.

Pages

Thursday, May 21, 2015

SSLC தேர்வில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை !

தமிழகமெங்கும் SSLC தேர்வின் முடிவு இன்று காலை வெளியானது. இந்த தேர்வில் அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் மொத்தம் 219 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் 84 சதவீத மதிப்பெண்கள் பெற்று பள்ளி சாதனை  நிகழ்த்தியுள்ளது. இவை சென்ற ஆண்டைவீட இந்த ஆண்டு கூடுதல் சதவிதத்தை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதில் பள்ளியளவில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள மாணவர்களின் விவரங்கள்:
முதல் இடம் :
பெயர் : M. இமாமுதீன்
த/பெ : முஹைதீன் சாஹிப் ( அதிரை மெய்சா )
பெற்ற மதிப்பெண்கள் : 477 / 500

இரண்டாம் இடம்
பெயர் : S. சூர்யா பிரகாஷ்
த/பெ : 
பெற்ற மதிப்பெண்கள் : 461 / 500

மூன்றாம் இடம் :
பெயர் : பெயர் : M. ஹரி பிரசாத்
த/பெ : 
பெற்ற மதிப்பெண்கள் : 458 / 500

10 comments:

  1. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. தங்களின் கடின உழைப்பால் வாகைசூடி ஊருக்கு கண்ணியம் சேர்த்த அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

    உங்கள் வெற்றிப்பயணம் தொடர அல்லாஹ் அருள் செய்வானாக!

    ReplyDelete
  3. பள்ளிக்கும் பெருமை, பெற்றோருக்கும் பெருமை சேர்த்து வெற்றி பெறுபவர்களுக்கு வாழ்த்துக்கள். வாய்ப்பிழந்தவர்கள் வருத்தப்படவேண்டியதில்லை. வாழ்க்கை பெரியது. தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள்.
    அதிரை மெய்சாவுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.

    ReplyDelete
  4. மாஷா அல்லாஹ்!

    நண்பன் மெய்சாவின் மகன் முதலிடம் என்பது மிகுந்த சந்தோஷத்தைத் தருகிறது.

    வாப்பா படித்த பள்ளியிலேயே மகன் முதலிடம்!!!

    மேலும் வெற்றிபெற்ற பிள்ளைகளுக்காகவும் துஆச்செய்வோமாக.

    ReplyDelete
  5. மேலும் சாதனைகள் புரிய என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. மப்ரூக் மெய்ஸா சகோ
    பாஸ்போர்ட் இல்லாமல் நமக்கான 3% இட ஒதுக்கீட்டை பயன்படுத்த முயற்சிக்கவும்

    ReplyDelete
  7. மிக்க மகிழ்ச்சி; அன்புக் கவிஞர் அதிரை மெய்சா அவர்களின் திருமகனார் எம் பள்ளியில் முதலிடம் பெற்றதை அறிந்ததும் கீழ்க்காணும் திருக்குறள் நினைவில் வந்தது; அக்குறளில் சொல்லிய வண்ணம் சாதனையால் தந்தையின் உள்ளத்தை மகிழ்வித்த மகனார் இமாமுதீன் இனிவரும் தேர்வுகளிலும் முதலிடம் பெற உளம்நிறைவான வாழ்த்துகள்!

    மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
    என்நோற்றான் கொல்எனும் சொல்.

    ReplyDelete
  8. இமாமுதீன், சூரியா பிரகாஷ், ஹரி பிரசாத் இவர்களின் பிரகாசத்தில் பள்ளிப் பிரகாசிக்கின்றது .வாழ்த்துக்கள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.