.

Pages

Friday, May 15, 2015

உண்ணாவிரத போராட்டத்தில் திரளாக பங்கேற்க அதிரை சேர்மன் அழைப்பு ! [ காணொளி ]

அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர பணியை தொடரவும், அதற்காக கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க வேண்டி பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர சேவைக்காக கூடுதல் மருத்துவரை நியமிப்பது என்றும், அதுவரையில் தற்காலிகமாக சுழற்சி முறையில் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களை கூடுதலாக பொறுப்பு வகிக்க அறிவுறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து சாலை மறியல் போராட்டம் விலக்கிகொள்ளப்பட்டது.

பேச்சுவார்த்தை முடிவின் படி, அதிரை அரசு மருத்துவமனையில் இதுவரையில் இரவு நேர மருத்துவர் நியமிக்கப்படாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதிரை பேரூராட்சி தலைவர் எஸ். ஹெச் அஸ்லம் தலைமையில், மருத்துவமனை வளாகத்தில் நாளை [ 16-05-2015 ] காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்துவது தொடர்பாக கடந்த அன்று அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் தலைமையில் அதிரை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் சிறப்பு கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் காலதாமதமாகி வரும் நியாமான கோரிக்கை வெற்றிபெற அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் நாளை நடைபெற உள்ள ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் அழைப்பு விடுத்துள்ளார்.

2 comments:

  1. ஆநரவு அளிப்பவர்களுக்கு ஒரு கேள்வி இவ்வளவு செய்கின்ற சேர்மன் அதே அரசு மருத்துவமனைக்குச் செல்லும் ஈச்ஆர் முதல் மருத்துவமனை வரை உள்ள சாலையை சரி செய்தாரா?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.