இதையடுத்து தஞ்சை மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர். மீனாட்சி, பட்டுக்கோட்டை வாட்டாசியர் சேதுராமன், மருத்துவர் எட்வின் ஆகியோர் உண்ணாவிரத பந்தலுக்கு நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அரசின் சார்பில் கூடுதல் மருத்துவர் நியமனம் செய்யப்பட்டதாக உறுதியளித்ததை தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் இன்று இரவு முதல் மருத்துவர் இராமசாமி மருத்துவ பணியை தொடர இருக்கிறார். முதல் நாளான இன்று அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்ஹெச் அஸ்லம் மருத்துவரை நேரடியாக சந்தித்து தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். அப்போது ஜஹபர் அலி, அப்துல் ஹலீம், கமால் உசேன், முத்துசாமி, இஷாக், சைபுதீன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதுதொடர்பாக அதிரை பேரூராட்சி தலைவர் எஸ் ஹெச் அஸ்லம் நம்மிடம் கூறியதாவது:
'எங்களின் நியாமான கோரிக்கையை ஏற்று அதிரை அரசு மருத்துவமனையில் உடனடியாக இரவு நேர மருத்துவ சேவை ஆற்ற மருத்துவர் ஒருவரை பணியமர்த்திய மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர். மீனாட்சி, பட்டுக்கோட்டை வட்டாசியர் சேதுராமன், மருத்துவர் எட்வின் ஆகியோருக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றி. மேலும் கோரிக்கை வெற்றி பெற ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து ஜமாத் நிர்வாகிகள், கிராம பஞ்சாயத்தார்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு எனது நன்றி.
ஊர் பொதுமக்கள் அதிரை அரசு மருத்துவமனையில் இன்று இரவு முதல் செயல்படுத்தி வரும் இரவு நேர மருத்துவ சேவையை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஊர் பொதுமக்களின் வரவேற்பை பொறுத்தே இரவு நேர சேவை தொடர்ந்து வெற்றி பெற உதவியாக இருக்கும்' என்றார்.
Congratulations
ReplyDeleteஇதுதொடர்ந்துஇயங்குமாஇயங்கினால்சந்தோஷ்சம்
ReplyDeleteஇன்ஷா அல்லாஹ்
ReplyDeleteபாா்ப்போம் இந்த மருத்துவா் எவ்வளவு நாள் பணி செய்வாா் என
ஆனா ஊனான நன்றி அறிவிப்பு அடுத்த நாள் அரசு மருத்துவமைன சென்றால் மருத்துவா் இல்லை என புகாா்
ஒருவாரம் மருத்துவ சேவையில் மருத்துவா் இருந்த பிறகு நன்றி தொிவித்தால் இன்னும் சிறப்பு
இந்த மூன்றாவது நண்றி அறிவிப்பாவது நிரந்தரமா???
நமக்காக இரவு நேர அவசரகால தேவைக்கு மருத்துவர் இருந்து சேவைசெய்வதை பெறும் முயற்சியும் ஜனநாயக ரீதியான போராட்டத்தின்மூலமும் பெற்று தந்த சகோதர்
ReplyDeleteS H.அஸ்லம் அவர்களுக்கு நன்றி!
எடுத்த முயற்ச்சிக்கு முதற்கட்டமாக வெற்றிகண்டமைக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.!
ReplyDeleteஇரவு நேர மருத்துவ மனை இயங்குவது சிகிச்சைக்காக வரும் நோயாளி வருகை பொறுத்து இருக்குது, இரவு நேரத்தில் மருத்துவமனை இருக்கலாம் ஆனால் ஏழை மக்கள் வருவதற்கான குறைந்த பட்சம் ஆட்டோ வசதி உண்டா?, ஊரில் அதற்க்கான ஆட்டோ ஸ்டான்ட் இல்லாதது குறை தான். முதியோர், ஆண் துணை இல்லாத வீடும் உண்டு நண்பகதன்மையான் ஆட்டோ சர்வீஸ் வேண்டும் என்பது பெரும்பாலானோர் கோரிக்கையாக இருக்கு இதற்கும் ஒரு முடிவு எடுத்தால் கண்டிப்பாக ஒரு மருத்துவர் இருக்கும் இடத்தில் மேலும் இரண்டு மருத்துவர் தேவை என கோரிக்கை எழும். எடுத்த முயற்சி வீண்போகாது இல்லையேல் பிளாஸ்டிக் ஒழித்தது போல் ஆகி விடும்.
ReplyDeleteதிட்டங்களை எண்ணங்களாக வடிவமைத்து செயல்படுத்தி வரும் நமதூர் சேர்மன் அஸ்லம் அவர்களுக்கு ஆதரவு அளித்தால் பொது நலனில் நாம் வெற்றியடையலாம், வாழ்த்துக்கள் கோடி!
Congratulations...
ReplyDelete