அதிரை கடலோரப்பகுதிகளில் வரிமட்டி சீசன் துவங்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நத்தை இனத்தை சேர்ந்த மட்டி இனமாகிய இவற்றை வரி மட்டி, வாழி மட்டி, வழுக்கு மட்டிகள் என பலவகைகள் உண்டு.
அதிரையின் கடற்கரையோர கிராமமாகிய எரிபுறக்கரை, கீழத்தோட்டம் பகுதிகளில் வசிக்கும் மீனவ பெண்கள் தினந்தோறும் காலை நேரங்களில் மட்டிகளை வாங்கி அதிரை சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர். ஒரு மரக்கா அளவு வரிமட்டி ₹ 50/- க்கு விற்கின்றனர்.
இதுகுறித்து சீசன் நேரத்தில் விற்பனை செய்துவரும் ஆண்டாலு நம்மிடம் கூறுகையில்...
'வரிமட்டி எங்கள் பகுதியில் அதிகளவில் பிடிபடுகின்றன. பலவித மருத்துவ குணம் கொண்டது. குறிப்பாக மூலச்சூட்டிற்கு ஏற்றது. வலை போட்டு இதை பிடிக்க முடியாது. சேற்றில் புதைந்து வாழும் தன்மை கொண்ட மட்டியை மீனவர்கள் அரிவலை கொண்டு குறைந்த ஆழம் உள்ள தண்ணீரில் மூழ்கிதான் பிடிக்கின்றனர். இதன் ஓடுகள் அழகு சாதன பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது. வரிமட்டியின் ஓடு கிலோ ₹ 50 வரை விற்கப்படுகிறது' என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.