சீனாவில் வசிக்கும் 45 வயது குவோ கன்டங், கடந்த 18 ஆண்டுகளாக தன்
மகனைத் தேடி அலைகிறார். 1997-ம் ஆண்டு 2 வயது குழந்தையாக இருந்த
குவோ ஸென், வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது நடுத்தர வயது
பெண் ஒருவர் குழந்தையைத் தூக்கிச் சென்றுவிட்டதாகச் சொன்னார்கள். அன்று ஆரம்பித்த
தன் தேடுதல் வேட்டையை 18 ஆண்டுகள் ஆகியும் குவோ நிறுத்தவில்லை.
இதுவரை 4 லட்சம் கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து, சீனாவின்
அனைத்து மாகாணங்களுக்கும் சென்று வந்துவிட்டார். மோட்டார் சைக்கிளின் இருபுறமும்
குழந்தையின் புகைப்படம் பிரிண்ட் செய்யப்பட்ட கொடிகளுடன் பயணிக்கிறார். இதுவரை 10 மோட்டார்
சைக்கிள்களை மாற்றியுள்ளார். மகனைத் தேடுவதிலேயே வாழ்க்கைக் கழிவதால், போதுமான
வருமானமும் இல்லை. சில நேரங்களில் சாப்பிடக்கூட வழியில்லாமல் பயணம் செய்துகொண்டே
இருப்பார்.
ஒவ்வொரு நாளும் பயணத்தைத் தொடங்கும்போது, ’இன்று என் மகன்
கிடைத்துவிடுவான்’ என்று நினைத்துக்கொண்டே கிளம்புகிறார். மாலையில் சோர்வாகத்
திரும்பும்பொழுதும், ’நாளை கண்டிப்பாகக் கிடைத்துவிடுவான்’ என்று
தனக்குத்தானே சொல்லிக்கொள்கிறார். காணாமல் போன எத்தனையோ குழந்தைகள் மீண்டும்
குடும்பத்துடன் சேர்ந்த செய்திகளும், சில நல்ல மனிதர்கள்
இதுபோன்ற குழந்தைகளை நன்றாகப் பார்த்துக்கொள்ளும் தகவல்களும் குவோவை உற்சாகத்துடன்
இயங்க வைக்கின்றன.
குவோ குடும்பத்தினர் இதுவரை தங்கள் குடும்பப் புகைப்படம்
எடுத்ததில்லை. குவோ ஜெஸ் வந்த பிறகு எடுத்துக்கொள்ளலாம் என்று
காத்திருக்கிறார்கள். குழந்தை காணாமல் போன பொழுது குவோவின் பழைய வீடு, கொஞ்சம்
மாற்றிக் கட்டப்பட்டது. ஒருவேளை குழந்தையால் தன் வீட்டை அடையாளம் காண முடியாமல்
போய்விட்டதோ என்று கவலைப்படுகிறார் குவோ.
கிரேட் அப்பா!

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.