.

Pages

Tuesday, May 26, 2015

தலைமை ஆசிரியர் மஹபூப் அலிக்கு 'நல்லாசிரியர்' விருது !

அதிரை சுற்றுவட்டார பகுதியின் பல்வேறு துறைகளை சார்ந்த சாதனையாளர்களை இனங்கண்டு அவர்களின் பணிகளை ஊக்கப்படுத்தும் நோக்கில் 'அதிரை நியூஸ் கல்வி விருது - சாதனையாளர்கள் விருது 2015' என்ற பெயரில் விருது வழங்கும் விழா நேற்று மாலை அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.

பள்ளியை மாவட்ட அளவில் விளையாட்டு மற்றும் கல்வியில் முன்னேற்ற பாதையில் கொண்டு சென்றது. அரசு பொதுத்தேர்வில் வேதியியல் பாடப்பிரிவில் 100 சதவீத தேர்ச்சி, +2, SSLC அரசு பொதுத்தேர்வின் போது அரசு உதவிபெரும் பள்ளிகளுக்கு கருத்தாளராக நியமனம். மாணவர்களுக்கு அதிகளவில் கல்வி உதவித்தொகை பெற்றுக்கொடுத்தது. பெற்றோர் – ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடத்தி நிறை – குறைகளை கேட்டறிதல்.
உள்ளிட்ட பணிகளுக்காக காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் A. மகபூப் அலி M.Sc., M.Ed., M.Phil.,
அவர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. இவற்றை அண்ணா பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரி புல முதல்வர் முனைவர் இளங்கோவன் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர் A.மகபூப் அலி அவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

9 comments:

  1. பொருத்தமான தேர்வு. அன்பும் அடக்கமும். பண்பும். பரிவும் மென்மையான அணுகுமுறையும். மாணாக்களை தட்டிக்கொடுத்து உற்ச்சாகப்படுத்தி மேலும் அவர்கள் கல்வியில் தொய்வின்றி நாட்டம் கொள்ள. நல்லுபதேசம் வழங்கும் உங்கள் செயல்கள் மெச்சும்படி உள்ளது.

    எனவே உங்களை பாராட்டி வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. கண்கள் பனித்தன! தந்தையின் நினைவலைகள் தானே எழுந்தன.
    அன்பின் தம்பி! அகமகிழ்கிறேன். தூக்கி வளர்த்த பாசம் - அதற்கு நீ எங்களுக்குத் தந்த பரிசு ' இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல் .

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. Assalamu Alaikkum

    My heartfelt congratulations for my teacher receiving award. From the beginning of his career as my teacher(+1, +2), he has been doing great. Recognizing and rewarding such a personality is highly appreciated.

    And I congratulate all brothers and sisters awarded for their best performance in education and achievements.

    Jazakkallah khair,

    B. Ahamed Ameen from Dubai.

    ReplyDelete
  5. வெறும் விருதுகளால் உயர்வு வருவதில்லை. இவருக்கு மாணவர்களும் ஊர் மக்களும் தரும் சிறப்பே விருதை விட உயர்ந்தது. இவரால் பள்ளி பெருமையடைந்ததா அல்லது பள்ளியால் இவர் பெருமையடைந்தாரா என்று பார்த்தால் பள்ளிக்கும் இவருக்கும் பெருமை தான் ஆம் ,முன்னால் மாணவர் இந்நாள் தலைமையாசிரியர் மகபூப் அலி அவர்கள்.

    அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் கூட தன் பிள்ளை அதிகமாக மதிப்பெண் வாங்க வேண்டுமென்று மெட்ரிக் பள்ளிகளை படையடுத்துக் கொண்ட்ரிருக்கும் போது தன் மாணவர்களை அதிக மதிப்பெண்களை வாங்கச் செய்து தன் பள்ளியின் தரத்தை உயர்த்தியுள்ளார், அவருக்கு பக்க பலனாக இருக்கும் ஆசிரியர் பெருமக்களுக்கும், அவரது சமூக தொண்டுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. நல்லாசிரியருக்கு பொருத்தமான தேர்வு..

    ReplyDelete
  7. அஸ்ஸலாமுஅலைக்கும்(வராஹ்....)
    என்னை நல்லாசிரியராக தேர்வு செய்த அதிரை நியூஸ் குழு, நிஜாம் சேக்கனா, நேரில் வாழ்த்துக்கள் கூறிய BROTHER IBRAHIM ANSARI,ASSAN MOHIDEEN(JEEDHA) உறவினர்கள்,நண்பர்கள்,மரைக்கா இத்ரீஸ்,சுஹைப், PHONE மூலமாக வாழ்த்துக்கள் கூறிய ஜமால்காக்கா(USA- கண்டசாலா). CROWN THASTHAKIR ( USA-என்னா பேச்சு பேசுறார் நல்லவேலை ஸ்கூலை விட்டு போய்விட்டார் . FACE BOOK இல்.வாழ்த்துக்கள் தெரிவித்த நண்பர்கள். AHAMED AMEEN DUBAI(போன்) இந்த பதிவினை கண்டு என்னை நினைவுக்கு கொண்டுவந்த என் அன்பு மாணவர்கள், இப்படி ஒரு சந்தர்பத்தை எனக்கு வழங்கிய M.K.N குடும்பத்தார்கள்,JUSTICE K.SAMPATH ADMINISTRATOR M.K.N TRUST, என்னோடு பணிபுரியும் ஆசிரியர்கள். இங்கு பதிவுகள் செய்துள்ள MY BROTHER, MAISA(ADIRAI NEWS),AHAMED AMEEN, BROTHER MASTHAN GANI.ABDUL WAHAB, கவிஞர் விருது பெற்ற BROTHER SABEER ,மற்றும் அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
    மனிதனை கண்ணியப்படுத்தும் சக்தி அல்லாஹ் ஒருவனிடம் மட்டுமே உள்ளது. புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே .
    .மாணவர்களின் மனதில் இடம்பிடித்த ஆசிரியரே நம்மில் நல்லாசிரியர் .
    JAZAKALLAHU KHAIRAN

    ReplyDelete
  8. நல்லாசிரியர்விருதுபெற்றமைத்துனர்மஹபூப்அலிஸாருக்கு ஸலாமும்வாழ்த்துக்களும்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.