.

Pages

Thursday, May 28, 2015

ஈசிஆர் சாலையில் சுற்றுலா வேன் - லாரி நேருக்கு நேர் மோதல்:4 பேர் பரிதாப பலி !

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள செந்தலைப்பட்டினம் என்ற இடத்தில் சுற்றுலா சென்று ஊர் திரும்பிக் கொண்டிருந்த வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே மூவரும், மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஒருவரும் உயிரிழந்தனர்.
     
நாகை மாவட்டம் பொறையாறு பகுதியை சேர்ந்த 14 பேர் கடந்த 25 ந்தேதி புறப்பட்டு ராமேஸ்வரம், திருச்செந்தூர், கன்னியாகுமரி பகுதிகளுக்கு சுற்றுலா சென்று விட்டு, கிழக்கு கடற்கரை சாலை வழியாக சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
   
வியாழன் அன்று அதிகாலை 2 மணியளவில்  பேராவூரணி தாலுகா செந்தலைவயல் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது, நாகப்பட்டினம் பகுதியிலிருந்து கட்டுமாவடி என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்த லாரி நேருக்கு நேர் மோதியது. இதில் வேன் முற்றிலுமாக உருக்குலைந்தது. இவ்விபத்தில் நடராஜன் என்பவரது மனைவி ஜோதி(வயது 80), சிவசாமி என்பவரது மனைவி விஜயா(வயது 60), சிவராஜ் ( வயது 4), ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தஞ்சை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் இளங்கோ (வயது 45) என்பவர் உயிரிழந்தார்.
   
சம்பவத்தில் காயமடைந்த சுற்றுலா வேன் டிரைவர் விஜயாலயன், ஆரிய பிரகாஷ், வசந்தகுமார், மகேஸ்வரி, வினிதா, ஞான அருள்செல்வி, பிரகன்யா, ராமகிருஷ்ணன் ஆகிய எட்டு பேரையும் காயங்களுடன், உள்ளூர் இளைஞர்கள் உதவியுடன் மீட்ட காவல்துறை, அருகில் உள்ள மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

காயமடைந்த லாரி டிரைவர் நாகை மாவட்டம் கோவில்பத்து பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் ( 24) நினைவிழந்த நிலையில் பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். லாரி டிரைவர் குடிபோதையில் இருந்ததால் விபத்து நடந்ததா அல்லது டிரைவர் உறங்கி விட்டதால் விபத்து நடந்ததா  என காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
 
 
 
 
  
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.