.

Pages

Wednesday, May 27, 2015

குழந்தைகளை அரசு பள்ளிகளில் படிக்க வைக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் !

தஞ்சாவூர் மாவட்டம், நீலகிரி ஊராட்சி மானோஜிப்பட்டி ஊராட்சிய ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை முனைப்பு இயக்க மூலம் அனைத்து மாணவர்களையும் பள்ளியில் சேர்க்கும் திட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் தொடங்கி வைத்தார்.

புதிய மாணவர்களை பள்ளியில் சேர்க்கும் பணியினை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் பேசியதாவது:
மாணவர்கள் சேர்க்கை முகாம் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை  பொது மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காக இது போன்ற முகாம்கள் நடைபெறுகின்றது.  2015-16ம் கல்வியாண்டில் 510 வயது நிறைவு செய்த குழந்தைகள் 21 ஆயிரம் உள்ளனர்.  அவர்கள் அனைவரையும் பள்ளியில் சேர்க்கும் பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது.  எந்த ஒரு குழந்தையும் விடுபடாமல் அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்க வேண்டும். இதற்காக ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் முனைப்புடன் செயல்பட கேட்டுக் கொள்கிறேன்.

அரசு பள்ளிகளில் பல கோடி மதிப்பில் அனைத்து உதவிகளும் வழங்கப்படுகின்றது.  இவற்றை பயன்படுத்தி அனைத்து குழந்தைகளையும் படிக்க வைக்க வேண்டும். அரசுப் பள்ளி மாணவ மாணவியர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருகிறது. தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் சிறப்பாக பணியாற்றுவதால், தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகள் சாதனை புரிகின்றது.  பெற்றோர்களும், ஆசிரியர்களை சந்தித்து மாணவர்களின் கல்வித் தரத்தை கேட்டறியலாம். குறைகள் இருந்தால் உடனடியாக களைவதற்கும் வாய்ப்பு உள்ளது.  பெற்றோர்கள் தங்களை குழந்தைகளை கட்டாயம் படிக்க வைக்க வேண்டும்.  இன்று நடைபெறும் சேர்க்கை முகாம் ஒரு துவக்க புள்ளியாகும்.  இது தொடர்ந்து முகாம் நடைபெற்று தஞ்சாவூர் மாவட்டம் முழு கல்வியறிவு பெற்ற மாவட்டமாக பெறுவதற்கு அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சேர்க்கப்படும் அனைத்து மாணவர்களுக்கும் அரசின் நலத்திட்டங்கள் பள்ளி திறக்கும் நாளிலேயே வழங்கப்படும்.  இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் முனைவர் வே.தமிழரசு, அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர் திருமதி. சண்முகவடிவு, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் திரு. எஸ். கண்ணையன், மாவட்ட கல்வி அலுவலர் திரு.ரெங்கநாதன், பள்ளி தலைமையாசிரியர் திரு. அந்தோணி பிரான்சிஸ், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் திரு. அருள் சகாயகுமார் மற்றும் ஏராளமான பெற்றோர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.