.

Pages

Sunday, May 24, 2015

மாவட்ட ஆட்சியர் நடத்திய ஆய்வில் 11 பள்ளி வாகனங்கள் தகுதி நீக்கம் !

தஞ்சாவூர் காவல் துறை ஆயுத படை மைதானத்தில் பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்விற்கு பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டு விபத்து இல்லா மாவட்டமாக உருவாக்கிட மாவட்ட நிர்வாகம் வட்ட அளவில் குழுக்களை அமைத்து சாலை பாதுகாப்பு குறித்து பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பொது மக்களிடமும், விழிப்புணர்வு ஏற்படுவதுடன் பள்ளி செல்லும் மாணவ மாணவியர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளி வாகனங்களை முறைப்படுத்திடவும், ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்திடவும், அனைத்து பள்ளி வாகனங்களை ஓரே இடத்தில் ஓரே நாளில் ஆய்வு செய்யப்படுகிறது.

இன்று தஞ்சாவ10ரில் ஆயுத படை மைதானத்திலும், பட்டுக்கோட்டையிலும் வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பள்ளி வாகனங்கள் ஓட்டும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் வாகனம் ஓட்டும் போது கைபேசியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் சரியாக உள்ளதா ? படிக்கட்டுகள், அவசர கால வழிகள், முதலுதவி பெட்டி, வேகப் கட்டுபாடு கருவி  மற்றும் இருக்கைகளின் உறுதி தன்மைää முதலுதவி பெட்டி, தீயணைப்புக் கருவிகள் உள்ளனவா என ஆய்வு செய்யப்படுகின்றது. குறைபாடுகள் இருந்தால், வாகனங்களின் அனுமதி ரத்து செய்யப்படும்.

தஞ்சாவ10ர் கோட்டத்தில் 236 வாகனங்களும், பட்டுக்கோட்டை கோட்டத்தில் 196 வாகனங்களும்  இன்று ஆய்வு செய்யப்பட்டு, தஞ்சாவூரில் 9 வாகனங்களும், பட்டுக்கோட்டையில் 2 வாகனங்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.  மேலும் 62 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளது.

இன்று ஆய்வுக்கு வர இயலாத வாகனங்கள் இரு தினங்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று பாதுகாப்பு அம்சங்கள் சரியாக உள்ளதை உறுதிசெய்ய வேண்டும்.

வாடகை வாகனங்களை பள்ளிகளுக்காக இயக்கினால், அது பற்றிய விபரங்களை வாகன பதிவு சான்றிதழ்களில் பதிய  வேண்டும்.  பொது மக்களும், விழிப்பாக இருந்து பள்ளி வாகனங்கள் குறித்து குறைபாடுகள் இருந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கோ மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கோ கொண்டு வர கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தலைவர் தெரிவித்தார்.

ஆய்வின் போது முதன்மைக் கல்வி அலுவலர் திரு.வே.தமிழரசு, வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.ராஜ்குமார், வாகன ஆய்வாளர்கள் திரு. விஜயகுமார், திரு.பிரபாகர் மற்றும் பள்ளி வானகங்களின் ஓட்டுநர்கள், உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.