அதிரையின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். இஸ்லாம் ஓர் அறிமுகம், இஸ்லாமிய இலக்கியச் சிந்தனை,மழைப்பாட்டு (உரை), Wisdom in the Dawn (English), இளமைப் பருவத்திலே (Wisdom in the Dawn என்ற நூலின் மொழிபெயர்ப்பு), ஆயிஷாவின் சிறுமிப் பாட்டு (சிறுவர் மரபுக் கவிதைகள்), அரும்புப் பாட்டு (பதிப்பில்), பெண்மணி மாலை (மரபுக் கவிதைகள்),ஒருமைப் பாட்டு (மரபுக் கவிதைகள்), இறையருட்கவிமணி மாலை (மரபுக் கவிதைகள்), அருமையான வாழ்வும் அமைதியான இறப்பும், ஏசுவை நேசித்தேன் பேறு பெற்ற பெண்மணிகள் பாகம் -1, பேறு பெற்ற பெண்மணிகள் பாகம் – 2,நபி வரலாறு, நம் பிள்ளைகளுக்கு, நபி வரலாறு (விரிவு), சல்மான் அல் ஃபாரிஸி ( மொழிபெயர்ப்பு ), அலீ பின் அபீதாலிபு,கப்பாப் இப்னுல் அறத்து ( மொழிபெயர்ப்பு ), அபூதர் அல்ஃகிஃபாரி. மிக்தாத் இப்னுல் அஸ்வத் (மொழிபெயர்ப்பு), இறைத்தூதர் முஹம்மத், வட்டியை ஒழிப்போம்! (மொழிபெயர்ப்பு), அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் (இலக்கியச் சோலை), தொழுகையாளிகளே! (மொழிபெயர்ப்பு - மூலம்: அரபி), மொட்டுகளே மலருங்கள்! , கவிதை – ஓர் இஸ்லாமியப் பார்வை, நல்ல தமிழ் எழுதுவோம்!, ஈமான் – இஸ்லாம் கவி மலர்கள் உள்ளிட்ட மொத்தம் 29 நூல்களை எழுதியுள்ளார்.
அதிரை சமுதாய நல மன்றம் – பத்தாம் ஆண்டு சிறப்பு மலர், ‘பிறை’ பத்திரிகை சார்பில் ‘அதிரை செக்கடிப் பள்ளி’ திறப்பு விழா மலர்,‘வேலூர் பாகியாத்துஸ் சாலிஹாத்’ நூற்றாண்டு விழா மலர், ‘சீறாப்புராணம்’ – நாச்சிகுளத்தார் வெளியீடு, அதிரை ஜீவரத்ன கவிராஜரின் ‘மழைப்பாட்டு’,. ‘அல்லாமா அப்துல் வஹ்ஹாப்’ நினைவு மலர், முத்துப்பேட்டை ‘அல் மஹா மலர்கள்’ ஆகியவற்றை தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் பல்வேறு தமிழ் இலக்கிய மாநாடுகளில் கலந்துகொண்டுள்ளார். மேலும் மரபுக்கவிதை பலவற்றையும் எழுதி வருவது, பல நூல்களுக்கு வாழ்த்துரை வழங்கி வருவது உள்ளிட்ட பணிகளுக்காக விருது வழங்கப்பட்டது. இந்த விருதை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் குணசீலன் வழங்கி கெளரவித்தார்.
உள்ளூர் மாணிக்கம் விலை போகாது என்பார்கள். அதுபோல நம் அதிரை அஹ்மத் அவர்களைப்பற்றி நமதூர் மக்கள் அவ்வளவாக தெரிந்ததில்லை. அவர்களும் அதை விரும்புபவர்கள் அல்ல. 1970-களில் KMC -ன் முதல்வராக இருந்த இறையருட்கவிமணி பேராசிரியர் கா. அப்துல் கபூர் அவர்களிடம் பயின்று, பிறை பத்திரிக்கையின் ஆசிரியர் மௌலானா அப்துல் வஹாப் சாஹிப் M A B Th அவர்களின் தொடர்பில் இருந்து, திரியெம் பிரிண்டர்சாரின் அன்றைய பங்குதாரர்களில் ஒருவரான மர்ஹூம் அப்துல் பத்தாஹ் பாகவி பரிந்துரையில் பாகியாதுஸ்ஸாலிஹாத்தில் பணியாற்றியதால் அவர்களின் மொழி மற்றும் மார்க்க கல்வியின் திறன் அவர்களின் படைப்புகளில் நன்கு வெளிப்படுகிறது.
ReplyDeleteகல்வியில் சிறந்து விளங்கும் மாணாக்கர்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களையும், தகடு தட்டுகளையும் பரிசாக வழங்காமல், இவர்களின் படைப்புகளை பரிசுப்பொருளாக வாங்கி கொடுத்து அவரக்ளிடையே இவர்களைப்போன்ற திறமையான படிப்பாளிகளை உருவாக்க கல்வி ஸ்தாபனங்கள் முன் வரவேண்டும்.
அதிரைஅஹமது அவர்களுக்குநல்வாழ்த்துக்கள்
ReplyDeleteஎங்கள் அருமை முதல்வர் அதிரை அஹமது காக்கா அவர்களுக்கு முத்துப் பேட்டை அல்மஹா அறக்கட்டளையின் பெண்கள் கல்லூரியின் நிர்வாகம், நிறுவனர் உதவி முதல்வர், அலுவலகப் பணியாளர்கள், மற்றும் மாணவிகள் சார்பாக அன்பான வாழ்த்துக்கள்.
ReplyDeleteஒரு மூத்த அறிஞர் பெருமகனை காலம் கடந்து அதிரை கவுரவப்படுத்தி இருக்கிறது. அதிரை நியூசுக்கு மிக்க நன்றி. தேர்வுக்குழுவின் உறுப்பினர் என்ற முறையில் மிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteஒரு மூத்த அறிஞர் பெருமகனை காலம் கடந்து அதிரை கவுரவப்படுத்தி இருக்கிறது. அதிரை நியூசுக்கு மிக்க நன்றி. தேர்வுக்குழுவின் உறுப்பினர் என்ற முறையில் மிக்க மகிழ்ச்சி.
ReplyDelete