.

Pages

Friday, May 22, 2015

அதிரையில் PFI நடத்திய மினி மராத்தான் ஓட்டப் போட்டி !

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா பட்டுக்கோட்டை டிவிசன் நடத்தும் மக்கள் சங்கமம் மாநாடு எதிர்வரும் மே 29,30 ஆகிய இருதினங்கள் புதுமனைத்தெருவில் அமைந்துள்ள சித்திக் பள்ளி வளாகத்தில் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் மக்கள் சங்கமம் மாநாட்ட்டின் ஒரு பகுதியாக இன்று (22-05-2015) மாலை 4 மணியளவில் அதிரை பேருந்து நிலையத்தில் மினி மாரத்தான் ஓட்ட போட்டி பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் டிவிசன் தலைவர் வழக்கரிஞர் நிஜாம் மற்றும் டிவிசன் செயலாளர் அஜ்மல் ஆகியோர் தலைமையில் நடைப்பெற்றது.

நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் ஹாஜா, எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் Z.முகம்மது இலியாஸ் மற்றும் கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் Z.முகம்மது தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தாஜுல் இஸ்லாம் சங்க துணைத் தலைவர் PMK தாஜூதீன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்று ஓட்டப் பந்தய வீரர்கள் ராஜாமடம் பாலம் வரை சென்று திரும்பினர். பந்தய இறுதியில் பழஞ்செட்டி தெருவை சேர்ந்த முத்துபாண்டி, அசாருதீன், பிரவீன்குமார் ஆகியோர் முறையே முதல், இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தை பெற்றனர். வெற்றி பெற்ற இவர்களுக்கு மக்கள் சங்கமம் மாநாட்டின் இறுதி நாள் நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது. வீரர்களுக்கு உதவியாக அதிரை பைத்துல்மால் ஆம்புலன்ஸ் வாகனம் உடன் சென்றது.

இன்று நடைபெற்ற மராத்தான் ஓட்டப்போட்டியில் நுற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.