.

Pages

Saturday, May 30, 2015

மாவட்ட ஆட்சியர் வழங்கிய தமிழக அரசின் விலையில்லா மிக்ஸி, மின்விசிறி, கிரைண்டர் !

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி சட்ட மன்ற தொகுதிகளில் 12 கிராமங்களிலும் 2 பேரூராட்சிகளிலும் 13 ஆயிரத்து 539 குடும்பங்களுக்கு  விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் வழங்கினார்.

விழாவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கு.பரசுராமன், சட்ட மன்ற உறுப்பினர்கள் திரு.எம்.ரெங்கசாமி (தஞ்சாவூர்), திரு.எம்.ரெத்தினசாமி (திருவையாறு), ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருவையாறு சட்ட மன்ற தொகுதி அலமேலுபுரம், விஷ்ணம்பேட்டை, வரகூர், கோனேரிராஜபுரம், நடுக்காவேரி கிழக்கு, நடுக்காவேரி மேற்கு, ராயம்பேட்டை, ஒரத்தநாடு சட்ட மன்ற தொகுதி குலமங்களம், தோப்புவிடுதி, பட்டுக்கோட்டை சட்ட மன்ற தொகுதி, மதுக்கூர் பேரூராட்சி, அதிராம்பட்டிணம் பேரூராட்சி, பேராவூரணி சட்ட மன்ற தொகுதி காட்டாத்தி, ஒட்டங்காடு மற்றும் செங்கமலம் கிராமங்களில் 13 ஆயிரத்து 577 குடும்பங்களுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மின்விசிறிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.

விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகளை வழங்கி டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் பேசியதாவது:
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தமிழகத்தில் உள்ள 1 கோடியே 95 இலட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இது வரை 80 சதவிகிதம் வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 6 இலட்சத்து 40 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் விலையில்லா பொருட்கள் வழங்கப்படும்.   தஞ்சாவூர் மாவட்டத்தில் இது வரை 3 இலட்சத்து 62 ஆயிரத்து 444 குடும்பங்களுக்கு விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

ஏழை எளிய குடும்பங்களுக்கு விலையில்லா மிக்ஸி, மின்விசிறி, கிரைண்டர், விலையில்லா வெள்ளாடுகள், விலையில்லா கறவை பசுக்கள், திருமண உதவித் தொகை ரூ.50 ஆயிரம், பள்ளி மாணவ மாணவியர்களுக்கு 16 வகையான உபகரணங்கள், உதவித்தொகை, ஊக்கத்தொகை, விலையில்லா மிதிவண்டிகள், காலணிகள், சீருடைகள், கர்ப்பிணி பெண்களுக்கு 12 ஆயிரம் உதவித் தொகை என ஏழை எளிய மக்களின் சிரமங்களை போக்க பல்வேறு திட்டங்கள் தீட்டி செயல்படுத்தினாலும், ஏழை மக்களின் வறுமை போக்க ஒரே ஆயுதம் கல்வி ஒன்று தான்.  எனவே தான் பல்வேறு துறைகள் இருந்தாலும், கல்வி மட்டும் 26 ஆயிரம் கோடி மாண்புமிகு முதல்வர் அவர்கள் ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.

அனைவரும் கல்வி கற்று வேலை வாய்ப்பு பெற்று குடும்பத்தின் சிரமங்களை போக்கி 2023 ஆண்டு தமிழகம் கல்வியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக உயருவதற்கு மாண்புமிகு முதல்வர் அவர்கள் அரும்பாடுபட்டு வருகிறார்கள். அவர்கள் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் பெண்கள் அனைவரும் தங்களின் குழந்தைகள் கட்டாயம் படிக்க வைக்க வேண்டும்.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ஏழை குடும்பங்களை பொருளாதார ரீதியாக உயர்த்த வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.  அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறார்கள்.
   
ஆண்களை விட பெண்கள் அனைத்து துறைகளிலும் திறமையானவர்களாக சிறந்து விளங்குகிறார்கள்.  அதனால் தான் அனைத்து திட்டங்களும் பெண்களை மையமாக வைத்து செயல்படுத்தி வருகிறார்கள். திட்டங்களை பெறுகின்ற பொது மக்கள் அவற்றினை பலனை பெற்று  வாழ்க்கையில் நல்ல நிலையினை அடைய கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் பேசினார்.

விழாவில் மாவட்ட ஊராட்சித்தலைவர் திருமதி.அமுதாராணி ரவிச்சந்திரன், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் திரு.துரை.திருஞானம், மாவட்ட பால் கூட்டுறவு ஒன்றியத் தலைவர்  திரு.ஆர்.காந்தி, ஒன்றியக்குழு தலைவர் திருமதி.மணிமேகலை திருஞானசம்பந்தம் (பூதலூர்), திருமதி.மலர்கொடி தமிழரசன் (திருவையாறு), திரு.கோவிந்தராஜன் (ஒரத்தநாடு), திருமதி.ராமாமிர்தம் ராஜமாணிக்கம் (திருவோணம்), திரு.சாந்தி அசோக்குமார் (பேராவூரணி), திருமதி.சரோஜா மலையய்யன் (பட்டுக்கோட்டை), முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் திரு. எம்.ஜி.எம். சுப்பிரமணியன், ஒன்றியக்குழு தலைவர்கள் திரு.இளங்கோவன், திரு.நாகராஜன், திரு.எம்.ஆர்.முத்துகுமார், மாநில வேளாண்மை விதைச்சான்று உறுப்பினர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் திரு.குருசேவ், திரு.ராமன், திரு.ராஜா, திரு.சி.அருள்நம்பி, திரு.தவமணி மலையப்பன், மதுக்கூர் கூட்டுறவு பால்வளத் தலைவர் திரு.துரைசெந்தில், ஊராட்சி மன்ற தலைவர்கள் திரு.ராதாகிருஷ்ணன் (விஷ்ணம்பேட்டை), திரு.மணிகண்டன் (கோனரிராஜபுரம்), திரு.பாரதிதாசன் (நடுக்காவேரி), திரு.சி.சுகுமார் (ராயம்பேட்டை), திரு.சாமிக்கண்ணு (குலமங்களம்), திரு. ஆர்.மோகன் (வரகூர்), திரு.தர்மராஜ் (அலமேலுபுரம்பூண்டி), திருமதி.லெட்சுமி பகவத்சிங் (செங்கமலம்), திருமதி.ஜெயந்தி அசோக்குமார் (காட்டாத்தி), திருமதி.ராசு (ஒட்டங்காடு), பேரூராட்சி துணைத்தலைவர் திரு.ஆர்.ஜி.ஆனந்த் (மதுக்கூர்), திரு.பிச்சை (அதிராம்பட்டிணம்), கூட்டுறவு சங்கத் தலைவர்கள் திரு.சுப்பிரமணியன், திரு.கே.பி.சேகர், திரு.துரைமாணிக்கம், திரு.சண்முகம்,  உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான பொது மக்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.