நிகழ்ச்சிக்கு இக்பால் ஹாஜியார் தலைமை வகித்தார். சென்னை உயர்நிதி மன்ற மூத்த வழக்கறிஞர் A.J அப்துல் ரெஜாக், அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் M.S. ஷிஹாபுதீன், ஷம்சுல் இஸ்லாம் சங்க தலைவர் அபுல் ஹசன், அக்ரீ சேக்காதியர், ஆடிட்டர் ஜலீல், சம்சுல் இஸ்லாம் சங்க லண்டன் கிளை நிர்வாகி இம்தியாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற முதல் நான்கு இடங்களை பிடித்துள்ள மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. சிறந்த ஆம்புலன்ஸ் சேவைக்காக தமுமுக அதிரை கிளை மற்றும் உள்ளூர் இணையதள ஊடகங்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. மேலும் லண்டன் வாழ் சமூக ஆர்வலர் இம்தியாஸ் ஏற்பாட்டின் பேரில் சம்சுல் இஸ்லாம் சங்க லண்டன் கிளையின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முன்னதாக நிகழ்ச்சி குறித்து அறிமுகம் மற்றும் வரவேற்புரையை காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் M.A முஹம்மது அப்துல் காதர் நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மகபூப் அலி வாழ்த்துரை வழங்கினார்.
விழா முடிவில் ஷம்சுல் இஸ்லாம் சங்க லண்டன் கிளை தலைவர் அப்துல் குத்தூஸ் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், தக்வா பள்ளி டிரஸ்ட் தலைவர் அப்துல் சுக்கூர் உள்ளிட்ட மஹல்லாவாசிகள் பலர் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
விழா ஏற்பாடுகளை ஷம்சுல் இஸ்லாம் சங்க லண்டன் கிளை சார்பில் சமூக ஆர்வலர் இம்தியாஸ், 'மணிச்சுடர்' நிருபர் சாகுல் ஹமீது, ஹசன், ஜாஹிர் ஆகியோர் செய்து இருந்தனர்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteசம்சுல் இஸ்லாம் சங்கத்தின் லண்டன் கிளை விருது வழங்குகிறது. அருமையான நிகழ்ச்சி.
விருது எதுக்கு வழங்குகிறோம்?
சேவை, தன்மை, நேர்மை, உண்மை, போன்ற நிலைகளை வைத்துதான் வழங்கப்படுகிறது.
இந்தக் காலக் கட்டத்தில் விவாகரத்து அதிகமாக நடந்தேறி வருகின்ற வேளையில், யார் யாரெல்லாம் இதுவரை விவாகரத்து இல்லாமல் ஒரே கணவன் ஒரே மனைவியாக பிரியாமல் வாழ்ந்துவரும் தம்பதியர்களுக்கும் விருதுகள் வழங்கினால் நல்லது.
இதை சம்சுல் இஸ்லாம் சங்கம் சிந்திக்குமா.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. மு. முஹம்மது அலியார்.