.

Pages

Tuesday, April 7, 2015

முஸ்லிம்களின் மனக்குறைகளை தீர்க்க பிரதமர் மோடி உறுதி தன்னை சந்தித்த முஸ்லிம் மத தலைவர்களிடம் தெரிவித்தார்

முஸ்லிம்களின் மனக்குறைகளை தீர்க்க தனது முழு ஆதரவை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமருடன் சந்திப்பு
பிரதமர் நரேந்திர மோடியை நாடு முழுவதிலும் இருந்து வந்த முஸ்லிம் மத தலைவர்களும், மதகுருக்களும் நேற்று சந்தித்து பேசினர். இந்த பிரதிநிதிகள் குழுவில், சென்னை தாஜ்புரா ஷரீப்பைச் சேர்ந்த சையது அலி அக்பரும் இடம்பெற்றிருந்தார்.

அந்த குழுவினர், முஸ்லிம்களின் பல்வேறு பிரச்சினைகளை பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தனர். முஸ்லிம் வழிபாட்டுத் தலங்கள், மசூதிகள், மதரசாக்கள் ஆகியவற்றின் சொத்துகள் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க உதவுமாறு கேட்டுக்கொண்டனர்.

முஸ்லிம் இளைஞர்களுக்கு கல்வி துறையில் சிறப்பான வசதிகளை உருவாக்கித் தருமாறு வலியுறுத்தினர். தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருவது பற்றி கவலை தெரிவித்த அவர்கள், ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தியதுடன், இந்த சவாலை சமாளிக்க கூட்டு முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றும் கூறினர்.

பிரதமர் மோடி உறுதி
அவர்கள் கூறியதை பிரதமர் மோடி பொறுமையாக கேட்டார். முஸ்லிம் மதத்தின் பல்வேறு பிரிவினரின் மனக்குறைகளை களைய தனது முழு ஆதரவை அளிப்பதாக அவர் உறுதி அளித்தார். முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களின் சொத்து பிரச்சினைகளை கவனிப்பதாக உறுதி அளித்தார்.
முஸ்லிம் இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்து, தேச கட்டுமானத்தில் அவர்கள் முக்கிய பங்கு வகிக்க வாய்ப்பு அளிப்பதன் அவசியத்தை மோடி வலியுறுத்தினார். முஸ்லிம்களின் கல்வி தேவையை பூர்த்தி செய்வதாகவும் கூறினார்.

பிரதமர் மோடிக்கு ஆதரவு
அதைக்கேட்ட முஸ்லிம் மத தலைவர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். விரைவான பொருளாதார வளர்ச்சி, மத நல்லிணக்கம், அமைதி, தேச பாதுகாப்பு ஆகிய பிரதமர் மோடியின் நோக்கங்கள் நிறைவேற அவருக்கு முஸ்லிம் சமுதாயத்தின் முழு ஆதரவை அளிப்பதாக உறுதி அளித்தனர்.

இத்தகவல்கள், பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.


நன்றி.

3 comments:

  1. உலகமகா நடிகனிடம் வெட்கம்கெட்ட 4 பேர் தாடிகளுடன், முஸ்லீம்களுக்கு இல்லையில்லை கார்ப்பரேட்கள் தவிர்த்த இந்திய மக்களுக்கே மோடியால் தான் பாதிப்பே, ஆட்களை தீர்த்துவிட்டால் மனக்குறைகள் தானாக தீர்ந்துவிடும் என்ற நினைப்பில் வாக்குறுதி அளித்திருப்பான்.

    ReplyDelete
  2. ஒரு நெருடல் என் உள்ளத்தில் எப்போதும் இருக்கு. குஜராத்தில் நிறைய முஸ்லிம்கள் கொடூரமாக கொல்லப்பட்டது உண்மை .அதிகார வர்க்கம் அதுக்கு துணை நின்றதும் உண்மை .அவர்களை கொன்றது யார். இதுவரை யாரும் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்படவில்லை அப்படி என்றால் தன்னைதானே குத்திக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்களா ?? மோடி இதற்கு பதில் சொல்ல வேண்டிய காலம் வரும்.

    சிறுபான்மையர்களுக்கு ஆதரவு மோடி தெரிவித்தாலும் சங்கபரிவார் அமைப்புகளால் தொடுக்கப் பட்ட தாக்குதலை இன்னமும் நிறுத்தவில்லை, இனியாவது அவர்களை எதிர்த்து அறிவிப்பு விடுவாரா?. இவரது தொலைநோக்கு திட்டங்கள் எல்லாம் தொலைவில் தான் இருக்கு, வாய்ச்சவடால் வீரர், பேசி பேசியே 5 ஆண்டு கழிந்து விடும்.

    சோனியாவுக்கு கிடைத்து ஒரு மன்மோகனைப் போல் RSS க்கு கிடைத்த ஒரு மோடி - இரண்டும் தலையாட்டும் பொம்மை.

    ReplyDelete

  3. சோனியாவுக்கு கிடைத்து ஒரு மன்மோகனைப் போல் RSS க்கு கிடைத்த ஒரு மோடி - இரண்டும் தலையாட்டும் பொம்மை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.