.

Pages

Saturday, May 23, 2015

சாதனை நிகழ்த்திய அதிரை மாணவியை மாவட்ட ஆட்சியர் நேரில் அழைத்து பாராட்டு !

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த மாதம் மார்ச் மாதம் 10ம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்றது. இன்று  மாணவ மாணவியர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் அதிரை காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் மொத்தம் 188 மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் புதுமனைத்தெருவை சேர்ந்த முஹம்மது தவ்பீக் மகள் M.T. பர்வின் சுல்தானா  497 / 500 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடத்தை பிடித்து சாதனை நிகழ்த்தினார். மாணவி M.T. பர்வின் சுல்தானை மாவட்ட ஆட்சியர் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்து நினைவு பரிசுகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியின் போது முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் வே.தமிழரசு, பட்டுக்கோட்டை கல்வி  மாவட்ட அலுவலர் திரு.ராஜசேகரன், காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சுராஜ், உதவி தலைமை ஆசிரியை, பள்ளி ஆசிரியைகள், மாணவியின் தகப்பனார் முஹம்மது தவ்பீக், மாணவியின் உறவினர்கள் உடனிருந்தனர்.

மேலும் மாநில அளவில் சாதனை நிகழ்த்திய மாணவிக்கு  முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் வே.தமிழரசு, பட்டுக்கோட்டை கல்வி  மாவட்ட அலுவலர் திரு.ராஜசேகரன், பள்ளி நிர்வாகம், தலைமை ஆசிரியை - ஆசிரியைகள், அலுவலர்கள், சக மாணவிகள், பெற்றோர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
 

2 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    இந்த நிகழுவு மூலம் ஒரு உத்வேகம் பிறக்கட்டும், வென்றவர்கள் மிகிழட்டும், வெற்றியை இழந்தவர்கள் மறுவருடம் வெற்றிபெற முயலட்டும்.

    வருடா வருடம் இன்னும் மேலாக மலர்ந்து மலரட்டும்.

    எல்லாவற்றிர்க்கும் மேலாக, நம் அனைவரையுய்ம் படைத்த வல்ல நாயனை நினைக்க மறக்க வேண்டாம்.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் நன்மழையில் மாண்புகள் உன்னிலே
    சூழ்ந்திடவே உள்ளம் சுகத்திலே - ஆழ்ந்தநீ
    பெண்மதியே பர்வின் பெறுவாய் அதிரையின்
    கண்மணியாய் கற்றிடுவோர் கண்டு

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.