.

Pages

Friday, May 29, 2015

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வில் அதிரை மாணவி சாதனை !

மாணவியின் தகப்பனார் பதுருதீன்
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 10-ம் வகுப்பு தேர்வை நாடு முழுவதும் இந்த ஆண்டு 13 லட்சத்து 73 ஆயிரத்து 853 மாணவ மாணவியார்கள் எழுதினர்.

இதில் அதிரை ஆலடித்தெருவை சேர்ந்த டால்பின் ஏர் சர்வீஸ் உரிமையாளர் பதுருதீன் அவர்களின் மகள் பாத்திமா பஹ்மிதா அவர்கள் நடப்பாண்டில் திருச்சி சமது சீனியர் செகண்டரி பள்ளியில் பத்தாம் வகுப்பு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வு எழுதினார். இதில் பள்ளியளவிலும், ஊரளவிலும் 10 புள்ளிகள் பெற்று சாதனை புரிந்துள்ளார். இவர் அனைத்து பாடங்களிலும் A கிரேடு பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

சாதனை நிகழ்த்திய மாணவியை பள்ளி நிர்வாகம், தலைமை ஆசிரியர், ஆசிரியைகள், பெற்றோர், உறவினர்கள், சக மாணவிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

2 comments:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.