.

Pages

Wednesday, May 27, 2015

அதிரை நியூஸ் கல்வி விருது மற்றும் சாதனையாளர்கள் விருது வழங்கும் நிகழ்ச்சியின் காணொளி தொகுப்பு !

நமதூர் பகுதி பள்ளிகளில் நடப்பாண்டில் SSLC, +2 அரசு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, முதல் நான்கு இடங்களை பெற்றுள்ள மாணவ மாணவிகள், கல்விச்சேவையில் சிறந்து விளங்கும் ஆசிரியை ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள், அதிரை சுற்றுவட்டார பகுதியின் பல்வேறு துறைகளை சார்ந்த சாதனையாளர்களை இனங்கண்டு அவர்களின் சேவைகளை ஊக்கப்படுத்தும் நோக்கில் 'அதிரை நியூஸ் கல்வி விருது - சாதனையாளர்கள் விருது 2015' என்ற பெயரில் விருது வழங்கும் விழா கடந்த [ 25-05-2015 ] அன்று அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.

பல்வேறு தரப்பினரின் ஏகோபித்த ஆதரவையும், வரவேற்பையும் பெற்ற இந்த நிகழ்ச்சியின் காணொளி தொகுப்பின் நான்கு பாகங்களையும் அதிரை நியூஸ் வாசகர்களுக்கு வழங்குகின்றோம்.


பகுதி - 2

பகுதி - 3

பகுதி 4

3 comments:

  1. மிக மிக செம்மையான முறையில், ஓரளவு எல்லா துறையில் உள்ளவர்களையும் அழைத்து வந்து, நம்மில் சாதனையாளர்களை தேர்ந்தெடுத்து பரிசளித்து ஊக்குவித்த விதம் பாராட்டிற்குரிய விஷயம். இது வருடந்தோறும் நடந்தால் நம் மாணவர்களிடையே இயற்கையாக நன்றாக படிக்க வேண்டும் என்ற உணர்வு வளரும் இவ்வளவு அருமையாக ஒரு நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்த அதிரை நியூஸ் மற்ற ஊடகவியலாளர்களை என் அழைக்க வில்லை? அல்லது அவர்கள் அழைப்பு கொடுக்கப்பட்டு வரவில்லையா?.

    அழைக்காதிருந்தால் காரணம் என்ன?. அதிரை எக்ஸ்பிரஸ், அதிரை பிறை போன்ற ஊடகங்களில் இந்த நிகழ்ச்சி பற்றிய ஒரு வரிகூட வராதது வியப்பளிக்கிறது. இங்கும் அரசியல் மூக்கை நுழைக்கிறதா? அல்லது காழ்புணர்ச்சியா? இதை பொதுவானவர்கள் எப்படி எடுத்துக்கொள்வது.

    ReplyDelete
    Replies
    1. முறைப்படி நமதூரில் இயங்கும் பிரபல அதிரை வலைத்தளங்கள் அனைத்திற்கும் முறையாக தகவல் அளிக்கப் பட்டு நேரிலும் சில நிர்வாகிகளிடம் இந்நிகழ்ச்சி குறித்து சொல்லப் பட்டது. பெரும்பாலும் எல்லோருமே இந்நிகழ்ழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

      ஆனால் இந்நிகழ்ச்சி குறித்த செய்தியை அவர்கள் பதியாமல் போனதற்கு நாம் காரணம் சொல்லமுடியாது. அது அவரவர்களின் விருப்பத்தை பொறுத்தது.

      அதிரை நியூஸை பொருத்தமட்டில் அனைத்து தளங்களையும் தனது சகோதர தளமாகத்தான் கருதுகிறது.

      Delete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.