.

Pages

Thursday, May 28, 2015

பெற்ற குழந்தையை நாயைப் போல் நடத்திய தாய் !

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த தாய் ஒருவர் தனது குழந்தையை கொடுமைப்படுத்துவது போன்ற புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த தாய் ஒருவர் தனது குழந்தைக்கு ஆடை ஏதும் அணிவிக்காமல் கழுத்தில் கையிற்றை கற்றி நாயைப்போல் தட்டில் உணவு சாப்பிடுவது போன்ற புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தார்.

இந்நிலையில் அயர்லாந்தை சேர்ந்த சமூக சேவகியான லூர்லீன் என்பவர் இதைபார்த்து அதிர்ச்சி அடைந்தார். பெற்ற மகனை நாயை விட கேவலமாக நடத்திய தாய்க்கு தண்டனை வாங்கிதர வேண்டும் என எண்ணி அந்த புகைப்படத்தை தனது முகப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்தவர்கள் அந்த தாய்க்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் போலீசாரிடம் சரணைந்தார்.

இது பற்றி லூர்லீன் கூறுகையில், அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பார்த்ததும் எனது இரத்தம் சூடேறிவிட்டது. என்னால் அதை சகித்துகொள்ள முடியவில்லை. எனவே அந்த தாய்க்கு தக்க தண்டனை வாங்கி கொடுக்க விரும்பினேன் என்று கூறினார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட குழந்தை பத்திரமாக காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

1 comment:

  1. நாய் தின்கிற அந்த நாட்டிலே இதெல்லாம் சகஜமப்பா....ஒரு காலத்தில் பிலிப்பைன்ஸ் நாடு ஒரு இஸ்லாமிய நாடாகவே இருந்தது அதன் தலைநகர் இன்று மணிலா அமானில்லாஹ் என்பதன் சுருக்கமே இன்று மணிலா ஆனது ...அந்த நாட்டு மக்களுக்கு அல்லாஹ் மீண்டும் ஹிதாயத்தை கொடுக்க அனைவரும் துஆ செய்யுவோம் ..ஆமீன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.