.

Pages

Friday, April 3, 2015

அமெரிக்கா கலிபோர்னியாவில் வரலாறு காணாத வறட்சி !

கலிபோர்னியாவில் வரலாறு காணாத தண்ணீர் வறட்சி நிலவி வருவதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திற்கு தேவையான தண்ணீர், பனிக்கட்டிகள் உருகுவதன் மூலமாக கிடைத்து வந்தது. ஆனால், தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக சுமாராக நிலவி வந்த பனிப்பொழிவால் தொடர் வறட்சி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த பிரச்சனையை சமாளிக்கும் விதமாக தண்ணீர் பயன்பாட்டை 25 சதவிகிதம் குறைக்க ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து ஆளுநர் ஜெர்ரி புரவுன் கூறுகையில், நாம் 5 அடி பனிக்குமேல் நிற்பதற்கு பதிலாக வெறும் தரை மீது நின்றுகொண்டிருக்கிறோம். இது மிகவும் ஆபத்தான அறிகுறி. கடுமையான பல சட்டங்கள் மூலம் இதை தடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இந்த புதிய அறிவிப்பின்படி, கோல்ப் மைதானங்கள், அலங்கார புல்வெளிகள், தொழில் பூங்கா, கல்லறைகள் போன்றவைகளுக்கு கொடுக்கப்பட்டு வந்த நீரின் அளவில் 25 சதவிதம் குறைக்கப்பட்டு உள்ளது.

இதை அமல்படுத்தாதவர்கள் மீது 10 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயத்திற்கு அளிக்கப்படும் நீரின் அளவு ஏற்கனவே கடுமையாக குறைக்கப்பட்டுள்ளதால் இந்த கட்டுப்பாடுகள் அவர்களுக்கு பொருந்தாது என கூறியுள்ளார்.
 

1 comment:

  1. அமெரிக்கா தன்னுடைய கட்டுப்பாடு இல்லாத பொருளாதார வளர்ச்சிக்கான விலையை கொடுக்க ஆரம்பித்திருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சுமத்தி உள்ளார்கள்.
    எப்பாடுபட்டாவது தமது நாடுகளை அமெரிக்கா போல மாற்ற துடிக்கும் ஆட்சியாளர்கள் இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டால் நன்றாக இருக்கும். இல்லையெனில், மீனினமே அழிந்தபின் தூண்டில் போட்ட கதைதான் மிஞ்சும்!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.