இந்நிகழ்ச்சிக்கு வானலை வளர்தமிழ் ஆசிரியரும் நிர்வாகியுமான காவேரிமைந்தன் அவர்கள் தலைமை தாங்கினார்.மூத்த பத்திரிக்கையாளர் முதுவை ஹிதாயத்துல்லா அவர்கள் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சிக்கு மலேசிய வாழ் தமிழரும் தமிழ் மேல் மிகுந்த பற்று கொண்டவரும், தமிழை இலகுவாக கற்றுக் கொள்ளும் வகையில் மென்பொருளை தயாரித்துக் கொண்டிருப்பவரும், அரபி மொழியை இலகுவாக பயில கணினி மூலம் பயிற்று கொடுப்பவருமான நசிருல்லாகான் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழ் மொழியை இலகுவாக பயில்வது குறித்தும் தமிழ் எழுத்துக்களின் புதுவடிவம் குறித்தும்,தமிழ் எழுத்துக்களின் உச்சரிப்பில் உள்ள நிறைகுறைகள் குறித்தும் சிறப்புரையாற்றி பல பயனுள்ள விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்ச்சியை சிறப்பிக்கும் வண்ணம் ''புரட்சியின் பூபாளம்'' என்ற தலைப்பில் கவிதாயினிகள் அஞ்சுகம்,நர்கிஸ்,நாகி,சுவேதா,ரமா, கவிஞர்கள் குறிஞ்சிதாசன்,தஞ்சாவூரான், ஜெயராமன்,சசிகுமார்,காவேரிமைந்தன், ஜியாவுதீன் இவர்களுடன் அதிரையைச் சேர்ந்த கவிஞர்கள் கவியன்பன் அப்துல் கலாம், அதிரை மெய்சா மற்றும் பல கவிஞர்கள் கலந்துகொண்டு தமது தரப்புக் கவிதைகளை சிறப்புடன் வாசித்தனர்
இந்நிகழ்ச்சியின் முடிவில் வானலை வளர்தமிழ் பொறுப்பாசிரியர் ஜியாவுதீன் நன்றி கூற நிகழ்ச்சி இனிதாய் முடிவுற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தகவல் மற்றும் புகைப் படம்
மூன் டி.வி. ஹிதாயத்துல்லா
மிக்க நன்றி அதிரை ப்நியூஸ் நிர்வாகத்திற்கு விரைவாகவும் விரிவாகவும் நிகழ்ச்சியின் சிறப்புகளைப் பதிந்து பகிர்ந்தமைக்கு மீண்டும் உளம் நிறைவான நன்றிகள்; இவ்விணைப்பில் என் பாடலைக் கேட்கலாம்.
ReplyDeletehttps://www.youtube.com/watch?v=dBTkCI5wrGo&index=1&list=PLax_3LFe4KULLecVkxjhP750WOdoKM1Mg