உடனடியாக அப்புறப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.









8 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. கருவை முள் சட்டை மற்றும் முகத்தைக் கீறுவதை சொல்லி இருக்கிறீர்கள். நமது வாழ்வாதாரமான மழை , நிலத்தடி நீர் ஆகியவற்றையும் இந்தக் காடுகல்தான் கீறுகின்றன. இது பற்றி ஒரு விழிப்புணர்வு கட்டுரை இந்த தளத்திலும் என்னால் எழுதப் பட்டு இருக்கிறது. ஆனால் கேட்பார் யாருமில்லை. போகப் போக இது எவ்வளவு ஆபத்து என்று புரியும்.

    கல்லூரி , பள்ளி விடுமுறை நாட்களில் தன்னார்வ அமைப்புகள் மாணவர்களை வைத்துக் கொண்டு இவைகளை வெட்டிக் களைய ஒரு செயல்திட்டம் அமைப்பது அவசியம் அவசியம் அத்தனை அவசியம்.

    அதே போல் அரிமா சங்கத்தின் மூலம், நடைப் பயிற்சி செய்யும் சாலை ஓரங்களில் மரக கன்றுகளை நடுவது பற்றியும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

    ReplyDelete
  4. காடுகள் பசுமைகள் இருந்தால் தான் நல்ல மழை பொழிய வாய்ப்பை ஏற்படுத்தும். ஆனால் இந்தக் கருவங்காடுகளைக் கொண்டு யாதொரு பயனும் இல்லை. மாறாக நிலத்தடி நீரை உறிஞ்சுவதுடன் வரட்சியையே ஏற்படுத்தும். ஆகவே இக்கருவங்காடுகளை ஒழித்து வேறு நல்ல பயன் தரக் கூடிய மரங்களை வளர்க்க முயற்ச்சித்தால் பருவ மழை சரியாக பெய்ய வாய்ப்பை ஏற்படுத்துவதுடன் இதன்காரணமாக ஏற்படும் இத்தகைய சாலை விபத்துக்களும் குறையும்.

    இதை யார் தான் சரிசெய்வது.???

    ReplyDelete
  5. கருவ காடுகளை அழிப்பதற்கென்றே இயக்கங்கள் உண்டு. அத்தகையவர்களை அணுகி ஆலோசனைப் பெறலாம். நமதூரில் மரங்களை நடுவதற்கு பத்தாண்டுகளுக்கு முன் இருந்த ஆர்வம் தற்போது இல்லை.

    தேர்தலுக்கு பணத்தை வாங்காமல் அதற்கு பதில் என் சார்பா பத்து செடி நடு உனக்கு ஓட்டு போடுறேன் என்றாவது சொல்லலாம்.

    ReplyDelete

  6. Ebrahim Ansari9 April 2014 18:03


    கருவை முள் சட்டை மற்றும் முகத்தைக் கீறுவதை சொல்லி இருக்கிறீர்கள். நமது வாழ்வாதாரமான மழை , நிலத்தடி நீர் ஆகியவற்றையும் இந்தக் காடுகல்தான் கீறுகின்றன. இது பற்றி ஒரு விழிப்புணர்வு கட்டுரை இந்த தளத்திலும் என்னால் எழுதப் பட்டு இருக்கிறது. ஆனால் கேட்பார் யாருமில்லை. போகப் போக இது எவ்வளவு ஆபத்து என்று புரியும்.

    பதிவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    சகோதார்களே இதை ஏன் புகாராக யாரும் பதிவு செய்யவில்லை?

    ReplyDelete
  7. நமது வாழ்வாதாரமான மழை , நிலத்தடி நீர் ஆகியவற்றையும் இந்தக் காடுகள்தான் கீறுகின்றன. இது பற்றி ஒரு விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்த முயற்சிகள் எடுக்க வேண்டும்

    ReplyDelete
  8. அடிக்கடி விபத்து நடந்தும் கூட நெடுஞ்சாலை துறை கண்டுகொள்ள வில்லை, தேர்தல் பிரசாரம் பண்ண அம்மையார் வருவதாக இருந்தால் நீங்கள் சொல்லும் குறை போர்கால அடிப்படையில் வேலை நடக்கும் -இது நடக்குமான்னு தெரியல.

    மாணவர்களை வைத்து வேலை வாங்க நினைப்பதை விட நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை அணுகி வேலை வாங்க முயற்சிக்கலாம்- தென்னை மரம் ரோட்டோரம் இல்லாதால் அவர்கள் இப்பக்கம் வரமாட்டங்க

    தம்பி அப்துல் ரஹ்மான் வாக்கிங் போய்யும் உடம்பு குறையல உண்மையில் வாக்கிங் போறியா ? அல்லது சமூக ஆர்வலர் என்று சொல்வதற்கு போட்டோ எடுத்தியா? ஊர்ல ரொம்ப பேர் சொல்லிக்கிட்டு அலையுறாங்க.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.