.

Pages

Tuesday, May 26, 2015

அதிரை தமுமுகவிற்கு அவசரகால மருத்துவ சேவை விருது !

அதிரை சுற்றுவட்டார பகுதியின் பல்வேறு துறைகளை சார்ந்த சாதனையாளர்களை இனங்கண்டு அவர்களின் சேவைகளை ஊக்கப்படுத்தும் நோக்கில் 'அதிரை நியூஸ் கல்வி விருது - சாதனையாளர்கள் விருது 2015' என்ற பெயரில் விருது வழங்கும் விழா நேற்று மாலை அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் – அதிரை நகரம் சார்பில் பராமரிக்கப்பட்டு வருகின்ற ஆம்புலன்ஸ் மூலம் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்படும் திடீர் வாகன விபத்துகளில் சிக்கி உயிருக்கு போராடி வருபவர்களை சாதி மத பேதமில்லாமல் சம்பவ இடத்திலிருந்து பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பணி, இறந்த உடல்களை பிரத பரிசோதனைக்கு பிறகு உரியவரிடம் கொண்டு சேர்த்தல், அவசரகால மருத்துவ சிகிச்சைக்காக நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்தல் உள்ளிட்ட சேவைக்காக அவசரகால மருத்துவ சேவை விருது வழங்கப்படுகிறது. இந்த விருதை மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் D. மீனாட்சி வழங்கி கெளரவித்தார். இவற்றை தமுமுக அதிரை நகர துணைச் செயலாளர் தமீம் பெற்றுக்கொண்டார்.

1 comment:

  1. உயிரின் சிறப்பு உயர்வில் இருக்கிறது அதே போல் ஆம்புலன்ஸ் சேவையில் த மு மு க வை மிஞ்ச வேறேதும் இல்லை, தமுமுக அதிரை நகர துணைச் செயலாளர் தமீம் அவர்களுக்கு கைத்தட்டுகளும் பாராட்டுகளும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.