அதே போல் முத்துப்பேட்டை பிரிலியண்ட் மெட்ரிக் பள்ளி மாணவி முஃபிதா பர்வீன் 498 மதிப்பெண் மதிப்பெண் பெற்று மாநிலத்தில் 2-ம் இடம் பிடித்துள்ளார். சாதனை படைத்த மாணவி முஃபிதா பர்வினுக்கு பள்ளியின் முதல்வர் சுசித்ரா, தாளாளர் முகம்மது யாகூப் ஆகியோர் இனிப்பு வழங்கி பாராட்டு தெரிவித்தனர். சாதனை படைத்த மாணவி முஃபிதா பர்வின் கூறுகையில்: பள்ளியின் ஆசிரியர்கள் எனக்கு நன்கு ஆதரவு அளித்து எனக்கு பாடம் கற்பித்து தந்தார்கள். அவர்களின் முழு முயற்சியே எனக்கு பெரும் வெற்றியை தேடி தந்தது. வருங்காலத்தில் டாக்டர் ஆகி மக்களுக்கு சேவை செய்வேன் என்றார்.
செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஇந்த நிகழுவு மூலம் ஒரு உத்வேகம் பிறக்கட்டும், வென்றவர்கள் மிகிழட்டும், வெற்றியை இழந்தவர்கள் மறுவருடம் வெற்றிபெற முயலட்டும்.
வருடா வருடம் இன்னும் மேலாக மலர்ந்து மலரட்டும்.
எல்லாவற்றிர்க்கும் மேலாக, நம் அனைவரையுய்ம் படைத்த வல்ல நாயனை நினைக்க மறக்க வேண்டாம்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.