.

Pages

Friday, May 22, 2015

நல்ல பேரை வாங்க வேணும் பிள்ளைகளே !

ஒரு வழியாய் பத்தாம் வகுப்பும், பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவும் வந்தாகி விட்டது. எதிர்பார்ப்பில் வெற்றி பெற்றோரும் உண்டு தோல்விடைந்தோரும் உண்டு. உழைப்பில் பலன் அடைந்தோரும் உண்டு, சிலர் உழைப்பு விழலுக்கு இறைத்த நீராய் போனதும் உண்டு. இனி நடந்ததை விட்டுவிட்டு நடப்பதில் கவனம் செலுத்த வேண்டும் இதில் பெற்றோருக்கும் சம்மந்தப்பட்ட பிள்ளைகளுக்கும் சமமாய் பங்கிருக்கிறது என்பதை மறக்கலாகாது.
             
பொதுவாக தமிழகத்தை பொறுத்தவரை அதிகப்படியான மார்க்கை பெண் பிள்ளைகளே தட்டிச்செல்கிறார்கள் இது நம் ஊரிலும் நடக்கிறது இதற்கு என்ன காரணம் பெண் பிள்ளைகள் வீட்டோடு இருப்பதனால் வேறு கவனம் சிதறாது. படிக்கிறார்கள் ஆண் பிள்ளைகளோ ஊர் சுற்றுவதிலும் செல்போனில் நேரத்தை செலவிடுவதிலும் காலத்தை போக்குகின்றனர். எதற்கெடுத்தாலும் போட்டியிடும் இக்காலத்தில் பெண்களை விட நாம் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று சபதம் செய்வதில் எந்த தவறும் இல்லை காரணம் உலக கல்வியின் வெற்றி சொகுசாய் அதிக சம்பாத்தியம் செய்வதற்காய் ஆகிவிட்டது.
       
நம் ஊரை பொறுத்தவரை பெண்கள் வேலைக்கு போவது கிடையாது, வேலைக்கு போவோரை பெருமை பாராட்டுவதும் இல்லை. மாற்றார் பெரும்பான்மை இருக்கும் இடத்தில் ஊழியம் செய்வது நம் பெண்களுக்கு ஏற்புடையதாய் இல்லை. ஆனால் ஆண்களுக்கு  உச்சத்தை எட்டிப்பிடிக்க ஏகப்பட்ட கமிட்மென்ட். அப்படி இருக்க எப்படியெல்லாம் கண்விழித்து படித்து இருக்க வேண்டும் நம் பெற்றோரின் கனவுகளை கனவுகலாக்கலாகுமோ  
           
அடுத்த பிரச்சனை. நன்றாய் படிப்போரை நல்ல கல்லூரியாய் பார்த்து படிக்க வைப்பதும். படிப்பு ஏறாத பிள்ளைகளை இனி படிப்பு வராது மதரசாவில் சேர்க்க வேண்டியதுதான் என்ற என்னம் பரவலாய் நம் மக்களிடம் இருந்து வருகிறாது?!! இது எதிர்கால சமுதாயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மார்க்க அறிஞர் என்று பட்டம் பெறுபவர் உலக கல்வியில் படிப்பே எராதவர் என்று ஒதுக்கப்பட்டவர் சரியான தேர்ந்தெடுப்பா?
         
ஒவ்வொரு சாமானியருக்கும் தம் வாழ்வில் பிரச்சனை,வியாபார சட்ட திட்டம் போன்றவற்றிற்கு மார்க்க சம்மந்தப்படுத்தி அறிவுரை சொல்பவர் உலக அறிவும் சிறப்பாய் இருப்பவர்தானே சரியான பொருத்தம் ஆனவர் ஆவார் ?
         
அதுபோல் நன்றாய் படிக்ககும் பெண் பிள்ளைகளையும் மேற்படிப்பு என்று காலத்தை செலவிடுவதைவிட நல்ல ஆலிம், ஹாபிழ் என்று உருவாக்க பெற்றோர்கள் முயற்சி செய்யுங்கள். படிப்பு ஏறாத பெண் பிள்ளைகளுக்கு வீட்டு வேலையை கற்றுக்கொடுங்கள். படித்த பெண், சமுதாயத்திற்கும் படிக்காத பெண் வீட்டிற்கும் பயன்படட்டும்  
       
சமுதாய ஆர்வலர்களாகிய  நாம்  அதிரையில் உள்ள சிப்பிக்குள் ஒழிந்திருக்கும் முத்துக்களை  கண்டுபிடித்து அவர்களுக்கு வருடா வருடம் பரிசுகளையும் பாராட்டுகளையும் வழங்கி ஊக்கப்படுத்த உதவுவோம். புதிய நல்ல சமுதாயம் உருவாக்குவோம் என்று பாடுபட உறுதி கொள்வோம்.

மு.செ.மு.சபீர் அஹமது

2 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    அருமையான ஆக்கம்.

    படித்துப் படிப்பா? அல்லது.
    பட்டுப் படிப்பா?

    நல்ல சிந்தனையான ஆணித்தரமான விளக்கமும், விளக்கி வைப்பதும் அருமை.

    சகோ சபீர் அவர்களே அடிக்கடி வந்துட்டு போங்க.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.

    ReplyDelete
  2. அவசியமானதொரு தலையங்கம்.அருமை வாழ்த்துக்கள்.

    இந்த பத்தும் வகுப்பு பரிட்சையில் வெற்றியடைந்தவர்கள் வீராப்பு கொள்ளாமல் இன்னும் சாதிக்க வேண்டுமென சபதம் எடுக்க வேண்டும்.

    தோல்வியை சந்தித்தவர்கள் மனம் துவண்டுவிடாமல் இதை சவாலாக நினைத்து வெற்றிபெருவதற்க்கான முயற்ச்சியில் தீவிரமாக படிக்கவேண்டும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.