நிகழ்ச்சிக்கு சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஹாஜி A.J. அப்துல் ரஜாக் தலைமை வகித்தார். அதிரை நியூஸ் நிர்வாகி மரைக்கா இத்ரீஸ் அஹமது முன்னிலை வகித்தார்.
சிறுவன் முஹம்மது ஃபாதில் கிராத் ஓதி நிகழ்ச்சி துவங்கியது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் துணை முதல்வர் முனைவர் பிஎம் மன்சூர் 'சிகரம் தாண்டுவோம்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
நமதூர் பகுதி பள்ளிகளில் நடப்பாண்டில் SSLC, +2 அரசு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, முதல் நான்கு இடங்களை பெற்றுள்ள மாணவ மாணவிகள், கல்விச்சேவையில் சிறந்து விளங்கும் ஆசிரியை ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள், பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட மாவட்ட கல்வி அலுவலர் முனைவர் கோ. ராஜசேகரன், மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் D. மீனாட்சி, காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் முனைவர் ஏ ஜலால், துணை முதல்வர் முனைவர் உதுமான் முகைதீன், அண்ணா பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரி புல முதல்வர் முனைவர் இளங்கோவன், மாவட்ட துணை இயக்குனர் ( தொழுநோய் பொறுப்பு ) டாக்டர் குணசீலன் ஆகியோர் விருதுகள் வழங்கி கெளரவித்தனர்.
முன்னதாக அதிரை நியூஸ் ஆலோசகர் இப்ராஹீம் அன்சாரி வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சி குறித்த அறிமுக உரையை காதிர் முகைதீன் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர் ஆற்றினார்.
நிகழ்ச்சிகள் அனைத்தையும் காதிர் முகைதீன் கல்லூரியின் தமிழ் பேராசிரியர் செய்யது அஹமது கபீர் இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியில் நமதூர் பகுதியின் ஏழை மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி பயில்வதற்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. அதேபோல் நமதூர் ஒவ்வொரு பள்ளிகளில் நடப்பாண்டில் SSLC, +2 அரசு பொதுத்தேர்வுகளில் ஆங்கிலப் பாடப்பிரிவுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழா முடிவில் அபுல் ஹசன் சாதலி நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யபட்டிருந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை அதிரை நியூஸ் கல்வி விருது குழுவினர் செய்து இருந்தனர்.
Masha Allah
ReplyDeleteவாழ்த்துக்கள் ...
ReplyDeleteவரும் காலங்களில் ..தமிழகமே போற்றும் விருதாக அமைய வாழ்த்துகிறேன் .
விருது பெற்றவர்கள் பெயரையும் ..விவரத்தையும் பதிந்து இருக்கலாமே
அதிரை நியூஸ் தொடங்கப்பட்டு தனி ஆளுமையுடன் பல்வேறு வரவேற்புகளை பெற்று வருகின்றது.
ReplyDeleteமேலும் சமூகத்திற்கு எந்த செய்தி முக்கியம் எதனை வெளியிடலாம் என்பது மட்டுமல்லாமல் ஊரில் நடக்கும் அனைத்து சம்பவங்களையும் அதன் உண்மை தன்மையுடன் உடனுக்குடன் பதிந்து வருகிறமை பாராட்டுகுரியது.
இந்த நிலையில் அதிரை நியூஸ் கல்வி விருது மற்றும் சாதனையாளர்கள் விருது வழங்கி கவுரவித்துள்ளமை அதிரை நியூசின் எழுச்சியில் ஒரு மைல்கல்
முக்கியமான நிகழ்வுகளை ..காணொளியாக காணவும் ஆசையாக உள்ளது
ReplyDeleteஇந்த நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற பாடுபட்ட அனைவர்களுக்கும் ஒத்துழைப்பு தந்து பங்கேற்று சிறப்பித்த. பொதுமக்கள் . அதிரை நியூஸ் வாசகர்கள் அனைவர்களுக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் தம்பி நிஜாம்
ReplyDeleteஇன்று (25-05-15) மாலை நமதூர் சாரா திருமண மண்டபத்தில் அதிரை நியூஸ் சார்பாக நடாத்தப்பட்ட கல்வி விருது மற்றும் சாதனையாளர்கள் விருது 2015 வழங்கும் விழா மிகச்சிறப்பாக என்னுடைய பார்வையில் அது ஒரு மதநல்லிணக்க மாநாடு போல் நடந்து முடிந்தது. இது போல் அடிக்கடி பல அமைப்புகளால் நடத்தப்பட வேண்டும் என்பதே என் அவா. ஒரு தனி வலைதளம் இப்படி பொருளாதாரத்தை அதிகம் செலவு செய்து நடத்தி இருப்பது ஆச்சர்யமளித்தது.
ReplyDeleteஇன்று (25-05-15) மாலை நமதூர் சாரா திருமண மண்டபத்தில் அதிரை நியூஸ் சார்பாக நடாத்தப்பட்ட கல்வி விருது மற்றும் சாதனையாளர்கள் விருது 2015 வழங்கும் விழா மிகச்சிறப்பாக என்னுடைய பார்வையில் அது ஒரு மதநல்லிணக்க மாநாடு போல் நடந்து முடிந்தது. இது போல் அடிக்கடி பல அமைப்புகளால் நடத்தப்பட வேண்டும் என்பதே என் அவா. ஒரு தனி வலைதளம் இப்படி பொருளாதாரத்தை அதிகம் செலவு செய்து நடத்தி இருப்பது ஆச்சர்யமளித்தது.
ReplyDeleteதன்னார்வம் மிக்கத் தனித்தன்மைச் சேக்கனா
ReplyDeleteஉன்னார்வம் மெய்சிலிர்ப்பு ஊட்டியதே - என்னே !
உந்தனின் இம்முயற்சி ஊரிலே உற்சாகம்
பந்தமாய் தூண்டியதே பண்ணு.
இது ஆரம்பம்தான் இது வருடாவருடம் தொடரும் ஆஸ்காரை கமல்ஹாசன் முண்னோக்குவதுபோல் இனிவரும் காலங்களில் மானவரும் சாதனையாளர்களும் அதிரை நியூஸ் விரூதை பெற ஆவள் கோள்வார்கள்
ReplyDeleteMasha Allah !!! ......Every thing was fine...... But some of us destroyed one of the pillars of Islam.....The organisers must ask forgiveness from Allah (SWT)........Insha Allah next year arrange the time so that none of us miss the salah......Jazakallah.....
ReplyDeleteMasha Allah !!! ......Every thing was fine...... But some of us destroyed one of the pillars of Islam.....The organisers must ask forgiveness from Allah (SWT)........Insha Allah next year arrange the time so that none of us miss the salah......Jazakallah.....
ReplyDelete