.

Pages

Sunday, April 20, 2014

காங்கிரசை ஏன் ஆதரிக்க வேண்டும் ? அமெரிக்காவிலிருந்து M.I. நூர் முஹம்மது கூறும் விளக்கம் !

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்...
       
காங்கிரசை ஏன் ஆதரிக்க வேண்டும் ?

2014 நாடாளமன்ற தேர்தலும் முஸ்லிம் அமைப்புகளும் வாக்காளர்களும் விளங்கவேண்டிய உண்மைகள் :
வர இருக்கும்  தேர்தல் நம்மை ஒரு பெரிய சர்வாதிகாரி எதிர் கொள்கின்றான். அவனை வீழ்த்துவதற்கு அவனுக்கு எதிரி யார் என்பதை நாம் நன்கு விளங்கி அவனுடைய எதிரியைதான் நாம் ஆதரிக்க வேண்டுமே தவிர மற்ற பிராந்திய கட்சிகளுக்கு ஆதரவு கொடுத்தால் அது சர்வாதிகாரிக்கு சாதகமாகிவிடுமே தவிர அவனுக்கு எதிரி ஆகி விடாது,ஒருக்கால் தேர்தல் முடிவுக்கு பிறகு தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால் திராவிட கட்சிகள் எல்லாம் அவருக்கு (மோடிக்கு) மந்திரி பதவிக்காக ஆதரவு கொடுத்துவிடுவார்கள்.
         
எந்த ஒரு பிராந்திய கட்சிகளோ  முஸ்லிம் அமைப்புகளோ, சுயட்சை வேட்பாளர்களோ நாட்டை ஆளபோவதில்லை, இரண்டு பெரிய காட்சிகளில் ஒரு கட்சிதான் நாட்டை ஆள போகின்றது.இந்த இரண்டில் யார் பெரிய சர்வாதிகாரி என்று பார்த்தும், எதிர்த்தும் வாக்களியுங்கள். TNTJ தலைவர் சொன்னார், TMMK   தலைவர் சொன்னார், SDPI  தலைவர் சொன்னார்,முஸ்லிம் சுயட்சை சொன்னார் என்று நமது வாக்குகளை செலுத்தினால் அது சர்வாதிக்காரிக்கு மிகவும் சாதகமாகிவிடும்.சர்வாதிகாரி பிராந்திய கட்சிகளை எதிர் கொள்வதில்லை இந்துத்துவவாதிகளின் ஓட்டுகள் எல்லாம் சர்வாதிக்காரர்களுக்கு முழுமையாக சேர்ந்துவிடுகிறது .
         
நம் சமுதாய மக்கள் பிளவுப்பட்டு பிராந்திய கட்சிகளுக்கும் முஸ்லிம் அமைப்பகளுக்கும் ,சுயட்சைகளுக்கும் நமது வாக்குகளை செலுத்தினால் காங்கிரசின் எண்ணிக்கை குறைந்து விடும்,அப்படி குறைந்துவிட்டால் சர்வாதிகளுக்கு மிகவும் கொண்டாட்டமாகிவிடும். இப்போது சர்வாதிகாரியை எதிர்க்கும் சில பிராந்திய கட்சிகள் வெற்றிப்பெற்றால் தேர்தலுக்கு பிறகு மந்திரி பதவிக்காக இவர்கள் நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு ஆதரவை தெரிவிப்பார்கள் என்பதை மறுப்பதற்கு ஒன்றுமில்லை.கடந்த தேர்தல்களில் இதுபோல் நடந்த உண்மைகளை கண்டிருக்கின்றோம்.  எனவே நம் சமுதாய மக்கள் சிந்தித்தும், ஒன்றுப்பட்டும் செயல்பட வேண்டுகின்றோம்.

இப்படிக்கு உங்கள் சகோதரன்...
M .I  நூர் முஹம்மத் ( USA )

8 comments:

  1. சகோ. கூறும் விளக்கம் முற்றிலும் உண்மை, ஏற்றுக் கொள்ளத் தக்கதும்.

    சகோ. அமேரிக்கா போய் எத்தனை வருஷம். தற்போது நீங்கள் ஊரு பக்கம் வந்து பாருங்கள், நீயா நானா இல்லை "நீங்கலா நாங்களா" இது தான் நடந்து கொண்டு இருக்கின்றது, பொது நலன் அறவே இல்லாமல் போய்விட்டது, சுயநலம் படமெடுத்து ஆடுகிறது.

    நீங்கள் ஊருக்கு வருவதற்குள், ஊரு முழுக்க வெறும் கொடிக் கம்பங்கள்தான் காட்சி தரும்.

    இன்னும் ஒரு மாதம் பொறுத்து இருந்து பார்ப்போம், பிறக்கப்போவது ஆண் பிள்ளையா பெண் பிள்ளையா என்று.

    உங்கள் கடிதத்திற்கு நன்றி.

    ReplyDelete
  2. உண்மை தான் : பிராந்திய கட்சிகள் கொள்ளை அடிப்பதிலும் தன்னை பாதுகாத்து கொள்வதிலும் தன் குடும்ப அரசியல் செய்வதிலும் தான் முனைப்புடன் செய்துக் கொண்டிருக்கிறனர்.

    கொள்ளை அடித்தவனுக்கு வாக்கு சேகரிப்பதற்கு இயக்கங்கள் போட்டி போட்டு ஆதரவு தெரிவித்து அப்பாவி முஸ்லிம்களை மடையர்கள் போல் நினைக்கிறனர்.

    திராவிட கட்சிகள் முன்பு பிஜேபி உடன் கூட்டு வைத்தவை தான் ஆனால் முன்பு நிலைமை போல் இப்போ இல்லை -

    முஸ்லிம்களை கொன்று குவித்தவன் பிரதமர் பதவிக்கு வர போட்டி இட்டுள்ளான் " நான் அவனில்லை " என்று சொல்பவர் பதவிக்கு வந்த பிறகு எப்படியோ!

    ReplyDelete
  3. மத்தியில் மதசார்பற்ற அரசு அமைய எண்ணுகின்ற கட்சிகளுக்கு இவர்களின் பங்கில்லாமல் ஆட்சி அமைப்பது கஷ்டமான ஒன்றுதான்.

    ReplyDelete
  4. காக்கா நூர் முஹம்மது எழுதி ஆக்கம் உண்மையானதே, தேர்தலில் பல அரசியல் கட்சிகள் வாக்குறுதிகள் கொடுப்பதும் ஆட்சிக்கு வந்தவுடன் அதை செயல்படுத்தாமல் கிடப்பில் போடுவதையும் நாம் காண முடிகிறது.

    ஒரு மனிதன் சுயமாக சிந்தித்து வாக்காளித்தாளே போதும்,மேலும் நமது ஊரில் சுயமாக சிந்திக்க முடியாமல் பலர் அவரு என்ன சொன்னாரு,இவரு என்ன சொன்னாரு என்று காரெட்டதான் சொல்லி இருப்பாரு என்று வாக்குகள் செலுத்தப்படுகின்றன.

    முன்பொரு காலத்தில் நமது ஊரில் படித்தவர்களின் எண்ணிக்கை குறைவு ஆகையால் அவரு சொல்லிட்டாரு என்பதற்க்காக வாக்குகள் செலுத்தினர்.
    ஆனால் இன்று அனைவரும் நல்ல படிப்பு நவீன தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி பிற்காலத்திலே இருந்து கொண்டு இருக்கின்றனர்.

    ஓட்டுரிமையை யார் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் செலுத்தலாம்,ஒரு வீட்டில் பல அமைப்புகளை சார்ந்தவர்கள் உள்ளனர்.இதனால் வீட்டில் உள்ளும் பிரச்சினை வெளியிலும் பிரச்சினை தான்.

    சிந்தித்து வாக்கு அளிக்க அன்பான வேண்டுகொள்.

    ReplyDelete
  5. முன்பொரு காலத்தில் நமது ஊரில் படித்தவர்களின் எண்ணிக்கை குறைவு ஆகையால் அவரு சொல்லிட்டாரு என்பதற்க்காக வாக்குகள் செலுத்தினர்.
    ஆனால் இன்று அனைவரும் நல்ல படிப்பு நவீன தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி பிற்காலத்திலே இருந்து கொண்டு இருக்கின்றனர்.

    ஓட்டுரிமையை யார் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் செலுத்தலாம்,ஒரு வீட்டில் பல அமைப்புகளை சார்ந்தவர்கள் உள்ளனர்.இதனால் வீட்டில் உள்ளும் பிரச்சினை வெளியிலும் பிரச்சினை தான்.

    சிந்தித்து வாக்கு அளிக்க அன்பான வேண்டுகொள்.

    ஒரே குத்து கை.

    ReplyDelete
  6. உங்களின் விலைமதிப்பற்ற வாக்குகளை வீணடிக்க வேண்டாம்.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. நண்பர் நூர் முகம்மதுவின் ஏக்கம் புரிகிறது. பி ஜெ பி, காங்கிரஸ் இரண்டிற்கும் வண்ணங்கள் தான் மாருகிறதே தவிர எண்ணங்கள் ஒன்றுதான். நம் சமுதாயத்தில் ஒற்றுமை ஏற்படாத வரையில் இதற்க்கு விடையே கிடையாது.

    அன்புடன்
    ஜமால் முகம்மது
    துபை.
    +971508413474

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.