.

Pages

Tuesday, May 26, 2015

TNTJ அதிரை கிளைக்கு இரத்ததான சேவை விருது !

அதிரை சுற்றுவட்டார பகுதியின் பல்வேறு துறைகளை சார்ந்த சாதனையாளர்களை இனங்கண்டு அவர்களின் சேவைகளை ஊக்கப்படுத்தும் நோக்கில் 'அதிரை நியூஸ் கல்வி விருது - சாதனையாளர்கள் விருது 2015' என்ற பெயரில் விருது வழங்கும் விழா நேற்று மாலை அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் – அதிரை கிளை சார்பில் அதிரையில் ஆண்டுதோறும் இரத்ததான முகாம்களை நடத்தி இரத்த கொடையாளர்களிடமிருந்து அதிக இரத்த யூனிட்களை சேகரித்து இரத்த வங்கியிடம் வழங்கி வரும் பணி மற்றும் அவசரமாக இரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இரத்த தானம் வழங்குவது. ஏழை நோயாளிகளுக்கு இரத்த வங்கியிடம் சலுகை கட்டணத்தில் இரத்தம் பெற்று கொடுப்பது உள்ளிட்ட சேவைக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருதை சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் D. மீனாட்சி அவர்கள் மூலம் வழங்க விழாவில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.