.

Pages

Saturday, April 12, 2014

கருமையாக காட்சியளித்த கோழி இறைச்சியால் அதிரையில் நிலவிய பரபரப்பு !

அதிரை மேலத்தெருவை சேர்ந்தவர் மல்ஹர்தீன். இவர் நேற்று காலை விற்பனைக்காக தெருவில் கூவிவந்த நாட்டுக்கோழியை சமைப்பதற்காக வியாபாரியிடமிருந்து விலைகொடுத்து வாங்கியுள்ளார். கருப்பு நிறமாக காணப்பட்ட கோழியை வீட்டில் வைத்து அறுத்து உறித்திருக்கிறார். அப்போது கோழி இறைச்சி முழுவதும் கருமை நிறமாக காட்சியளித்தது இவருக்கு பெரும் ஆச்சரியமாக இருந்துள்ளது. தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் கருமையாக காட்சியளிக்கும் கோழி இறைச்சியை ஆச்சரியத்துடன் பார்வையிட்டு சென்றனர். இதனால் இந்தபகுதி பரபரப்பாக காணப்பட்டது.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த 'சமூக ஆர்வலர்' S.P. பக்கீர் முஹம்மது நம்மிடம் கூறுகையில்...
'இவ்வகை கோழிகள் வடநாட்டை தாயகமாகக் கொண்டவை. காடுகளில் தானாக வளரும் தன்மையை பெற்றிருக்கிறது. இந்த கோழிகள் அத்தி பூத்தார்போல் எப்போதாவது ஒருமுறை தெருவில் வந்து விற்கப்படுகிறது, இக்கோழியின் இறைச்சி ருசியாக இருப்பதுடன் மருத்துவ குணமும் கொண்டது. இந்த இறைச்சியை இரத்த கொதிப்பு, இதய நோய் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பவர்கள் அதிக அளவில் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் முட்டைகளில் அதிக அளவில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. பொதுமக்கள் விரும்பி இவற்றை சாப்பிடலாம்' என்றார்.

7 comments:

  1. மருத்துவம் கொண்ட கோழின்னு சொல்லிட்டீங்க இனி இந்த கோழிக்கு கிராக்கி தான். நல்ல பாருங்க இது வட நாட்டு கோழியா? இல்ல கொட நாடு கோழியா? இனி கலர் பூசி விற்கப்படும்- மக்களே உஷார்!!!

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    ஒரு நாட்டு வைத்தியரின் அறிவுரையின் பேரில் மருத்துவம் குணம் கொண்ட இந்த கருங்கோழியை நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு நான் சாப்பிட்டதுண்டு.



    ReplyDelete
  3. இப்படியும் கோழி இருக்கா? நம்பவே முடியலேயே, பெரியவங்க எல்லோரும் சொல்லும்போது நம்பவேண்டியதுதான்.

    ReplyDelete
  4. கோழியில் இப்படியும் ஒரு வகை உண்டு.

    ReplyDelete
  5. Take care may be its poisoned, reason to change color.

    ReplyDelete
  6. இந்த வகை கோழியின் பெயர் ப்ளேக் சிக்கன் அல்லது சில்க்கி சிக்கன். தமிழில் கருங்கோழி. உடலுக்கு உஷணத்தை தரக்கூடியது.
    முதன் முதலாக சிங்கப்பூரில் ஹனிபா டெக்ஸ்டைல்ஸ் வீட்டில் 1987ல் ஜலதோஷத்திற்காக சூப் வைத்து தந்தார்கள். மறுநாள் காலை ஜலதோஷம், உடல்வலி எல்லாம் பறந்து விட்டது. சிங்கப்பூருக்கு லாவோஸ் வியட்நாமிளிருது வருவதாக சொன்னார்கள். அமேரிக்கா, ஐரோப்பா, சீனாவிலும் இருக்கிறது என்று நினைக்கிறேன்.
    நியூ யார்க்கில் டெட்மார்ஸ் புலிவார்ட் 33ஆவது தெரு 20ஆவது அவெனுவில் இருந்த எமனியின் உயிர்க்கொழிகளை ஹலால் செய்து விற்கும் கடையில் வாங்கி இருக்கிறேன். இப்போது அந்தக்கடை இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை.
    மேலும் டவுன் டவுனில் மீன் மாகேட்டில் உள்ள சைனீஸ் கடைகளில் ஹலால் செய்யப்படாதவை இறக்குமதியானவை பிரீசரில் வைத்து விற்கிறார்கள்.
    ஹலால் கிடையாது ஆதலால் வாங்கவில்லை.
    உடல் முழுவதும் மூக்கிலிருந்து கால் நுனி வரையிலும் இறகுகள் இருக்கும்.
    இறகுகளை நீக்கிப்பார்த்தல் தோல் கருப்பாக இருக்கும்.
    இதன் கறி கருப்பாக அல்லது அரக்கு கலரில் இருக்கும்.
    மேலும் அறிய கூகுளில் Black Chicken என்று தேடிப்பாருங்கள். images ஐயும் கிளிக் செய்து பாருங்கள்.
    அதன் பியோஜனங்கள் பற்றி அறிய Black Chicken Benefits என்று தேடிப்பாருங்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.