கடல் கடந்து வந்து தன் வேலைப்பளு மத்தியில் வாராவாரம் வெள்ளி கிழமைகளில் கடந்த இருமாதங்களாக பல போட்டிகளில் ஆடி அயராது உழைத்து தன் ஊருக்கு பெறுமை சேர்த்துத்தந்த நமதூர் ABCC துபாய் கிரிக்கெட் அணி சென்ற வாரம் இறுதி ஆட்டம் ஆடி வென்றது அனைவரும் அறிந்ததே.
இன்று அதன் பரிசளிப்பு மற்றும் விருந்து உபசரிப்பு விழா நடைபெற்றது, இப்போட்டிகளை நடத்திய AUTO TRADERS மிக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில் போட்டியில் வெற்றிபெற்ற அணியினருக்கும் வெற்றியினை இழந்த அணியினருக்கும் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த அணியினருக்கும் பரிசளித்து கெளரவிக்கப்பட்டது.
முதல் இடம் பிடித்த ABCC A சுழற்க்கோப்பையும், 2000 திர்ஹம் ரொக்கப் பணமும் வழங்கப்பட்டது.
இரண்டாம் இடம் பிடித்த AUTO TRADERS அணி சுழற்க்கோப்பையும் ரொக்கமும் வழங்கப்பட்டது.
மூன்றாம் இடம் பிடித்த DFCC அணியும் சுழற்க்கோப்பையும் ரொக்கமும் வழங்கப்பட்டது.
சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டனர்.
அதிரை கிரிக்கெட் ரசிகர்கள் சார்பாக வாழ்த்தி மகிழ்கிறோம்.
-அதிரை தென்றல் ( IRFAN )
Congratulations
ReplyDelete